 
                     
                    
                                      -5 %
                                  
                           
                         
                        சேரர் கோட்டை ( 2 பாகங்கள் )
                    
          
			
			 
			 
				 
								கோகுல் சேஷாத்ரி  (ஆசிரியர்)				 
						
			
            
			
          
                      
          
          
                    ₹855
                 ₹900
                            - Edition: 1
- Year: 2016
- ISBN: 9788183797160
- Page: 1050
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: பழனியப்பா பிரதர்ஸ்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
              
            புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள்  பணம் திருப்பித் தரப்படும்.
              
            
                சேரர் கோட்டை, கோகுல் சேஷாத்திரி எழுதிய ஒரு வரலாற்றுத் தமிழ்ப் புதினம். காந்தளூர் சாலைப் போரில் ராஜராஜ சோழன் அடைந்த வெற்றியை அடிப்படையாகக் கொண்டு புனையப்பட்ட நூல். களரிப்பயிற்று, வர்மக்கலை ஆகியவை குறித்த விவரங்கள் இந்நூலில் கையாளப்பட்டுள்ளன. 2007 முதல் 2010 வரை மாத இணைய இதழான வரலாறு.காம் இதழில் தொடராக வெளிவந்த இக்கதை கமலம் புக்ஸ் பதிப்பகத்தாரால் நூலாக ஜூலை 21, 2012 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. தனது மூத்த அண்ணனான ஆதித்த கரிகாலரின் கொலைக்கும் சேர நாட்டில் அமைந்துள்ள காந்தளூர்ச் சாலைக்கும் ஏதோ ஒரு மர்மமான தொடர்பு உள்ளது என்பதைக் கண்டறியும் அருள்மொழிவர்மர் (எ) ராஜராஜ சோழன், சாலையை நேரடியாகத் தாக்கத் தயங்குகிறார். ஏனெனில் காந்தளூர்ச் சாலை சேர நாட்டில் மிகவும் மதிக்கப்படும் நான்கு கல்வி கேந்திரங்களுள் ஒன்று. மேலும் பாண்டி நாட்டைக் கடந்து சேர நாட்டை அடைவதும் எளிதான செயலல்ல. இந்தச் சிக்கலுக்கான விடைதேடி தனது ஆசிரியரான நாகப்பட்டினம் பதர திட்ட விஹாரையின் தலைவரான மஹா காசியப தேரரை தனது சுற்றத்தாருடன் சந்திக்கிறார் அருள்மொழிவர்மர். கேரள அரசியலில் பழுத்த அனுபவம் வாய்ந்த தேரரின் ஆலோசனை மிகவும் நூதனமாக உள்ளது. இப்பணிக்காகத் தேர்ந்தெடுக்கப்படும் இளைஞர்களான கம்பன் அரையனாரும் பரமன் மழபாடியாரும் எதிர்கொள்ளும் விசித்திரமான விறுவிறுப்பான அனுபவங்களே சேரர் கோட்டையின் கதை. தாங்கள் எதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டோம் என்பதை இறுதியில் கண்டறியும் இந்த இரு இளைஞர்கள், தங்களுக்கிடப்பட்ட பணியில் வெற்றிபெற வேண்டுமானால் அதற்காகத் தங்களின் உயிரையே பணயம் வைத்தாக வேண்டும் என்பதையும் அறிந்துகொள்கின்றார்கள். கதாபாத்திரங்கள் இது ஒரு புதினம் என அறியப்பட்டாலும் இது சரித்திரத்தில் உள்ள பாத்திரங்கள், சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தின் பண்டைய வர்மக்கலை மற்றும் கேரள களரிப்பயிற்று பற்றிய பல நுட்பமான விபரங்களும் சரித்திரத் தரவுகளும் கையாளப்பட்டுள்ளன.
                              
            | Book Details | |
| Book Title | சேரர் கோட்டை ( 2 பாகங்கள் ) (Serar kottai) | 
| Author | கோகுல் சேஷாத்ரி | 
| ISBN | 9788183797160 | 
| Publisher | பழனியப்பா பிரதர்ஸ் (Palaniyappa Brothers) | 
| Pages | 1050 | 
| Year | 2016 | 
| Edition | 1 | 
| Format | Paper Back | 
| Category | History | வரலாறு, Historical Novels | சரித்திர நாவல்கள் | 
