Menu
Your Cart

ஆழமான கேள்விகள் அறிவார்ந்த பதில்கள் | Brief Answers to the Big Questions

ஆழமான கேள்விகள் அறிவார்ந்த பதில்கள் | Brief Answers to the Big Questions
-5 %
ஆழமான கேள்விகள் அறிவார்ந்த பதில்கள் | Brief Answers to the Big Questions
Stephen Hawking (ஆசிரியர்), ஸ்டீபன் ஹாக்கிங் (ஆசிரியர்), PSV குமாரசாமி (தமிழில்)
₹379
₹399
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

உலகப் புகழ் பெற்றப் பிரபஞ்சவியலாளரான ஸ்டீபன் ஹாக்கிங், ‘கடவுள் என்ற ஒருவர் இருக்கிறாரா? பிரபஞ்சம் எவ்வாறு தோன்றியது? அறிவார்ந்த வேறு உயிரினங்கள் பிரபஞ்சத்தில் இருக்கின்றனவா? காலப் பயணம் சாத்தியம்தானா? விண்வெளியை நாம் காலனிப்படுத்த வேண்டுமா? செயற்கை நுண்ணறிவு நம்மை விஞ்சிவிடுமா?’ போன்ற, பிரபஞ்சம் தொடர்பான ஆழமான கேள்விகளுக்குத் தன்னுடைய அறிவார்ந்த கருத்துக்களை இந்நூலில் பதிவு செய்துள்ளார்.

பிரபஞ்சத்தைப் பற்றிய நம்முடைய புரிதலை விரிவுபடுத்தவும், அதன் மாபெரும் புதிர்கள் சிலவற்றை முடிச்சவிழ்க்கவும் ஹாக்கிங் தன்னுடைய வாழ்க்கையை அர்ப்பணித்தார். கருந்துளைகள், காலநேரம், பிரபஞ்சத்தின் துவக்கம் ஆகியவற்றைப் பற்றிய அவருடைய கோட்பாடுகள் விண்வெளிக்கு அப்பால் அவருடைய மனத்தைக் கூட்டிச் சென்றபோதிலும், பூமியின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணுவதில் அறிவியல் ஓர் இன்றியமையாத பங்காற்றுவதாக அவர் நம்பினார். அதனால், பருவநிலை மாற்றம், அணுவாயுதப் போர் குறித்த அச்சுறுத்தல், அதிக ஆற்றல் படைத்தச் செயற்கை நுண்ணறிவு போன்ற, மனிதகுலத்தைத் தற்போது அச்சுறுத்திக் கொண்டிருக்கும் அவசரமான விவகாரங்களை நோக்கி ஹாக்கிங் தன் கவனத்தைத் திருப்புகிறார்.

உலகின் மாபெரும் சிந்தனையாளர்களில் ஒருவராகத் திகழ்ந்த அவர் தன்னுடைய இந்த இறுதிப் புத்தகத்தில், மனிதகுலம் என்ற முறையில் நாம் எதிர்கொண்டுள்ள சவால்களையும், நாம் எதை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறோம் என்பதையும் பற்றிய தன்னுடைய அக்கறையையும் கரிசனத்தையும் நம் அறிவுக்குத் தீனி போடுகின்ற விதத்திலும் தன்னுடைய இயல்பான நகைச்சுவையுணர்வோடும் நம்மோடு பகிர்ந்து கொள்ளுகிறார்.

Book Details
Book Title ஆழமான கேள்விகள் அறிவார்ந்த பதில்கள் | Brief Answers to the Big Questions (Brief Answers to the Big Questions)
Author Stephen Hawking (Stephen Hawking), ஸ்டீபன் ஹாக்கிங்
Translator PSV குமாரசாமி
ISBN 9789389143157
Publisher Manjul Publishing House | மஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ் (Manjul Publishing House)
Pages 235
Published On Oct 2019
Year 2019
Edition 01
Format Paper Back
Category Translation | மொழிபெயர்ப்பு, Science | அறிவியல், Essay | கட்டுரை

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

வாழ்வும் பணியும் - தமிழில்: பேரா ச.வின்சென்ட் : ஸ்டீபன் ஹாக்கிங்கை நோளிணி மிக மெதுவாகவே பாதித்தது. லூக்காசியன் பேராசிரியராக ஆகும்போது, அவரால் நடக்க முடியாது, எழுத முடியாது. தானே சாப்பிட முடியாது. கீழே சாயும் தலையை அவரால் மீண்டும் உயர்த்த முடியாது. பேச்சும் குளறியது. அவருக்கு மிகவும் நெருக்கமாக இருப்..
₹550
கல்லூரியின் வாசலில் கால் வைத்த பிறகு அறிவியல் என்னும் பூந்தோட்டத்தை ஆங்கிலம் என்ற முகமூடி அணிந்து உலா வரும் கட்டாயத்தில் உள்ள பெரும்பாலான தமிழ் உள்ளங்களுக்கு, இந்தப் புத்தகம் வீடு தேடி வரும் ஒரு இனிய தென்றல். அறிவியல் என்ற நல்மருந்திற்கு ஆங்கிலம் என்ற கசப்பை ஒதுக்கி, தேன் தமிழ் சேர்த்து கொடுக்கும் ம..
₹380 ₹400
உங்களுக்கு ஏதாவது ஒரு கனவு இருந்தால் அதை நனவாக்க உங்களால் முடியும். நீங்கள் துவங்கப் போகும் இடம் எதுவாக இருந்தாலும் உங்களால் இந்த பூமியிலேயே ஒரு சொர்க்கத்தைப் படைக்க முடியும்.நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், உங்களுக்கு என்ன வேண்டும் என்பதில் கவனத்தைக் குவிப்பதும், பின் நீங்களே அதற்குத் தடையாக இல்லாமல்..
₹333 ₹350
இரகசியத்தைப் படிப்படியாக நீங்கள் புரிந்து கொள்ளும்போது நீங்கள் விரும்பும் அனைத்தையும் பெறுவது எப்படி, வேண்டிய நிலைகளை அடைவது எப்படி? விரும்பியவற்றைச் செய்வது எப்படி என்பதை அறிந்து கொள்வீர்கள். உண்மையில் நீங்கள் யார் என்பதைத் தெரிந்து கொள்வீர்கள்.  உங்களுக்காகக் காத்திருக்கும் பிரம்மாண்டத்தையும உணர்ந..
₹474 ₹499