
-5 %
அப்பூதி
ஆயுதமொழியன் (ஆசிரியர்)
₹152
₹160
- Edition: 1
- Year: 2022
- ISBN: 9798887177632
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: Notionpress
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
நம்முடைய வரலாற்றைத் திரும்பிப் பார்க்கும் ஆவலைவிட எதிர்காலத்திற்கான வேட்கை நம்மிடையே மிக அதிகமாகவே இருக்கிறது. குறைந்தபட்சமாக நாளை நல்ல நாளா என்று பார்ப்பதில் தொடங்கி குவாண்டம் இயற்பியலில் காலப்பயண ஆய்வுகள் வரைக்கும் இந்த ஆவல் தான் அடிப்படை. இந்த தொகுப்பில் உள்ள ஒரு பகுதி சிறுகதைகள் இது போன்றதொரு வருங்காலத்தைப் பற்றித்தான் உங்களுக்குக் கதை சொல்லப் போகிறது. வெறுமனே ஒரு கால இயந்திரத்தை வைத்துக்கொண்டு வருங்காலத்திற்குச் சென்று சாகசம் நிகழ்த்தக் கூடிய நாயகர்களை நாம் தவிர்க்கப் போகிறோம். இன்னும் பல நூறு ஆண்டுகள் கழித்த காதலைப் பேசப்போகிறோம், அதைத் தொடர்ந்த காமத்தைப் பேசப்போகிறோம், அங்கு உயிர் வாழ்தலுக்குரிய தகவமைப்புகளைப் பேசப்போகிறோம், அவர்களில் வாழ்வியலைப் பேசப்போகிறோம்.
இந்த புத்தகத்தின் முதல் பாதி நிச்சயமாக உங்களை வேறு ஒரு காலத்திற்கு வேறு ஒரு உலகத்திற்கு வேறு ஒரு கோணத்திற்குக் கூட்டிச் செல்லும் என்று நம்புகிறேன். அதே போலக் கதையின் இரண்டாம் பாதி முதல் பாதிக்குச் சற்றே வேறுபட்டு இந்த காலத்தில் இன்றைய உலக சூழ்நிலை நடைமுறைகளிற்கு ஏற்றார் போல நடப்பவை. அதில் நீங்கள் பெரிய கற்பனை கடலில் நீந்தப்போவதில்லை என்றாலும் நிகழுலக பெருவெளியில் சில சம்பவங்களையும் கதாபாத்திரங்களையும் நீங்கள் சந்திக்கக் கூடும்.
Book Details | |
Book Title | அப்பூதி (Appathi) |
Author | ஆயுதமொழியன் |
ISBN | 9798887177632 |
Publisher | Notionpress (Notionpress) |
Year | 2022 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Short Stories | சிறுகதைகள், 2022 Release |