Menu
Your Cart

குழந்தைகளின் நூறு மொழிகள்

குழந்தைகளின் நூறு மொழிகள்
-5 %
குழந்தைகளின் நூறு மொழிகள்
ச.மாடசாமி (ஆசிரியர்)
₹95
₹100
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
‘இனியொரு விதி செய்வோம்’ என்ற பாரதி வரியை வைத்து, கல்லூரி நாட்களில் (முதுகலை, தமிழ்) விவாதித்தது நினைவுக்கு வருகிறது. விவாதத்துக்கு எப்போதும் உயிரூட்டும் ஆருயிர் நண்பர் ஷாஜஹான் கனி, ‘நாணமும் அச்சமும் நாய்கட்கு வேண்டுமாம்! என்றுரைத்து சமூக, பண்பாட்டு விதிகளை உடைத்த பாரதியே, தானும் ஒரு விதி செய்யத்தானே விரும்புகிறார்’ என்று வேடிக்கையாகச் சொன்னதும் நினைவுக்கு வருகிறது. உண்மைதான்! விதிகளை உடைக்க நினைப்போர் ஒன்று சேர்ந்து புதுப்புது விதிகளை உருவாக்கிக் கொள்வதைக் காலம் பூராவும் பார்த்துவிட்டேன். ஆசிரியராகிய நான், பெரும்பாலும் விதிகளின் உலகத்திலேயே வாழ்ந்துவிட்டேன். "கல்லூரி முதல்வர் நூலகம் வந்தபோது, எழுந்து நின்று மரியாதை செய்யாமல், உட்கார்ந்தபடி புத்தகத்தை வாசித்துக் கொண்டிருந்தது ஏன்? ‘என்பது பணியில் சேர்ந்த புதிதில் நான் வாங்கிய மெமோ! விதிகளுக்கு மாற்று இன்னொரு விதியல்ல - விதிகளுக்கு மாற்று உரையாடல் என எனக்கு உணர்த்தியது அறிவொளி. தகவல்கள் அல்ல - மனித உறவுகளே உரையாடலின் முதல் தேவை என்பதையும் அறிவொளி எனக்குப் புரிய வைத்தது. வகுப்பறை, அறிவொளி உரையாடல்கள் சில, ‘ஆளுக்கொரு கிணறு’ என்ற பெயரில் 2010இல் நூலாக வந்தது. இரண்டு பதிப்புகளுக்குப் பின், உரையாடலைத் தொடர்ந்து கொண்டுபோக அவகாசம் வாய்க்கவில்லை. இன்று - இன்னும் சில கட்டுரைகளைச் சேர்த்து பாரதி புத்தகாலயம் ‘குழந்தைகளின் நூறு மொழிகள்’ என்ற தலைப்பில் நூலைப் புதுப்பித்திருக்கிறது. உரையாடல் தொடர்கிறது... - ச. மாடசாமி
Book Details
Book Title குழந்தைகளின் நூறு மொழிகள் (Kuzhanthaigalin Nooru Mozhigal)
Author ச.மாடசாமி (Sa.Maatasaami)
Publisher பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam)
Pages 96
Year 2017

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

தமிழர் திருமணம் அன்று முதல்... இன்று வரைமேற்கத்திய கோட்டும், விஸ்கியும் கலந்த அளவுக்கு துணைவர்களை தேர்ந்தெடுக்கும் முறையில் திருமணத்தை தனிப்பட்ட சொந்தச் சடங்காக எளிய விருந்துடன் நடத்தும் முறையில் மேற்கத்திய பண்பாடு வந்துக் கலக்கவில்லை...
₹19 ₹20
வேத மரபும் பக்தி மரபும் வலியுறுத்திய சடங்குகளுக்கு எதிரானவர்களாகவும், கோயிலை - சிலை வழிபாட்டை மறுப்பவர்களாகவும் சித்தர்கள் இருந்தார்கள் என்பது உண்மைதான். இருப்பினும், மரபின் நிழல்களை முற்றிலும் அவர்கள் கடந்துவிடவில்லை என்பதும் உண்மை...
₹48 ₹50
கல்விச் சீர்திருத்தம், கல்விக்கூட சுதந்திரம், மாற்றுக்கல்வி ஆகியவை பற்றி சமீப ஆண்டுகளில் நிறைய விவாதங்கள் நடைபெறுகின்றன. பள்ளிக்கல்வி பற்றி இப்படி நிறைய கருத்துப் பரிமாற்றங்கள் நிகழ்ந்தாலும், கல்லூரி மாணவர்களைப் பலரும் கண்டுகொள்வதில்லை. அந்த வெற்றிடத்தை நிரப்பும் நூல் இது! 'ஒரு வகுப்பறை யாருக்குச் ச..
₹114 ₹120