Menu
Your Cart

முற்றாத இரவொன்றில்

முற்றாத இரவொன்றில்
முற்றாத இரவொன்றில்
ம காமுத்திரை (ஆசிரியர்)
Categories: நாவல்
₹140
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
ஆயிரம் பக்க நாவல்கள் இன்று அனாசயமாய் அச்சேற ஆரம்பித்துவிட்டன. பிரச்சனையின் ஆதிதொட்டு அகழ்வாராய்ச்சியில் இறங்கி அலங்கரிக்கின்றன. இங்கே சிறிய களம், நாவலாய் விரிந்துள்ளது. கால் நூற்றாண்டுகால எழுத்துப் பயிற்சியின் தொடர்ச்சி என அனுமானிக்கிறேன். காதலும் வீரமும் தமிழரின் பண்பாடு என்ற கோஷங்களும் கோட்பாடுகளும் எதோ ஒரு சிதைவில் சந்திக்கின்றன, சாதியம் எனும் மாபெரும் மாயப் பிசாசு ஒவ்வொரு மனிதனின் அணுவிலும் தலைவிரித்தாடிக் கொண்டிருக்கிறது. அந்த நிஜத்தை உணர்ந்தாக வேண்டி இருக்கிறது. அது ஒவ்வொரு சாதிக்குள்ளும் இரு பிளவுகளைக் கொண்டு, ஜீவிக்கிறது அந்தப் பிரிவுகளில் உலகம் ஒடுங்குமானால் பிரச்சனைகள் கூர்மைப்படும். ஆனால் அசாத்தியமான, செல்வழியில் தான் வர்க்கங்கள் வாய் பிளந்து உறங்க வைக்கப்படுகின்றன. ஒரு நாள் இரவில் நடக்கிற சம்பவத்தைச் சொல்கிற போது வாழ்வின் மிச்சம்தாழம்புதராக மணத்துக் காட்டுகிறது.

Write a review

Note: HTML is not translated!
Bad Good

By the same Author

பத்தாண்டுகளுக்கு முன்பு, எழுத்தாளர் காமுத்துரை அவர்களின் கதைகளை, குறுநாவல்களை, புதினத்தை வாசித்ததற்கும் இன்றைக்கு இந்த சிறுகதைத் தொகுப்பை முழுவதுமாக வாசித்துவிட்டு, எழுதுவதற்கும் ஊடையில் அவருடைய மொழியும், மனிதர்களும், கதைசொல்லல் விதங்களும், மாறாத அதே குறுகுறுப்போடு இருக்கிறார்கள்அசலான தேனியின் ஜாட..
₹140
This is the sticky Notification module. You can use it for any sticky messages such as cookie notices or special promotions, etc.