
-5 %
லஷ்மி கடாட்சம்
தேவன் (ஆசிரியர்)
₹432
₹455
- Year: 2008
- ISBN: 9788183689380
- Page: 872
- Language: Tamil
- Publisher: அல்லயன்ஸ் பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
தலைமுறை தலைமுறையாகத் தமிழ் வாசகர்களை மகிழ்வித்து வந்ததேவனின் அனைத்து படைப்புகளையும் செம்பதிப்பாகக் கொண்டுவரும்கிழக்கு திட்டத்தின் ஒரு பகுதியாக, இந்நூல் வெளியாகிறது. அரை நூற்றாண்டைக் கடந்து, இன்றும் மேலும் மேலும் படிக்கத் தூண்டுபவையாக இருக்கின்றன தேவனின் படைப்புகள். எழுத்தில் தேவன் கையாளாத உத்திகளே இல்லை எனலாம். நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள் என ஒவ்வொன்றும் ஒரு விதம். தேவனின் நாவல்கள் ‘ஆனந்த விகடன்’ பத்திரிகையில் தொடராக வெளி-யான காலகட்டத்தில், ‘துப்பறியும் சாம்பு’, ‘ஜஸ்டிஸ் ஜகந்நாதன்’, ‘ஸ்ரீமான் சுதர்சனம்’, ‘மிஸ்டர் வேதாந்தம்’, ‘சி.ஐ.டி. சந்துரு’, ‘கோமதியின் காதலன்’, ‘கல்யாணி’, ‘மிஸ் ஜானகி’ ஆகியவற்றுக்காக, குடும்பத்துக்குள் நிகழ்ந்த சண்டைகளை அக்கால வாசகர்களால் மறக்க முடியாது. இப்பொழுது இந்தப் புத்தகத்துக்காக அவர்களுடன் அவர்களது குழந்தைகளும் மல்லுக்கு நிற்கப் போகிறார்கள். காலத்தால் அழியாத தேவனின் எழுத்துகளுக்கு வாசகர்கள் பரம்பரையாகத் தொடர்வதில் ஆச்சரியமில்லை. தேவன் நாவல்களில் ‘லக்ஷ்மி கடாட்சம்’ தனித்துவமானது.மனித குணங்களில் எத்தனை வகை உண்டோ, அத்தனையையும் இந்நாவலில் காணலாம். நட்புக்கு வேங்கடாசலம், பெருந்தன்மைக்கு கோவிந்தன், குரூரத்துக்கு நடராஜப் பிள்ளை, கபடத்துக்கு சாரங்கபாணி, மனித நேயத்துக்கு கல்யாண சுந்தரம் பிள்ளை என ஒவ்வொருபாத்திரத்தையும் பார்த்துப் பார்த்து இழைத்திருக்கும்தேவனின் சாதனை ஆச்சரியமானது.
Book Details | |
Book Title | லஷ்மி கடாட்சம் (Lakshmi Kadatsham) |
Author | தேவன் (Thevan) |
ISBN | 9788183689380 |
Publisher | அல்லயன்ஸ் பதிப்பகம் (Allaiyans Publications) |
Pages | 872 |
Published On | Nov 2007 |
Year | 2008 |
By the same Author
சீனிக் கற்கண்டாக இனிக்கும் தேவனின் பதினெட்டு சிறுகதைகள் நூல் வடிவில் இதோ! டாக்டர், திருடன், காதலன், காதலி, பில் கலெக்டர் என்று இவர் எடுத்துக்கொள்ளும் கேரக்டர்கள் அனைவரும் மிக மிகச் சாதாரணமானவர்கள். ஆனால், தேவனின் பேனாவுக்குள் ஒருமுறை புகுந்து வெளியே வரும்போது, ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாக ஜொலிக்கிறார்..
₹128 ₹135