Menu
Your Cart

ரத்த உறவு

ரத்த உறவு
New -5 % Coming Soon
ரத்த உறவு
யூமா வாசுகி (ஆசிரியர்)
₹570
₹600
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.

இந்த வாழ்க்கைதான் என்ன, மனித மனங்களில் தாழ்வும் உயர்வும் ஏன் இப்படிக் கூடிக்கலந்து நிற்கின்றன. வாழ்க்கைக்கு என்றேனும் விமோசனம் உண்டா என்பனபோன்ற விசாரணைக்குள் நம்மை ஆட்படுத்தும் படைப்பு இது. புதுமைப் படைப்புகளுக்கு வகுக்கப்பட்டிருக்கும் தத்துவங்கள் சார்ந்த யோசனைகளே அற்ற ‘ரத்த உறவு’, புதுமைப் படைப்பின் சிறந்த உதாரணமாக இருப்பது, படைப்பு சார்ந்த கருத்தோட்டங்களுக்கும் படைப்பு நிகழும் இருட்குகைக்கும் இடையேயான முரணையே காட்டுகிறது.

ரத்த உறவு நாவல் குறித்து எழுத்தாளர் சுந்தர ராமசாமி அவர்கள் வெளிச்சப்படுத்தும் வரிகள் இவை. தமிழின் யதார்த்தவாதப் புனைவிலக்கிய எழுத்தாளுமைகளின் நிறைவரிசையில், எழுத்தாளர் யூமா வாசுகி படைத்திருக்கும் நாவல்கள் மற்றும் கதைகளின் அடர்வு என்பது எளிமையெனத் தோன்றும் பேராழம். மானுட மனதின் உள்விசாரணனை உரையாடல்களையும், அவமானப்பட்ட மனதின் அம்மணங்களையும் வீரியமிகு நெடியில் வெளிப்படுத்துவன யூமா வாசுகியின் ஒவ்வொரு படைப்பும்.

எழுத்தாளர் யூமா வாசுகியின் ‘ரத்த உறவு’ நாவலைத் தன்னறம் நூல்வெளி வாயிலாக வெளியிட எண்ணம் கொண்டிருக்கிறோம். கிட்டத்தட்ட நாநூறு பக்கங்கள் கொண்ட நாவலாக ரத்த உறவு உருப்பெறவுள்ளது. இத்தகையதொரு ஆக்கத்தின் அச்சுப்பதிப்பு உரிமை சமகாலத்தில் தன்னறத்திற்கு நேர்ந்தமை மிகுந்த மகிழ்வையும் நிறைவையும் அளித்துள்ளது. இந்நாவலை அதற்குரிய பதிப்புநேர்த்தியில் அச்சுப்படுத்த வாசகத் தோழமைகளின் நல்லுதவி மிகவும் அவசியமாகிறது. ஆகவே, இந்நாவலுக்கான முன்வெளியீட்டுத் திட்டத்தை அறிவிக்கிறோம்.

இருபத்தி ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு செம்பதிப்பாக, இந்நாவலை தேர்ந்த அச்சுத்தரத்தில், கெட்டி அட்டைப் புத்தகமாக வெளியிட உள்ளோம். ஓர் முன்னோடிப் படைப்பாளியின் முதிர்ந்த புனைவுப்பார்வையிலிருந்து விரிகிற இந்நாவல், இலக்கியத்தின் நிகர்சாத்தியங்களுள் ஒன்றாக மலர்ந்தெழக் காத்துநிற்கிறோம்.

ரத்த உறவு (நாவல்)
யூமா வாசுகி

Book Details
Book Title ரத்த உறவு (Raththa Uravu)
Author யூமா வாசுகி (yoma vasuki)
Publisher தன்னறம் நூல்வெளி (Thannaram Publications)
Year 2026
Edition 1
Format Hardbound
Category Novel | நாவல், 2026 New Releases

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha