Menu
Your Cart

நேரு வழக்குகள்

நேரு வழக்குகள்
-4 % Out Of Stock
நேரு வழக்குகள்
₹86
₹90
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
நூலின் தலைப்பே சுவையானது. விடுதலைப் போராட்ட வீரர் என்ற வகையில் பண்டிட் ஜவஹர்லால் பல்வேறு வழக்குகளை எதிர் கொண்டிருப்பார். அதற்கான தண்டனை பெற்றிருப்பார்; அல்லது விடுதலை செய்யப்பட்டிருப்பார். இதற்கு மேல் எதுவும் அவர் வாழ்க்கை வரலாற்றில் பொதுவாக இடம் பெறாது. ஆயினும் அவ்வழக்குகளை மட்டும் தனித்துப் பார்க்கும்போது அங்கே ஒரு புதிய வரலாற்றுப் பார்வை; தனி மனித மதிப்பீடு புலனாகும். அதற்கு இந்நூல் உதவும். நேரு வழக்குகளில் பல சுவையான அம்சங்களை இந் நூல் தருகிறது. நீதிமன்ற விசாரணை முறைகளை மட்டுமல்ல, நேரு விடுத்த பல அறிக்கைகளையும் இதில் தந்துள்ளார். சில கடுமையான அதிர்ச்சிகளை தருகிறது. பொதுவாக விடுதலைப் போராட்டமும் நேரு வாழ்க்கையும் பிரிக்க முடியாதபடி பின்னிப்பிணைந்துள்ளதுபோல இந்நூல் விடுதலைப் போராட்ட சுருக்க வரலாறாகவும் மாறிப்போயுள்ளது. இந்நூலில் முதல் வடிவத்தை 46 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கியதாகக் கூறுகிறார் நூலாசிரியர். இப்போதாவது வந்ததே என மகிழ்கி றோம். “நாட்டில் பசியுடன் வாடும் வயிறுகளுக்கு உத்தரவுகளும் அவசர சட்டங்களும் உணவு தரப்போவதில்லை” என்ற புரிதலும் அதன் தொடர்ச்சியாக வீறுகொண்டெழும் மக்கள் இயக்கம் பற்றிய நேருவின் புரிதலும் இந்நூல் மூலம் படிக்கிறபோது நமக்கு தற்கால அரசியல் நிலை நினைவுக்கு வராமல் போகாது.
Book Details
Book Title நேரு வழக்குகள் (Nehru Vazhakkugal)
Author ஞாலன் சுப்பிரமணியன் (Gnalan Subramanian)
Publisher பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam)
Pages 176
Category இந்திய வரலாறு

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

ஹோசே அர்க்காதியோ புயேந்தியா ஒரு புதிய உலகை நிர்மாணிக்கிறார். சதுப்பு நிலப் பகுதியில் உருவாகும் மகோந்தா கிராமம் நூற்றாண்டுகளினூடே வளர்ந்து நகரமாக மாறுகிறது. புயேந்தியாவின் வம்சத்தைச் சேர்ந்த ஏழு தலைமுறைகள் அந்த நகரத்தின் வளர்ச்சிக்கும் இருப்புக்கும் அழிவுக்கும் மையமாகவும் விரிவாகவும் அமைகின்றன. உற..
₹523 ₹550