Menu
Your Cart

பீலர்களின் பாரதம்

பீலர்களின் பாரதம்
-5 %
பீலர்களின் பாரதம்
பகவான் தாஸ் (ஆசிரியர்), பெ.சரஸ்வதி (தமிழில்)
₹257
₹270
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
“பீலர்களின் பாரதம்" என்னும் இந்நூல் பீலர் பழங்குடிகளின் வாய்மொழி இலக்கியமாகும். பீலர்கள் வட இந்தியாவில் குஜராத் மற்றும் இராஜஸ்தானில் வசிக்கும் பழங்குடியினர். இந்நூல் வழக்கமான மகாபாரதக் கதையைப் போன்று இல்லாமல் பீலர் பழங்குடிகளின் சமூக, மத மற்றும் வாழ்க்கைச் சூழலைப் பிரதிபலிக்கும் கண்ணாடி போல் அமைந்துள்ளது. கதைமாந்தர்கள் மூலம் பீலர்கள் சமூகத்தில் நிலவும் பழக்கவழக்கங்கள், சடங்குகள் மற்றும் சமூக அமைப்பு போன்றவற்றை உணர்ந்துகொள்ள முடிகிறது. எழுத்து வடிவம் இல்லாமல் பேச்சு வழக்கில் மட்டுமே உள்ள பூர்வகுடிகள் இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். அவர்களுடைய பேச்சு வழக்கில் தொன்று தொட்டுப் புழக்கத்தில் உள்ள இலக்கியங்கள் வாய்மொழி இலக்கியங்களாகவே உள்ளன. அவ்வாய் மொழி இலக்கியங்கள் பாடல்கள், கதைகள், காவியங்கள், மகா காவியங்கள் ஆகியவற்றைத் தன்னகத்தே கொண்டுள்ளன. இந்தியப் பண்பாடு மற்றும் கலாச்சாரக் கூறுகளை உணர்வதற்கு, வாய்மொழி இலக்கியங்களையும் அறிந்துகொள்வது அவசியமாகிறது. இதனைக் கருத்தில் கொண்டு சாகித்திய அகாதெமி, இந்தியாவில் உள்ள பழங்குடியினர்களின் வாய்மொழி இலக்கியங்களைத் தொகுத்தும், மொழிபெயர்த்தும் அனைத்து மொழிகளிலும் வெளியிட்டு வருகிறது.
Book Details
Book Title பீலர்களின் பாரதம் (Bheelargalin Bharatham)
Author பகவான் தாஸ் (Bhagwan Das)
Translator பெ.சரஸ்வதி
Publisher சாகித்திய அகாதெமி (Sahitya Akademi)
Pages 240
Published On Aug 2021
Year 2021
Edition 1
Format Paper Back
Category பழங்கால இலக்கியங்கள், Literature | இலக்கியம், Literary Lecture | இலக்கியப் பேருரை

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author