Menu
Your Cart

பராசக்தி தடை

பராசக்தி தடை
New -5 %
பராசக்தி தடை
₹1,378
₹1,450
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
FREE shipping* (within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
'பராசக்தி'யைத் தயாரிக்க ஈராண்டு செலவானது என்கிறார் சிவாஜி. படம் வெளியாகி, 72 வருடங்கள் மறைந்துவிட்டன. 'ஒருவர் தன் நூறாவது படத்தில் நடிக்கிறபோது கிடைக்கின்ற பர்ஃபெக்ஷனை, தன்னுடைய முதல் படமான 'பராசக்தி'யிலேயே கொடுத்தவர் சிவாஜி' எனக் கூறியிருந்தார் கமல். தமிழ்த்திரை வரலாற்றுப் பக்கங்களைப் புரட்டினால் அந்தக் கூற்று உண்மையல்ல என்ற அதிர்ச்சி காத்திருக்கும். சிவாஜி, அவரது நடிப்புக்காக கேலி செய்யப்பட்டார். அவரது தோற்றம் நகைப்புக்குள்ளானது. பேச்சும், உச்சரிப்பும் ஏளனம் செய்யப்பட்டன.ஆனால், பின்வந்த காலம் அவரது காயங்களுக்கு மருந்திட்டது. அவரது நடிப்பு, கலையாகக் கௌரவம் பெற்றது. நடிப்பாசையுடன் சென்னைக்கு வாய்ப்புத் தேடி வரும் இளம் நடிகர் ஒருவரின் ஆற்றலை அளவிட 'பராசக்தி' வசனமே இன்றும் ஒரு ரசமட்டமாகப் பயன்கொள்கிறது. இன்றைக்குத் தமிழ் சினிமா பல திசைகளை நோக்கி விரிந்துவிட்டது. மிகை உணர்ச்சிகள் பகடிக்கு உரியதாகிவிட்டன. வசனகாலத் திரைப்பட வகைமை வழக்கொழிந்து விட்டது. எனினும் இன்றும் தவிர்க்க முடியாத சினிமா 'பராசக்தி'. ஃபிரான்சில் 'புதிய அலை' முகிழும் முன்பே 'திராவிட சினிமா' தமிழ்த் திரையில் வேர்ப் பிடித்துவிட்டது என்பது சரித்திரம். இந்தப் புகழுக்கு வசனகர்த்தா மு.கருணாநிதியே பொறுப்பாளி. அவரது நூற்றாண்டு வேளை இது. தகுதியான இந்தத் தருணத்தில் 'பராசக்தி தடை: அச்சில் வராத அரசாங்க ரகசிய ஆவணங்கள்' என்ற பென்னம் பெரிய ஆய்வுநூல் வெளிவருகிறது. மிக விரிவாகவும் தனி நூலாகவும் வெளிவருவது இதுவே முதன்முறை. 'பராசக்தி' குறித்த பல முன்முடிவுகளைத் தகர்த்தெறிந்துள்ளார் இதன் ஆசிரியர். பல தேடல்களுக்குப் பிறகு மூல ஆவணங்களை முன்வைத்து, காய்தல் உவத்தலின்றி செம்மையாக இந்நூல் எழுதப்பட்டுள்ளது. கடற்கரய் மத்தவிலாச அங்கதம் அதில் வேங்கையின் பாய்ச்சலை நிகழ்த்தியுள்ளார்.
Book Details
Book Title பராசக்தி தடை (Parasakthi Thadai: Achil Varatha Arasanga Ragaisya Avanangal )
Author கடற்கரய் மத்தவிலாச அங்கதம் (Katarkarai Maththavilaasa Angadham)
Publisher பதிகம் பதிப்பகம் (Pathigam pathippakam)
Year 2025
Edition 1
Format Paper Back
Category Essay | கட்டுரை, ஆய்வு நூல், 2025 New Arrivals

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha