Menu
Your Cart

நேருவின் ஆட்சி

நேருவின் ஆட்சி
-5 %
நேருவின் ஆட்சி
ரமணன் (ஆசிரியர்)
₹126
₹133
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
நேருவின் ஆட்சிக்காலம் பற்றி தமிழில் வெளியாகும் முதல் புத்தகம் இதுவே. சுதந்தர இந்தியாவின் நல்லதும் கெட்டதும் நேருவிடம் இருந்தே தொடங்குகின்றன. நேருவின் ஆட்சி பற்றி போற்றுவோரும் தூற்றுவோரும் ஒரே வாக்கியத்தைத்தான் சொல்கிறார்கள். “எல்லாவற்றுக்கும் நேருதான் காரணம்.” ஒரு தரப்பு பெருமிதத்துடன். இன்னொரு தரப்பு, பெருங்குறையுடன். அதற்குக் காரணம், நேருவின் ஆட்சிக்காலம் பற்றிய அழுத்தமான பதிவுகள் எதுவும் பிரத்யேகமாக எழுதப்படவில்லை என்பதுதான். தமிழில்தான் இல்லை என்றால், ஆங்கிலத்திலும்கூட சொற்ப பதிவுகளே வந்துள்ளன. ஆனால், அவற்றிலும் அனைத்து விஷயங்களும் பேசப்படவில்லை. காஷ்மீர், பாகிஸ்தான், சீனா என்ற மூன்று அம்சங்களை மட்டுமே அந்தப் பதிவுகள் அதிகம் பேசுகின்றன. ஆனால் அதைத் தாண்டியும் பேசுவதற்கும் புரிந்து கொள்வதற்கும் ஏராளமான விஷயங்கள் இருக்கின்றன. இந்தியப் பிரிவினை, பாகிஸ்தானுடனான உறவும் முறிவும், காஷ்மீர் விவகாரம், இந்திய சீன உறவு, மொழிப் பிரச்னை, மதவாத அரசியல், இட ஒதுக்கீடு, இந்து - முஸ்லீம் உறவுகள் என்று சுதந்தர இந்தியாவின் ஆரம்பகால அசைவுகள் அனைத்துக்கும் நேருவின் ஆட்சியே பொறுப்பு. மேற்கண்ட விஷயங்களின் இன்றைய முன்னேறிய அல்லது பின்தங்கிய நிலைக்குப் பின்னணியில் இருப்பதும் நேரு எடுத்த முடிவுகளே. பதினெட்டு ஆண்டுகளையும் பதினெட்டு அத்தியாயங்களில் நுணுக்கமாகவும் அழுத்தமாகவும் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இந்தியாவின் சமகால அரசியலைப் புரிந்துகொள்ள விரும்பும் ஒவ்வொருவரும் இந்தப் புத்தகத்தை வாசிக்கவேண்டும். - பதிப்புரையிலிருந்து
Book Details
Book Title நேருவின் ஆட்சி (Nehruvin Aatchi)
Author ரமணன் (Ramanan)
ISBN 9789383067176
Publisher சிக்ஸ்த்சென்ஸ் (Sixthsense Publications)
Pages 151
Year 2014

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

* இந்தியாவுக்கும் சீனாவுக்கும் பல ஒற்றுமைகள் உள்ளன. இரண்டுமே பெரிய ஆசிய நாடுகள். மக்கள் தொகை இரண்டு நாடுகளிலும் அதிகம். இரண்டுமே தொன்மையான நாகரிக வரலாற்றைக் கொண்டுள்ளன. இயற்கை வளங்களும் மனித வளமும் குறிப்பிடத்தக்க அளவில் அதிகம். ஏழைமை, ஊழல், சுற்றுச்சூழல் மாசு என்று இரு நாடுகளின் பிரச்னைகளும்கூடப் ப..
₹86 ₹90
எது கறுப்புப் பணம்? இது எப்படி உருவாகிறது? யாரெல்லாம் வைத்திருக்கிறார்கள்? எவ்வளவு?..
₹76 ₹80
நேதாஜி என்ன ஆனார்? இத்தனை ஆண்டுகள் கழிந்த பிறகும், எத்தனையோ விசாரணை ஆணையங்களை நியமித்த பிறகும், பல்வேறு நாடுகளில் பல்வேறு ஆய்வுகளும் விசாரணைகளும் நடத்தப்பட்ட பிறகும் சுபாஷ் சந்திர போஸ் குறித்த மர்மம் நீங்கியபாடில்லை. இந்திய விடுதலைக்காக நேதாஜி வடிவமைத்த ரகசியத் திட்டம் என்ன? இனவெறி கொண்ட ஹிட்லருடன் ..
₹214 ₹225