Menu
Your Cart

சாமியாரும் குழந்தையும் சீடையும்

சாமியாரும் குழந்தையும் சீடையும்
-5 % Out Of Stock
சாமியாரும் குழந்தையும் சீடையும்
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
தமிழ்ச் சிறுகதை இலக்கியத்தை உலகத் தரத்துக்கு உயர்த்தியவர் புதுமைப்பித்தன், ‘சிறுகதை மன்னன்’ என்று புகழ் பெற்ற புதுமைப் பித்தனின் இயற்பெயர் சொ.விருதாசலம். கடலூரை அடுத்த திருப்பாதிரிப்புலியூரில் 1906-&ம் ஆண்டு ஏப்ரல் 25&-ம் தேதி பிறந்தார். புதுமைப்பித்தன் எழுத்துப்பணியில் முழுவீச்சில் ஈடுபட்டது 15 ஆண்டுகளுக்கும் குறைவான காலம்தான். அக்குறுகிய கால அளவிலேயே அவர் நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், கட்டுரைகள், 15 கவிதைகள், சில நாடகங்கள், புத்தக விமர்சனங்கள் என எழுதி எழுத்தோடு இரண்டறக் கலந்தவர் அவர். அவரது எழுத்துக்கள் அவரைப் புரட்சி எழுத்தாளராக அடையாளம் காட்டின. தனது எழுத்தில் அவர் கையாண்ட விஷயங்களும், கதாபாத்திரங்களும் தமிழ்ப் புனைவு உலகுக்குப் புதியதாய் அமைந்தன. தமிழ் இலக்கிய உலகம் சில எழுதப்படாத விதிகளால் முடக்கப்பட்டிருப்பதாக அவர் கருதினார். இலக்கியங்கள் பலதரப்பட்ட மனிதர்களின் வாழ்வியலை பிரதிபலிப்பது. அதனால்தான் ‘மகா இலக்கியங்கள், பலவித கோணங்களிலிருந்தும் வாழ்வை நோக்குவதைத் தடைசெய்வதற்காகக் கட்டம் போட்டு மாட்டப்பட்ட படங்கள் அல்ல’ என்ற ஆழமான கருத்தை அவர் முன்வைத்தார். நம் வாழ்வு எப்படிப்பட்டது என்பதை புதுமைப்பித்தனின் எழுத்துக்களை வாசித்தால் தெரிந்துவிடும். வாழ்வின் அர்த்தங்கள் குறித்த நமது மதிப்பீடுகளை நாம் அளவிடுவதை தவிர்த்து எதார்த்தத்தை உணர்ந்தாலே வாழ்வு பூரணமாகும். உயரிய இலக்கிய பணிகளோடு, பத்திரிகைகளில் பணிபுரிந்த புதுமைப்பித்தன் மணிக்கொடி இயக்கம் தொடங்கி தமிழ் இலக்கியத்தை மேம்படுத்தியவர். அவரது படைப்புக்களை இலக்கிய சிகரங்கள் வரிசையில் வெளியிடுவதில் விகடன் பிரசுரம் பெருமிதம் கொள்கிறது. இளைய தலைமுறை புதுமைப்பித்தனை வாசிக்க வேண்டும் என்பதும் எமது விருப்பம். அடித்தட்டு மக்களின் வாழ்வியலை பிரதிபலிக்கும் எழுத்தாக புதுமைப்பித்தனின் படைப்புக்கள் அமைந்திருக்கின்றன. புதுமைப்பித்தன் வாசிப்புக்கு மட்டுமல்ல...
Book Details
Book Title சாமியாரும் குழந்தையும் சீடையும் (Samiyarum Kuzhanthai Seedaiyum)
Author புதுமைப்பித்தன் (Pudhumaipithan)
Publisher விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Category Short Stories | சிறுகதைகள்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

நவீனத் தமிழின் ஊற்று முகங்களில் ஒன்று புதுமைப்பித்தன். தமிழ் உரைநடைக்குப் புதிய உயிரும் புனைகலைக்குப் புதிய ஒளியும் வழங்கியவை அவரது படைப்புகள். காலத்தின் முன் மாற்றுக் குன்றாமல் இன்றும் மிளிரும் அவரது சிறுகதைகளே நமது சிறுகதைக் கலைக்கு இலக்கணமும் எடுத்துக்காட்டு களுமாக நிலைத்திருப்பவை. இத்தொகுப்பு ப..
₹276 ₹290
புதுமைப்பித்தன் கதைகள் - அ.இரா.வேங்க்டாசலபதி:செம்பதிப்பு எனச் சிறப்புப்பெயர் பெற்றுவிட்ட இத்தொகுப்பில் புதுமைப்பத்தன் கதைகள் அனைத்தும் இடம்பெறுகின்றன. காலவரிசையில் கதைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. முதன்முதலில் இக்கதைகள் வெளியான இதழ்களோடும் புதுமைப்பித்தன் காலத்தில் வெளியான முதல் பதிப்புகளோடும் ஒப்பிட..
₹594 ₹725
இந்நூலில் புதுமைப்பித்தனின் கட்டுரைகள், மதிப்புரைகள், அதிகாரம் யாருக்கு?, பேஸிஸ்ட் ஜடாமுனி, கப்சிப் தர்பார், ஸ்டாலினுக்குத் தெரியும் ஆகியவை அடங்கியுள்ளன. இதுவரை நூலாக்கம் பெறாத நான்கு கட்டுரைகளோடு, ‘இரவல் விசிறி மடிப்பு’ என்ற புகழ்பெற்ற மதிப்புரையும், க. நா. சு. வுக்கு எழுதிய மறுப்புரையும் முதன்முத..
₹470 ₹495
'செம்பதிப்பு' எனச் சிறப்புப்பெயர் பெற்றுவிட்ட இத்தொகுப்பில் புதுமைப்பித்தன் கதைகள் அனைத்தும் இடம்பெறுகின்றன...
₹713 ₹750