Menu
Your Cart

நிலத்தின் விளிம்புக்கு

நிலத்தின் விளிம்புக்கு
-5 %
நிலத்தின் விளிம்புக்கு
டேவிட் கிராஸ்மன் (ஆசிரியர்), அசதா (தமிழில்)
₹713
₹750
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
FREE shipping* (within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
இடைவிடாது நிகழ்ந்துகொண்டிருக்கும் ஒரு யுத்தம், அதில் ஈடுபட்டிருக்கும் தன் பிள்ளை, எதுவோ விரும்பத்தகாதது நிகழப் போகிறது என்ற கிலேசம், தன்னை வந்து அடையப்போகும் கெட்டச் செய்தியைத் தவிர்க்க வீட்டிலிருந்து வெளியேறி வயல்கள் ஓடைகள் ஆறுகள் மலைகள் என நெடிய நடை பயணத்தை மேற்கொள்கிறாள் தாய். ஒரு குடும்பத்தையும் அதனோடு பின்னப்பட்ட உறவுகளையும் ஒரு யுத்தம் எப்படி உள்ளும் புறமுமாகப் பாதித்து கடும் சிக்கலுக்கு ஆளாக்கவியலும் என்பதை அதிகமும் தனக்கும் தனது பிள்ளைக்குமான ஒரு தாயின் நினைவுகளின் பின்னணியில் வைத்து விவரிக்கும் இந்நாவல் நம் காலத்தின் மிகச் சிறந்த யுத்த எதிர்ப்பு நாவல். ஒரு இஸ்ரேலியப் படைவீரனது தாயின் பார்வையிலிருந்து எழுதப்படிருக்கும் இந்நாவலில் இஸ்ரேலிய-பாலஸ்தீனிய யுத்தத்தைப் பக்கச் சார்பின்றி அணுகியிருக்கும் நூலாசிரியர் இஸ்ரேலிய அரசாங்கத்தையும் தொடர்ந்து தீவிரமாக விமர்சித்து வருபவர். இஸ்ரேலியப் படைவீரனான தனது மகனை யுத்தத்தில் பறிகொடுத்தவர். ஒருவிதத்தில் நாவலில் வரும் தாயான ஓரா டேவிட் கிராஸ்மன்தான். எழுதப்பட்டுக்கொண்டிருந்த காலகட்டத்தில் படையிலிருக்கும் தனது மகனை இந்நாவல் காப்பாற்றும் என அவர் நம்பினார். நிதானமும் அழகும் கூடிய ஒரு மொழியில் எழுதப்பட்டிருக்கும் படைப்பு இது. டேவிட் கிராஸ்மன் (1954) ஜெரூசலேத்தில் பிறந்தவர். புனைவு, அபுனைவு, குழந்தைகள் இலக்கியம் என எண்ணிறைந்த படைப்புகளுக்குச் சொந்தக்காரர். இவரது படைப்புகள் ‘தி நியூயார்க்கர்’ இதழில் வெளிவந்திருக்கின்றன, உலகெங்கும் முப்பது மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ஃப்ரான்சின் செவாலியே, ஜெர்மனியின் புக்ஸ்தெஹுட புல்லே, ரோமின் ப்ரிமியோ பெர் லா பீஸ் எல்’அஸியோன் உமிடாரியா, ப்ரீமியோ இஷ்கியா - இதழியலுக்கான சர்வதேச விருது, இஸ்ரேலின் எமெட் பரிசு, குந்தர் க்ராஸ் அறக்கட்டளையின் அல்பட்ராஸ் போன்ற விருதுகளுடன் 2017ஆம் ஆண்டுக்கான சர்வதேச மேன் புக்கர் பரிசும் பெற்றவர்.
Book Details
Book Title நிலத்தின் விளிம்புக்கு (Nilaththin Vilimbukku)
Author டேவிட் கிராஸ்மன் (Tevit Kiraasman)
Translator அசதா (Asadhaa)
Publisher காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Publications)
Pages 0
Year 2018

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

அய்ரோப்பியக் கலாச்சார வார்ப்புக்குப் பலியாகி, அகச் சிடுக்குகள் நிறைந்தவராய் அல்லாடும் ஒருவர் தனது நாடோடிக் குருவான இந்தியச் சாமியாருடன் சேர்ந்து இமயமலையின் பனிவெளிகள், லாமா மடாலயங்களினூடாக அலைந்து திரிந்து ஞானத்தைத் தேடிச்செல்லும் பயணமாக இந்த நாவல் விரிகிறது. குளிர்மலையில் சவால்மிகு சாகசப் பயணம் என்..
₹371 ₹390