Menu
Your Cart

நினைவுப் பாதை

நினைவுப் பாதை
நினைவுப் பாதை
நினைவுப் பாதை
நினைவுப் பாதை
நினைவுப் பாதை
நகுலன் (ஆசிரியர்)
₹280
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
ஸ்தூலமான கதையும் இல்லை. ஸ்தூலமான கருத்தோட்டமும் இல்லை. இந்த இரண்டுவிதமான பாதுகாப்புகளும் இல்லாமல் நாவல் எழுத முடியுமா? அப்படி எழுதினாலும் உணர்வுபூர்வமான மனநிறைவு அளிக்கும்படி எழுதமுடியுமா? இவை பூதாகாரமான கேள்விகள். ஆனால் (பந்தய) ஆட்டத்தை ஏற்றுக்கொண்டு நகுலன் படைப்பிலக்கியத்தில் சிறப்பிடம் பெறும் நாவலாக நினைவுப் பாதையை உருவாக்கியிருக்கிறார். இது ஓர் எழுத்தாளனின் நினைவுப் பாதை. அசலாக சதையும் ரத்தமுமாக உயிர் வாழும் ஓர் எழுத்தாளனின் நினைவுப் பாதை. இதில் வேறு பல எழுத்தாளர்களும் வருகிறார்கள். அநேகமாக எல்லாரையும் அடையாளம் கண்டுகொள்வதனால் இந்த நாவலுக்குப் புது அர்த்தம் ஒன்றும் ஏற்பட்டுவிடுவதில்லை. காரணம் அப்படிச் சிலர் இப்போதும் இருக்கிறார்கள் என்ற உண்மை தவிர அவர்கள் இங்கு பாத்திரங்கள் ஆவதில்லை. மனிதர்கள், கருத்துகள், இவற்றைவிடச் சில தன்மைகள்தான் இந்த நாவலில் முக்கியத்துவம் பெறுபவை. தமிழ் உரைநடை இலக்கியத்துக்கு நினைவுப் பாதை; ஒரு புது மரபை அளிக்கிறது. தமிழ் நாவல்களில் மிக முக்கியமானது என்று மிகச் சில நாவல்களைப் பொறுக்கினாலும் அதற்குள் இது இருக்க வேண்டியது
Book Details
Book Title நினைவுப் பாதை (Ninaivu Paadhai)
Author நகுலன் (Nakulan)
ISBN 9789382648420
Publisher நற்றிணை பதிப்பகம் (Natrinai Publications)
Pages 240
Published On Jan 2013
Year 2013
Edition 1
Category Novel | நாவல்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

பௌதீக உலகை முழுக்கக் கொண்டாடுபவராகவும் அல்லாமல், அதைக் கேவலம் என நிராகரிப்பவராகவும் அல்லாமல் இவை இரண்டுக்கும் வெளியில் இயங்கியவர் நகுலன். இந்த அடிப்படையில் அவரை Metaphysical கவிஞர் எனச் சொல்லலாம். அதாவது பௌதீக உலகிற்கு அப்பால் செல்லக் கூடிய கவிமனம் அவருடையது...
₹124 ₹130
ஒரு மனிதனை நாய் என்று குறிப்பிட்டால் அதை நாம் ஏன் ஒரு சம்பிரதாய வசைமொழியாக கொள்ள வேண்டும் என்று எனக்குத் தோன்றிற்று! நாய் என்பதை ஒரு தத்துவக்குறியீடாக அமைத்துக்கொண்டு அதைத் தொடர்ந்து விசாரணை செய்வதே இந்த நாவலின் ஒரு முக்கிய நோக்கம்\ நான் சந்தித்த மனிதர்கள், நான் படித்த புத்தகங்கள், நான் பெற்ற அனுபவ..
₹114 ₹120
நகுலனின் கலைஊற்று மிக வளமானது எனும் நம்பிக்கையை இந்நாவல் எனக்கு ஏற்படுத்தியிருக்கிறது. இதன் மூலம் தமிழின் இலக்கியத்தரமான நாவலாசிரியர்களின் வரிசையில் இடம் பிடித்துக்கொள்ளும் இவ்வாசிரியர், எதிர்காலத்தில் நாம் எண்ணிப் பெருமைப்படத்தகுந்த சிருஷ்டிகளைப் படைத்துவிட்டார் என்றால், நான் ஆச்சரியம் அடையமாட்டேன்..
₹57 ₹60
வாக்குமூலம் நாவலைப் பற்றி நான் அதிகம் எழுத விரும்பவில்லை. என் நாவல்-களைப் பற்றி பரவலான ஓர் அபிப்பிராயம், என் எல்லா நாவல்களும் ஒரே அனுபவ உலகின் பல்வேறு உருவங்கள் என்று. ஆனால் இங்கு ஒன்றைச் சொல்ல வேண்டும். உருவச் சிறப்பினால் அடிப்படையான அனுபவத்திற்குக்கூட நுணுக்கமும் பரிமாணமும் ஆழமும் கூடுகின்றன என்பத..
₹95 ₹100