Menu
Your Cart

மல்லிகாவின் வீடு: சிறார் சிறுகதைகள்

மல்லிகாவின் வீடு: சிறார் சிறுகதைகள்
-4 %
மல்லிகாவின் வீடு: சிறார் சிறுகதைகள்
ஜி.மீனாட்சி (ஆசிரியர்)
₹67
₹70
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
குழந்தைகளுக்கான கதைகள் எழுதுவது எனக்கு மிகவும் பிடித்தமானது. பெரியவர்களுக்கான சிறுகதைகள், கட்டுரைகள் என்று பல தளங்களில் நான் இயங்கினாலும் குழந்தைகளுக்குக் கதை சொல்லும்போது, என் மனதுக்குள் விவரிக்க இயலாத மகிழ்ச்சி நிலவுகிறது. காரணம், இதைப் படிக்கும் குழந்தைகள் நிச்சயம் இந்தக் கதைகளை உள்வாங்கிக் கொண்டு அதன்படி நடக்க முற்படுவார்கள் அல்லது தங்களின் கற்பனைச் சிறகுகளை விரித்துப் பறக்கத் தொடங்குவார்கள் என்பதுதான்! அழ. வள்ளியப்பா, டாக்டர் பூவண்ணன், செல்ல கணபதி, ரேவதி, இந்தப் புத்தகத்துக்கு அணிந்துரை எழுதித் தந்திருக்கும் கிருங்கை சேதுபதி உள்ளிட்ட சிறுவர் இலக்கிய எழுத்தாளர்கள் பலரும், புதுப்புது உத்திகள், புதிய கதைக் களங்களுடன், தரமான கதைகள் பலவற்றைத் தந்திருக்கிறார்கள். இவர்கள் எல்லோரின் நோக்கமும் நிச்சயம் ஒன்றாகத்தான் இருக்க முடியும். விசித்திர மாயாவி, பறக்கும் பாய், பேசும் விலங்குகள் என்று நடக்காத நிகழ்ச்சிகளையெல்லாம் கற்பனையால் நடத்திக் காட்டும் திறமை வாய்ந்த எழுத்தாளர்கள் பலரின் கதைகளை நாம் படித்திருப்போம். அவையெல்லாம் நமக்குள் உற்சாகத்தையும், உத்வேகத்தையும் ஏற்படுத்தியதை அவ்வளவு சீக்கிரத்தில் மறந்திருக்க மாட்டோம். இன்றைய சூழ்நிலையில் மாயாவிக் கதைகளைவிட மரம் நடுவதன் அவசியம் பற்றிய கதைகளையும், சுற்றுச்சூழல் மேம்பாட்டுக் கதைகளையும், நல்லொழுக்கக் கதைகளையும், நவீனத் தொழில்நுட்பத்தின் பாதிப்புகளை உணர்த்தும் கதைகளையும் சிறுவர்கள் மனத்தில் பதியும்படி எடுத்துரைக்க வேண்டியுள்ளது. இது காலத்தின் கட்டாயம். கதை சொல்லும் பாட்டிகளும், கதை சொல்லிகளும் குறைந்துவிட்ட இந்தக் காலத்தில், சிறந்த கதைகள் மூலம் சமூக விழிப்புணர்வுக் கருத்துக்களை குழந்தைகள் மனத்தில் பதிய வைக்க வேண்டும் என்பதே என் விருப்பம். இந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள பெரும்பாலான கதைகள், உண்மைச் சம்பவங்களைத் தழுவி எழுதப் பட்டவை. இதில் உலாவரும் கதாபாத்திரங்களில் பலர், ரத்தமும், சதையுமாக நம்முடன் வாழ்ந்து கொண்டிருக் கிறார்கள். கதைக் களங்களும், அதை மெருகேற்ற நான் கையாண்ட உத்தியும் மட்டுமே கற்பனை. ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு கருத்தைச் சொல்லும் வகையில் வடிவமைத்திருக்கிறேன். கதை படிப்பது என்பது வெறும் பொழுதுபோக்காக அமையாமல், பொது அறிவை வளர்த்துக் கொள்வதாகவும் இருக்க வேண்டும். கதைகள் மூலம் பசுமையை விதைக்க நான் முற்பட்டிருக்கிறேன். தூய்மை பாரதத்தை உருவாக்க விளைந்திருக்கிறேன். சுற்றுப்புறத்தைப் பாதுகாக்க முயற்சி எடுத்திருக்கிறேன்.
Book Details
Book Title மல்லிகாவின் வீடு: சிறார் சிறுகதைகள் (Mallikavin Veedu)
Author ஜி.மீனாட்சி (Ji.Meenaatchi)
Publisher Pustaka Publications (Pustaka Publications)
Pages 109
Published On Jun 2020
Year 2020
Edition 02
Format Paper Back
Category Children Books| சிறார் நூல்கள், Award Winning Books | விருது பெற்ற நூல்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

நினைவுகளே மனத்தை உருவாக்குகின்றன. பழைய நினைவுகளும், பதுக்கி வைக்கப்பட்ட நினைவுகளும், அகற்றி வைக்கப்பட்ட நினைவுகளும் மனத்தைத் தீர்மானிக்கின்றன. அவனுடைய ஒவ்வொரு செயலும் அவனிடம் நினைவுகளை உருவாக்கிக்கொண்டே செல்கின்றன. நினைவால் செய்யப்படும் செயல்களைவிட, செயலால் உண்டாகும் நினைவுகள் ஆழமாகவும், நீங்காதவையா..
₹95 ₹100