Menu
Your Cart

ஒரு கூர்வாளின் நிழலில் - (விடுதலைப் புலிகளின் மகளிரணித் தலைவியின் தன்வரலாறு)

ஒரு கூர்வாளின் நிழலில் - (விடுதலைப் புலிகளின் மகளிரணித் தலைவியின் தன்வரலாறு)
-10 %
ஒரு கூர்வாளின் நிழலில் - (விடுதலைப் புலிகளின் மகளிரணித் தலைவியின் தன்வரலாறு)
தமிழினி (ஆசிரியர்)
₹198
₹220
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
தமிழினியின் இந்த நினைவோடைப் பதிவில் உண்மையுணர்வும் நேர்மையும் ஒவ்வொரு வாக்கியத்திலும் இரண்டறக் கலந்துள்ளன. பின்புலம் அறியாத வாசகன்கூட இதை உடன் உணர முடியும். யாரையும் குற்றஞ்சாட்டும் எண்ணம் இல்லை. பழிக்கும் நோக்கம் இல்லை. எத்தனையோ இழப்புகள் தியாகங்களுக்குப்பின் எல்லாம் இப்படி முடிந்து விட்டதே என்ற துக்கமும் கேவலும். அதேநேரம் உண்மையின் கூர்முனைகள் யாருக்கும் அஞ்சாமல் பல பிம்பம்களைக் கீறுகின்றன. நேர்மையின் சித்திரங்கள் பிரச்சாரத்தின் நெடுஞ்சுவர்களைக் கடந்து மனிதத்தை எல்லா திசைகளிலும் அடையாளம் காண்கின்றன. பிரபாகரனை நேரில் சந்திக்கக்கூடிய, அவரை இறுதிவரை சந்தித்து வந்தவர்களுடன் அந்தரங்கமாக உரையாடக்கூடிய உயர் நிலையில் இருந்தவர் தமிழினி. உயர் நிலைப் போராளிகள் அதிகமும் இறுதிப் போரில் கொல்லப்பட்டார்கள். அல்லது சரணடைந்த பின்னர் கொல்லப்பட்டார்கள். இந்த இரண்டு நெருப்பு வளையங்களிலும் தப்பிப் பிழைத்தவர் தமிழினி. அதுவும் அரசியல் அணியின் உயர் தலைவர் என்ற வகையில் அவரது அறிதலின், அனுபவத்தின் வீச்சு பரந்து விரிந்தது. இதுவரை அறியப்படாத பல அரிய தகவல்களை உள்ளடக்கியது இந்நூல். நினைவுகளில் நின்று கொல்லும் பல பகுதிகளைக் கொண்டது. தவிர்க்கவே முடியாத நினைவோடை பதிவு.
Book Details
Book Title ஒரு கூர்வாளின் நிழலில் - (விடுதலைப் புலிகளின் மகளிரணித் தலைவியின் தன்வரலாறு) (Oru koorvalil nizhalil)
Author தமிழினி (TAMIZHNI)
ISBN 9788195011674
Publisher யாழ் பதிப்பகம் (Yazh Pathippagam)
Pages 280
Published On Feb 2021
Year 2021
Edition 1
Format Paper Back
Category Biography | வாழ்க்கை வரலாறு, Eezham | ஈழம், Essay | கட்டுரை

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author