Menu
Your Cart

Lock Down கதைகள்

Lock Down கதைகள்
-5 % Out Of Stock
Lock Down கதைகள்
கேபிள் சங்கர் (ஆசிரியர்)
₹76
₹80
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
கொரானா பல பேருக்கு பல அனுபவங்களை கொடுத்துள்ளது. பலருக்கு கொடுமையின் உச்சம். சிலருக்கு மன உளைச்சலின் உச்சம். இன்னும் சிலருக்கு மிகக் கடுமையான தனிமை. தினசரி செய்தித்தாள்கள், தொலைக்காட்சி செய்திகள் தரும் மன அழுத்தம். வாழ்க்கையின் நிலையற்ற தன்மை. சரக்கு கிடைக்காமல் உடல் மனம் நொந்தவர்கள். மிக நெருக்கமானவர்களை கொரானா பைசாச வைரஸுக்கு பலி கொடுத்த கொடுமை, புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் நடை. அடித்தட்டு மக்களின் வாழ்வியல் சாகசம். அரசியல்வாதிகளின் நிதமொரு பொய். உலக சுகாதார நிறுவனத்தின் நாளொரு அறிக்கை. விளக்கேற்றி, கைத்தட்டி, கொரானாவை விரட்ட சொன்ன நாட்டின் தலைவன். கேள்வி மட்டுமே கேட்கும் எதிர்கட்சிகள். ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள கொரானாவை பயனடுத்தி அடித்தளம் போடும் ஆளும் அரசின் குழப்பம் என எல்லாவற்றையும் மீறி, இந்த கொரானா லாக்டவுன் காலம் பல சுவாரஸ்ய அனுபவங்களை கொடுக்கத்தான் செய்தது. அப்படியான சுவாரஸ்ய கற்பனையும் கலந்த கதைகளின் தொகுப்புத்தான் இந்த லாக்டவுன் கதைகள். சில கதைகள் மிகச் சாதாரணமான நிகழ்வாய் தெரியலாம். ஆனால் அதையெல்லாம் சீரியசாய் கடந்து வந்துதான் இந்த புத்தகத்தை படித்துக் கொண்டிருக்கிறோம் என்பதுதான் சாஸ்வதமான விஷயம். மீண்டும் உங்களை ஒர் சிறுகதை தொகுப்புடன் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். இதற்கு முந்தைய புத்தகங்களுக்கு கொடுத்த அதே ஆதரவை இதற்கும் அளிப்பீர்கள் என்கிற நம்பிக்கையில்..
Book Details
Book Title Lock Down கதைகள் (lock-down-kathaigal)
Author கேபிள் சங்கர் (Cable Shankar)
Publisher ஸ்வாஸ் பப்ளிகேஷன்ஸ் (Swas publications)
Year 2021
Edition 1
Format Paper Back
Category Short Stories | சிறுகதைகள்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

கேபிளின் கதைசெய்யும் தொழிலை விரும்பி செய்த்தால் தான் அதைப் பற்றி அலசி புது சிந்தனைகளை புகுத்த முடியும். மற்றவர்களுக்கு சொல்ல முடியும். வருங்கால தலைமுறைகளுக்கு புரிதலைக் கொடுக்கும். அப்படி, தாங்கள் பணியாற்றிய பணிகளை ஒளிவு மறைவு இல்லாமல் கொல்லியிருக்கிறார் 'கேபிள்' சங்கர்.நடிகர், எழுத்தாளர், திரைக்கதை..
₹95 ₹100
கேபிள் ஆப்பரேட்டர், திரைப்பட விநியோகஸ்தர், திரையரங்கு நடத்தியவர், ப்ளாகர், திரைப்பட விமர்சகர், நடிகர், எழுத்தாளர், திரைப்பட வசனகர்த்தா, இயக்குநர் என பன்முகம் கொண்டவர். இவரது பல சிறுகதைகள் குறும்படங்களாய் எடுக்கப்பட்டு பரிசுகள் பெற்றிருக்கின்றன. கலகலப்பு, ஈகோ போன்ற படங்களின் வசனகர்த்தாவாக பணியாற்றியி..
₹190 ₹200
தொட்டால் தொடரும் படத்தின் மூலம் திரைப்பட இயக்குனரானவர். திரைக்கதையாசிரியர், வசனகர்த்தா, விநியோகஸ்தர், நடிகர், எழுத்டாளர் என பன்முகத்தன்மை கொண்டவர். 2008 - ல் வலைப்பூக்களில் எழுத ஆரம்பித்து, மிகக் குறுகிய காலத்தில், தன்னுடைய எழுத்து நடையாலும், வித்யாசமான கருத்தாலும், தனக்கென ஒர் வாசக வட்டத்தை பெற்றவர..
₹105 ₹110
மனித இனத்தின் ஆதாரம் இச்சை. சுரேஷ்வர் நித்யா, தமயந்தி பிலோ, ராமசுப்பு திவ்யா என மூன்று ஜோடிகள். ஒவ்வொன்றிலும் ஒரு முதிர் ஆண், ஒரு இளம் பெண். புள்ளிகளை முக்கோணமாய் இணைக்கும் சரடு காமம். அதில் குதித்து திளைக்கிறார்கள் உபயோகப்படுகிறார்கள். உபயோகிக்கிறார்கள். ஆனால் இவர்களிடையே ஆன உறவை அவர்கள் கையாளுவதில..
₹190 ₹200