- Edition: 1
- Year: 2026
- Page: 96
- Format: Paperback
- Language: Tamil
- Publisher: தம்பி பதிப்பகம்
என்ன நினைத்து வைக்கப்பட்ட தலைப்பு இது என்று பல கோணங்களில் ஓடியது மனம். சினிமாவில் பெய்த மழைக்காட்சிகள், கவிஞர்கள் கொண்டாடிக் களித்த மழைக் கவிதைகள், மழை வெள்ளத்தில் மக்கள் அல்லல்பட்ட காட்சிகள் என ஏதேதோ தோன்றியது. கடைசியில் 'நிலமற்றவனை நனைக்கும் மழை' அவனுக்கு மகிழ்ச்சியளித்ததா? இல்லை கவலை அளித்ததா? என்ற கேள்விகளோடு பக்கங்களைப் புரட்டி அந்தக் கவிதையைத் தேடினேன். படித்தபின் அத்தனை கற்பிதங்களையும் உடைத்தெறிந்து ஒரு ஊமை வலியைத் தந்துவிட்டுப் போனது அந்தக் கவிதை.
பெய்யும் மழைக்கு மனிதர்களுக்கிடையே வேறுபாடு இல்லைதான். ஆனால் நிலத்தின் மீதான உரிமை இல்லாதவருக்கு அதிக மழையால் கிடைப்பதென்ன? மழையில் நனைவதன்றி வேறு பயன் ஏது? என்ற கேள்வியை நம் மனதில் விதைத்துச் செல்கிறது இந்தக் கவிதை. பாரத் தமிழ் அவர்களின் கண்ணில் தட்டுப்படும் ஒவ்வொரு நிகழ்வும், ஒவ்வொரு மனிதரும், பல்வகை உயிர்களும், நிலமும் மலையும் கூட இயங்கியலின் அரசியலைப் பேசிக் கொண்டுதான் இருக்கின்றன.
அ. அருள்மொழி, திராவிடர் கழகம்.
| Book Details | |
| Book Title | நிலமற்றவனை நனைக்கும் மழை (Nilamarravanai Nanaikkum Mazhai.) |
| Author | பாரத் தமிழ் |
| Publisher | தம்பி பதிப்பகம் (Thambi Pthippakam) |
| Pages | 96 |
| Year | 2026 |
| Edition | 1 |
| Format | Paperback |
| Category | 2026 New Releases |