Menu
Your Cart

புரட்சிகர மருத்துவர்கள்

புரட்சிகர மருத்துவர்கள்
-5 %
புரட்சிகர மருத்துவர்கள்
₹285
₹300
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
‘புரட்சிகர மருத்துவர்கள்’ வெனிசுலாவின் புதுமையான, ஊக்கமளிக்கும் ஒரு சமுதாய உடல்நலப் பராமரிப்புத் திட்டத்தின் நேரடித் தகவல்களை வாசகர்களுக்கு அளிக்கிறது. இந்தத் திட்டம் பெருவாரியான ஏழைகள் தாங்களாகவே செயல்படுத்திக்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. நீண்டகாலப் பங்கேற்பிலிருந்தும் ஆழமான ஆய்விலிருந்தும் கிடைத்த தகவல்களைப் பயன்படுத்தி ஸ்டீவ் புரோவர், இந்த நூலில் வெனிசுலாவின் ஒருங்கிணைந்த சமுதாய மருத்துவத் திட்டம் தோன்றிய கதையைச் சொல்கிறார். இதன்படி மருத்துவ ஆசிரியர்கள் கிராமப்புறங்களுக்கும் ஏழைகள் வசிக்கும் நகர்ப்புறங்களுக்கும் சென்று விவசாயிகள், தொழிலாளர்களிடையே ஆள்களைச் சேர்த்து, அவர்களை மருத்துவர்களாக்குவதற்குப் பயிற்சியளிக்கிறார்கள். இத்தகைய திட்டங்கள் முதன்முதலில் கியூபாவில் உருவாக்கப்பட்டன. கியூபாவைச் சேர்ந்த மருத்துவப் பணியாளர்கள் இன்று வெனிசுலாவிலும் உலகெங்கும் ஆலோசகர்களாகவும் அமைப்பாளர்களாகவும் முக்கியப் பங்கு வகிக்கிறார்கள். இந்தப் ‘பன்னாட்டு மாதிரி’ பெரும் வெற்றி பெற்றிருக்கிறது; இன்று கியூபா, மருத்துவத்திலும் மருத்துவப் பயிற்சியிலும் ஓர் உலக முன்னோடியாக விளங்குகிறது. மேலும் கியூபா மூலம் உதவிபெற்ற வெனிசுலா மக்கள் இப்போது எவ்வாறு இருக்கிறார்கள் என்பதையும் புரோவர் விவரிக்கிறார். ஆனால் இந்தத் திட்டத்திலும் சவால்கள் இருக்கின்றன. இது வெனிசுலாவின் மரபுவழிப்பட்ட மருத்துவர்களிடமிருந்தும் வெனிசுலா-கியூபா நாடுகளின் புரட்சிக்கு எதிரான சக்திகளிடமிருந்தும் கடுமையான பகையை எதிர்கொண்டு வருகிறது. ‘புரட்சிகர மருத்துவர்கள்’இதிலுள்ள தடைகளையும் விவரிக்கிறது; அவற்றையும் மீறி, ஏழைகளின் நலவாழ்வுக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு சமூகம், தான் எந்த மக்களுக்குச் சேவையாற்றுகிறதோ, அவர்களுக்கு நேரடியாக அதிகாரமளிக்கிறது; தேவையான உடல்நலப் பராமரிப்பை வழங்கி, யதார்த்தத்தில் அந்த உறுதிப்பாட்டை நடைமுறைப்படுத்த முடியும் என்பதையும் நிரூபிக்கிறது. மக்களுக்கு மருத்துவ அதிகாரம் அளிக்க விரும்புபவர்கள் படிக்க வேண்டிய புத்தகம்.
Book Details
Book Title புரட்சிகர மருத்துவர்கள் (Puratchikara maruthuvarkal)
Author ஸ்டீவ் புரோவர்
Translator கு.வி.கிருஷ்ணமூர்த்தி (Ku.Vi.Krishamoorthy)
Publisher அடையாளம் பதிப்பகம் (Adayalam Publication)
Pages 320
Published On Feb 2022
Year 2022
Edition 1
Format Paper Back
Category Translation | மொழிபெயர்ப்பு, Essay | கட்டுரை, 2022 New Arrivals | 2022 புதிய வெளியீடுகள்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

பத்தொன்பாதம் நூற்றாண்டின் கடைசிக் காலாண்டிலும். இருபதாம் நூற்றாண்டில் முதல் இரு காலாண்டுகளிலும் பிரிட்டனில் ஏற்ப்பட்ட வளர்ச்சியைப் பார்க்கும் போது இதே காலகட்டத்தில் இந்தியாவில் தனிநபர் உண்மை வருமானம் வீழ்ச்சியடைந்ததையும் கோடிக்கணக்கான மக்கள் பஞ்சத்தில் மாண்டதையும் இணைத்துப் பார்ப்பதை தவிர்க்க முடியா..
₹808 ₹850
மானுட நடத்தை அல்லது இயல்பு என்பது காலங்காலமாக ஒரு புதிராகவே இருந்துள்ளது. மானுட உள்ளம், இயல்பையும் நடத்தையையும் கொண்டு செலுத்துவது என்பது தெரிந்திருந்தாலும், தனது உள்ளம் என்பதைக் காட்டிலும் ஒரு மனிதனுக்கு அந்நியோன்னியமானது உலகில் எதுவும் இல்லை என்றாலும் அது குறித்து மானுடத்தின் காத்திரமான ஞானம் குறை..
₹470 ₹495