Menu
Your Cart

குறையொன்றுமில்லை (8 பாகங்கள்)

குறையொன்றுமில்லை (8 பாகங்கள்)
Out Of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
முன்னுரை: "ஆஸ்திக ஸமாஜம்" என்றாலே ஈரரசு படாதபடி சென்னையில் வீனஸ் காலனியில் உள்ள "ஆஸ்திக ஸமாஜ"த்தையே குறிக்கும். கலை பல வளர்க்கும் மாபெரும் ஸ்தாபநம் அது. அதில் வருடா வருடம் உபந்யஸிக்கக் கொடுத்து வைத்தவர்களில் அடியேனும் ஒருவன். சென்ற வருடம் ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் முதல் திருநாமமான "விச்வம்" என்ற சொல்லின் பெருமையை விவரித்துக் கொண்டிருக்கும் பொது கல்கி வார இதழின் பதிப்பாசிரியர் உயர்திரு கி.ராஜேந்திரன் அவர்கள் நாள்தோறும் வந்து கேட்டு ஆனந்தித்தருளினார். உபந்யாசம் முழுவதும் ஒலிநாடாவில் ஏற்றப்பட்டது. கலியின் வலிமையைப் போக்கும் கல்கியில் உபந்யாஸத்தின் தொகுப்பு ஒலிநாடாவில் பதிவானதைக் கேட்டு மூதறிஞர் ராஜாஜி அவர்களின் அருள்வாக்கின்படி "குறையொன்றுமில்லை" என்கிற தலைப்பில் 47 வாரங்கள் தொடர்ந்து வந்தது. இதைத் தனிப் புத்தகமாக வெளியிட வேண்டும் என்ற உயர்ந்த கருத்துடன் உயர்திரு கி.ராஜேந்திரன் அவர்களும், "வானதி பதிப்பகத்தின்" உரிமையாளர் உயர்திரு திருநாவுக்கரசு அவர்களும் கலந்தாலோசித்து அதைத் தற்போது செயல்படுத்தியிருக்கின்றனர். "குறையொன்றுமில்லை" படிப்பவர்க்குக் குறையொன்றுமில்லையே" - முக்கூர் லக்ஷ்மீநரஸிம்ஹாசாரியார். காருண்யம் பகவானிடத்திலே நாம் எல்லாவற்றையும் கொடுத்தாலும், ஒரு எலுமிச்சம்பழத்தைக் கொடுத்துவிட்டு ராஜ பதவியை கேட்கிற மாதிரிதான். நாம் எது பண்ணினாலும் அவனுடைய காருண்யத்துக்கு முன்பு அது விலை செல்லாது. வேதம் வேத கோஷம் நம்மை ஈர்த்து உட்கார வைக்கிறது. பாராயணம் முடியும் வரை உட்கார்ந்து கேட்க்கும் எண்ணம் யாருக்கு வருகிறதோ, அவரை பகவான் நிச்சியம் பார்ப்பான். தாயார் பொறுமையே உருவானவள் பூமி பிராட்டி. நாம் எவ்வளவுதான் தப்பு செய்தாலும் அதை பகவானிடத்தில் சொல்லமாட்டாள். நாம் ஒரு துளி நல்லது செய்தல் கூடஅதை பெரிதுபடுத்தி அவனிடத்திலே சொல்லுவாள். அவ்வளவு காருண்யம் நம்மிடத்திலே அவளுக்கு. அதிதி தேவோ பவ கிரஹத்துக்கு வரக்கூடிய அதிதிகளிடத்திலே எம்பெருமான் இருக்கிறான். அதனால் தான் எம்பெருமானை வேதம் சொல்கிறபோது 'மாத்ரு தேவோ பவ ! பித்ரு தேவோ பவ ! ஆச்சார்ய தேவோ பவ ! அதிதி தேவோ பவ ! என்கிறது. அதிதியை தெய்வமாக நினைக்க வேண்டும். ஏனென்றால் பகவானே நமக்கு இவன் அன்னமிடுகிறானா என்று அதிதியாய் பார்க்க வருவான். ஆகையினாலே, அதிதிகளாய் வரக்கூடியவர்களை உடனே வரவேற்று உபசரிக்க வேண்டும்.
Book Details
Book Title குறையொன்றுமில்லை (8 பாகங்கள்) (kuraiyondrumillai)
Author முக்கூர் லஷ்மிநரசிம்மாச்சார்யார்
Publisher வானதி பதிப்பகம் (Vanathi pathipagam)
Published On Feb 2020
Year 2010
Edition 35
Format Paper Back
Category Spirituality | ஆன்மீகம், பழங்கால இலக்கியங்கள், புராணம், Essay | கட்டுரை

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha