Menu
Your Cart

நான் கே.எஸ்.பேசறேன்

நான் கே.எஸ்.பேசறேன்
-5 %
நான் கே.எஸ்.பேசறேன்
₹333
₹350
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
கே.எஸ். என்று நண்பர்களால் அறியப்படும் டாக்டர் கே. சுப்பிரமணியன் எழுதியுள்ள தமிழ், ஆங்கிலக் கட்டுரைகள் தலா ஆறு உள்ளன, அவருடைய நேர்காணல் ஒன்று (ஆங்கிலத்தில்), அவர் தமிழில் மொழிபெயர்த்த டாக்டர் மணி பௌமிக்-கின் புகழ்பெற்ற நூலான “கோட் நேம் காட்’ (கடவுளின் கையெழுத்து) நூலிலிருந்து இரு அத்தியாயங்கள், அவர் ஆங்கிலத்தில் எழுதியுள்ள ஆறு கட்டுரைகள், தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்த ஆறு கட்டுரைகள், கே.எஸ். மறைந்தபோது அவருடைய நண்பர்களால் எழுதப்பட்ட அஞ்சலிக் கட்டுரைகள் பத்து ஆகியவற்றின் தொகுப்பே இந்த நூல். ஜெயகாந்தன் குறித்த சில புதிய செய்திகள், புதுக்கவிதையின் பிதாமகன் என்று அறியப்படும் ந. பிச்சமூர்த்தி குறித்த கட்டுரையும், கவிதைகளும் அருமை. ஆங்கிலக் கட்டுரைகளில் இசையமைப்பாளர் எம்.பி. சீனிவாசனுக்கு கே.எஸ். எழுதியுள்ள அஞ்சலிக் கட்டுரையும் பிலிப்பின்ஸ் குறித்து எழுதப்பட்ட கட்டுரையும் குறிப்பிடத்தக்கவை. பாரதியார் தொடங்கி எம். யுவன் வரையிலான ஐம்பத்தெட்டு பேரின் நவீன கவிதைகளும் இடம் பெற்றுள்ளன. கே.எஸ். மறைந்தபோது அவரின் நண்பர்கள் எழுதிய அஞ்சலிக் கட்டுரைகளில் சிற்பி பாலசுப்பிரமணியன், பா.ரா. சுப்பிரமணியன், ரவி சுப்பிரமணியன் ஆகியோரின் கட்டுரைகள் உணர்வுபூர்வமாக அமைந்துள்ளன.மொழிபெயர்ப்பாளராக மட்டுமே அறியப்பட்ட டாக்டர் கே.சுப்பிரமணியனின் பன்முக ஆளுமையை அறிய உதவுகிறது லதா ராமகிருஷ்ணனின் இத் தொகுப்பு.
Book Details
Book Title நான் கே.எஸ்.பேசறேன் (Nan K.S.pesugiren)
Author லதா ராமகிருஷ்ணன் (Ladhaa Raamakirushnan)
Publisher புதுப்புனல் (puthupunal)
Pages 330
Published On May 2022
Year 2022
Edition 1
Format Paper Back
Category Essay | கட்டுரை, Interview | நேர்காணல், 2022 New Arrivals | 2022 புதிய வெளியீடுகள்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

மான்-பிள்ளை மற்றும் அழகிய எலீனா..
₹48 ₹50
கல்வெட்டுக் கவிதைகள்"In sixteen pages or so, Kalvettu Pesugiradhu manages to establish an identity of its own, in matters of literary and social issues. its editorial needs special mention and so too a sizeable bumber of the poems that have so far appeared in the pages of Kalvettu Pesugirathu".Latha..
₹76 ₹80
இந்தியாவின் மிகச் சிறந்த உருதுக் கவிஞர் மிர்ஸா காலிப். பாரஸீக மொழியில் எழுதிய தன் கவிதைகளின் சிறப்பு குறித்து பெருமிதம் கொண்டிருந்தவர். அவர் பாரஸீக மொழியில் எழுதிய கவிதைகளின் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் மிகவும் அதிகம். எனினும், பாரஸீக மொழிக் கவிதைகளின் மொழிபெயர்ப்பு மிகவும் அரிது. இந்தக் குறையைக் களைய ம..
₹266 ₹280
அறுபதுகளில் சம்பிரதாய மனநலத் துறைக்கு எதிராக உருவான’ஆன்டி சைக்கியாட்ரி’ இயக்கத் திற்குள் முக்கிய்மான பெயர் டேவிட் கூப்பர். அந்த வார்த்தைப் பிரயோகத்தை உருவாக்கி புழக்கத்தில் விட்டவரும் அவரே. தீவிர மார்க்சீய கருத்தியல் நிலைப்பாடு கொண்டவர். அடக்கு முறையை நுண்ணிய அளவில் செயல்படுத்தி, அதை மனித உறவுகளில் ..
₹105 ₹110