Menu
Your Cart

நேசமணி தத்துவங்கள்

நேசமணி தத்துவங்கள்
-5 % Out Of Stock
நேசமணி தத்துவங்கள்
சுரேகா (ஆசிரியர்)
₹100
₹105
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
தமிழ்த் திரையுலகில் வைகைப்புயல் வடிவேலு அவர்களின் ஆளுமை மிகவும் ஆழமானது. அனைவரும் விரும்பும் , குபீர்ச் சிரிப்பு நகைச்சுவைகளை, யதார்த்தமான வகையில் தந்துகொண்டிருக்கும் கலைஞர் வடிவேலு அவர்கள் ! நமது அன்றாட பேச்சிலும், இணையத்திலும், மீம்ஸ்களிலும், வடிவேலுவின் வசனத்தை , வார்த்தைகளை நிச்சயம் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். இந்த ஆண்டு, ட்விட்டரில் #prayfornesamani என்ற ஒரே வார்த்தை மூலம், வடிவேலு உலக அளவிலும் பிரபலமாகிவிட்டார். "ஆணியே பிடுங்கவேண்டாம்" என்று போகிற போக்கில் காண்ட்ராக்டர் நேசமணியாக அவர் சொல்லும் வசனத்தை ஆழமாகப் பார்க்கும்போது, பல்வேறு மேலாண்மைக் கருத்துக்கள் பிடிபடும். அவற்றை அப்படியே எழுத்தில் சொல்லமுடியுமா என்று சிந்தித்ததன் விளைவுதான் இந்த நூல்! நேரடியாக நிர்வாக யுக்திகளைச் சொல்வதை விட , வடிவேலுவின் பிரபலமான வசனங்களை எடுத்து, அதிலிருக்கும் மேலாண்மைக் கருத்துகளை மையப்படுத்தி ஒருங்கிணைத்து, ஒரு சுவாரஸ்யமான, ஜாலியான கதைபோன்ற தொகுப்பாகத் தருவதுதான் இந்த நூலின் நோக்கம். இதைப் பார்த்தவுடன் உங்களுக்கே தோன்றும் சொற்கள்- "ஆஹான்! ரூம் போட்டு யோசிப்பாய்ங்களோ?" என்பதாகத்தான் இருக்கும் ! நூலாசிரியர் சுரேகா, பிரபல பேச்சாளர், வாழ்வியல் பயிற்சியாளர்! தொழிலதிபர்களுக்கும், பிரபலங்களுக்கும் தனிப்பட்ட வழிகாட்டியாகச் செயல்பட்டு வருகிறார். கல்வி, திறன் மேம்பாடு, தொழில் ஆகியவற்றின் ஆலோசனை நிறுவனமான Talent Factory யின் இயக்குநர். முன்னணி பிராண்ட் ஆலோசகர். தமிழகத்தின் முதல் Chief Happiness Officer என்ற பெருமைக்குச் சொந்தக்காரர். தமிழின் முதல் Business Novelist.
Book Details
Book Title நேசமணி தத்துவங்கள் (Nesamani Thaththuvangal)
Author சுரேகா (Sureka)
ISBN 9789387369092
Publisher சிக்ஸ்த்சென்ஸ் (Sixthsense Publications)
Pages 112
Year 2019
Format Paperback

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author