Menu
Your Cart

மஞ்சள் பிசாசு

மஞ்சள் பிசாசு
-5 %
மஞ்சள் பிசாசு
அ.வி.அனிக்கின் (ஆசிரியர்), நா.தர்மராஜன் (தமிழில்)
₹257
₹270
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
தங்கத்திற்குச் சமூகம் கொடுக்கும் மதிப்பு, ஒரு மாபெரும் பொருளாதாரப் புதிர். நவீன பயன்பாட்டுப் பொருள்கள் நிறைந்திருக்கும் பரந்த உலகில் தங்கம் மிகச் சிறப்பான ஓர் இடத்தைப் பிடித்து வைத்திருக்கிறது. தங்கம் எப்போது, எவ்வாறு மனித உலகத்திற்குள் நுழைந்து பணமாக மாறியது? பேராசிரியர் அனிக்கின் இந்தப் புத்தகத்தில் தங்கம் என்னும் மஞ்சள் உலோகம் எவ்வாறு தோண்டி எடுக்கப்படுகிறது என்பதில் தொடங்கி, உலகத்திலுள்ள தங்கம் அனைத்தும் எங்கே செல்கிறது என்று படம்போட்டுக் காட்டுவது மூலம் நம்மை ஒரு புதிய உலகத்திற்கு அழைத்துச் செல்கிறார். மேலும் தங்கத்திற்காக நடந்த இனப்படுகொலை பற்றியும் தேசங்களின் வரலாறு, பொருளாதாரம், அரசியல் ஆகியவற்றின் மீது தங்கம் வைத்திருக்கும் கடுமையான பிடி என்ன என்பது பற்றியும் விவரிக்கிறார். இதன் மூலம் இந்த நூல் பன்னாட்டுப் பணவியல் முறையில் தங்கம் என்ன பங்கு வகித்தது, வகிக்கிறது, தங்கத்தின் ஆதரவு இல்லாமல் பணத்திற்கு மதிப்பு இருக்குமா, இந்தப் பணவியல் முறையில் தங்கத்தின் தரம் என்ன வேலை செய்கிறது போன்றவை பற்றிய தெளிவான விளக்கம், வாசகருக்கு நாணயமுறையின் நெருக்கடிகளையும் அவற்றின் பரிணாமங்களையும் புரிந்துகொள்ள உதவுகிறது. இரசவாதம் பற்றிய சில ஆர்வமூட்டும் விவரிப்புகளும் இடம் பெறுகின்றன. தங்கத்தின் 'உண்மையான மதிப்பு' உறித்து எடுக்கப்பட்டப் பிறகு பணத்தின் பங்கு என்ன? புகழ்பெற்ற பொருளாதார வல்லுநர் எழுதிய மஞ்சள் பிசாசு என்னும் இந்த நூலின் ஒவ்வொரு பக்கத்திலும் வியப்புகள் ஒளிந்திருக்கின்றன.படிக்கும் போது எவ்வளவு 'அற்புதமான புத்தகம்" என்பதைப் புரிந்துகொள்வீர்கள்! இதனால்தான் நீங்கள் இந்தப் புத்தகத்தைப் பிறரிடம் படிக்கக் கொடுத்தால் திரும்ப வராது!
Book Details
Book Title மஞ்சள் பிசாசு (Manjal Pisaasu)
Author அ.வி.அனிக்கின் (A.Vi.Anikkin)
Translator நா.தர்மராஜன் (N.Dharmarajan)
ISBN 9788177202625
Publisher அடையாளம் பதிப்பகம் (Adayalam Publication)
Pages 328
Year 2016

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

வரலாறு என்றால் என்ன? :    பேராசிரியர் ஈ.எச்.கார் (1892-1982) இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த வரலாற்றறிஞர். அவர் ரஷ்யப் புரட்சி மற்றும் சோவியத் ரஷ்யாவின் வரலாற்றைப் பதினான்கு நூல்களைக் கொண்ட மாபெரும் தொகுதியாக எழுதிச் சாதனை படைத்தார்.இந்த அரிய நூலை மொழிபெயர்த்துள்ள பேராசிரியர் நா.தர்மராஜன் இதுவரை எண்..
₹124 ₹130
அன்னா கரீனினா - லியோ டால்ஸ்டாய்( தமிழில் - நா.தர்மராஜன் ) : ( 2- Parts)அன்னா கரீனினா அதன் எல்லா அம்சங்களிலும் பரிபூரணமான ஒரு பெரும் படைப்பு. நாவலின் மைய வினா என்பது காதலுக்கும் குடும்பம் என்ற அமைப்புக்கும் இடையேயான உறவென்ன என்பதுதான். காதல் இல்லாத திருமணத்தை கடமைக்காகச் சுமக்க வேண்டுமா? காதலுக்காக ஒ..
₹1,500