Menu
Your Cart

பாஸ்வேர்டு

பாஸ்வேர்டு
-5 %
பாஸ்வேர்டு
கோபிநாத் (ஆசிரியர்)
₹190
₹200
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
வந்தோம், உணவு உண்டு, உறங்கி ஒரு நாள் இந்த உலகத்தை விட்டுப் போனோம் என்பது வாழ்க்கை அல்ல. அப்படி வாழ்ந்தவர்களுக்கே அந்த வாழ்கை சலிப்பைத்தான் தரும். காட்டில் நிலவாக, கடலில் மழையாக மனித வாழ்க்கையும் இருந்தால் யாருக்கு என்ன லாபம்? நம்மைச் சுற்றி நடப்பதைக் கவனித்து, வாழ்க்கை என்பது உயர்ந்த குணங்களுடன் வாழ்வதுதான் என்பதை உணர்ந்து, உயர்வாக நடப்பவர்களைப் போற்றி, அவர்களிடமிருந்து கற்று, அதன்படி ஒழுகி வாழ்வதும், கயவுச் சிந்தனைகளைத் தவிர்த்து வாழ்வதும்தான் வாழ்க்கை. அப்படி உயர்வாக வாழ்வது ஒன்றும் அவ்வளவு சுலபமானதல்ல. மனத் திண்மை ஒன்றால் மட்டுமே அது சாத்தியம்! அதுவே வீரம்! ஒரு நாள் என்பது எல்லோருக்கும் ஒன்றுதான். எல்லோரைச் சுற்றியும் வாழ்க்கை இழைந்துகொண்டுதான் இருக்கிறது. ஆனால், சுற்றிலும் நடப்பதைக் கவனிப்பது எல்லோருக்கும் கைவந்த கலை அல்ல. அப்படிக் கவனித்து, பாலையும் நீரையும் பிரித்து பாலைப் பருகிச் சிறகை விரித்து வானில் எழும் அன்னப் பறவையைப் பால இருப்பவர்கள் மேன்மக்களே! இந்த நூலில் தன்னைச் சுற்றி நடந்தவற்றைக் கவனித்து அதில் மனிதர்களின் உணர்ச்சிகளை அளந்திருக்கிறார் நூல் ஆசிரியர் கோபிநாத். மனித உணர்வுகளை மதித்து நடந்தவர்களும் வந்து போகிறார்கள்; அதைக் காலில் போட்டு மிதித்துச் சின்னத்தனமாக நடந்துகொண்டவர்களும் வந்துபோகிறார்கள். ஆனாலும், யார் வழியில் நடந்தால் வாழ்க்கை நிம்மதி என்பது தெளிவாகத் தெரிகிறது! ‘இப்படியெல்லாம் நடந்துகொள்’ என்று ‘அட்வைஸ்’ செய்வது போல இல்லாமல், என்னால் மனிதனின் மகோன்னதத்தைப் பார்க்க முடிந்தது; உங்களாலும் முடியும் என்ற பாணியில் எழுதியிருப்பது சிலாகிக்கக் கூடியது. வாழ்க்கையில் சோர்ந்துபோனவர்களும், ஏமாற்றப்பட்டவர்களும்கூட மனிதன் மேல் இன்னும் நம்பிக்கைகொண்டிருப்பது ஆச்சர்யத்தை அளிக்கிறது! எவ்வளவுதான் கொடூரங்கள் சுற்றிலும் நடந்தாலும் உலகம் கொடூரமானதல்ல சாதுவானவர்களும் ஈரம் உள்ளவர்களும் இந்த உலகத்தைக் காப்பாற்றிக்கொண்டுதான் இருக்கிறார்கள் என்ற பெரிய நம்பிக்கை ஏற்படுகிறது. இவர்களால் தான் மழை இன்னும் பெய்கிறது. இது எல்லாமும் நம்மைச் சுற்றி நடப்பதைக் கூர்ந்து கவனித்தால் மட்டுமே சாத்தியம். மனிதத்தைப் போற்றும் இந்த நூல் உங்களை ஈர்க்கும் என்பது திண்ணம்!
Book Details
Book Title பாஸ்வேர்டு (Password)
Author கோபிநாத் (Gopinath)
ISBN 9788184765564
Publisher விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

ப்ளீஸ்! இந்தப் புத்தகத்தை வாங்காதீங்க!ப்ளீஸ்! இந்த புத்தகத்தை வாங்காதீங்க ஏன்னா இந்த புத்தகத்தில் நான் எதையும் புதிகாக சொல்லி விடவில்லை என்று முன்னுரையில் ஆரம்பித்த ஆசிரியர் ஒரே மூச்சில் இந்த புத்தகத்தை முழுவதும் படிக்கும்படி செய்து உள்ளார். இது உங்களுக்கு உங்களை அடையாளம் காட்டும், உங்கள் சிறப்பியல்..
₹137 ₹144
நேர் நேர் தேமாகலை, இலக்கியம், விளையாட்டு, அரசியல், சினிமா, வியாபாரம், சமூக சேவை போன்ற துறைகளில் அடிஎடுத்து வைக்க ஆயத்தமாகிக் கொண்டிருப்பவரா நீங்கள்? வெற்றிக்கான இலக்கணத்தை துறைசார்ந்த பிரபலங்களின் நேர்க்காணல்கள் மூலம் சுவாரஸ்யமான தொகுப்பாக பதிவுசெய்திருக்கிறார் கோபிநாத்...
₹211 ₹222
எல்லாருக்கும் வணக்கம் (நிமிர்ந்து நில் பாகம் 2)குழந்தைகள், நம் மேட்டிமைத்தனத்தை, நாகரிகத்தை பொருளாதார உயர்வை, அறிவாளித்தனத்தை வெளிப்படுத்துவதற்கான கருவிகளாக குறியீடுகளாக முன்னிறுத்தப்படுவதுதான் இன்றைய குழந்தைகளின் நவீனப்பிரச்சனை.நாம் நினைத்தபடி குழந்தை நடந்துகொள்ள வேண்டும் என்று நினைப்பது நியாயமென்ற..
₹166 ₹175
சரியான வார்த்தைகள் சரியான வரிசையில் இருக்கும்போது கவிதை வந்துவிடுகிறதா? தெரியவில்லை. ஆனாலும் ஒரு நல்ல கவிதையைப் படிக்கும்போது ஒரு நல்ல இசையைக் கேட்ட சிலிர்ப்பை உணர முடிகிறது. அந்த உணர்வைத் தரும் எதுவும் எனக்குக் கவிதையாகவே தெரிகிறது. சீன இயக்குநர் ஸாங் Road home ஒரு காட்சிக் கவிதை. என்யோமோரிக்கானின்..
₹95 ₹100