Menu
Your Cart

லவ்வாலஜி

லவ்வாலஜி
-5 % Out Of Stock
லவ்வாலஜி
எஸ்.கே.முருகன் (ஆசிரியர்)
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
மனித உலகின் உயிர்ச்சுழற்சியே காதல்தான்! ‘காதலிக்க நேரமில்லை!’, ‘காதலிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்!’, ‘காதல் படுத்தும் பாடு!’, ‘காதலுக்குக் கண்ணில்லை!’, ‘காதல் கசக்குதய்யா!’, ‘காதல் போயின் சாதல், சாதல், சாதல்..!’ - இப்படி, காதல் அனுபவங்களை நாவலாகவும், கவிதையாகவும், நாடகமாகவும், சினிமாவாகவும் காலம் காலமாகப் பதிவுசெய்து வைத்திருந்தாலும்... வெற்றியோ தோல்வியோ, காதல் பற்றி எப்போது பேசினாலும் கரும்புபோல இனிக்கவே செய்கிறது. அன்பு, நேசம், நளினம், ஆசை, மகிழ்ச்சி, உற்சாகம், தைரியம், வீரம், பெருமிதம், அடக்கம், வெட்கம், பாராட்டு, தூய்மை, நம்பிக்கை, ரகசியம், கற்பு - இவை அனைத்தும் காதலுக்கு மரியாதை தரும் வார்த்தைகள். ‘காதலுக்கு இலக்கணம்’ என்று பல்வேறு அறிஞர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள் காதல் உணர்வுகளை இப்போதும் எழுதிக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஆணுக்கும் பெண்ணுக்கும் காதல் உணர்வு என்பது பொதுவானது. எந்த வயதில், யாருக்கு, எப்போது காதல் உணர்ச்சி எழும் என்று சொல்ல முடியாது. ஆனால், அந்தக் காதல் உடனே நிறைவேற வேண்டும் என்று தவமாய் தவமிருப்பவர்கள் ஏராளம். காதல் கைகூடி வந்தபிறகு அதில் திளைத்து வாழ்பவர்கள் ஏராளம். அதே சமயத்தில், ‘காதல் தோல்வி’ என உயிரை மாய்த்துக்கொள்பவர்களும் ஏராளம்! காதலில் தோல்வி அடையாமல், காதலை வளர்க்க விரும்புபவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய பத்து மந்திரங்களை, இந்த நூலில் அழகாகத் தொகுத்து எழுதி இருக்கிறார் எஸ்.கே.முருகன். காதலை ரசனை மிக்க வாழ்க்கையாக அமைத்துக்கொள்ள விரும்பும் காதலனும் காதலியும் செய்ய வேண்டியது, செய்யக் கூடாதது, காதல் உணர்வை அலட்சியப்படுத்தினால் ஏற்படும் விளைவுகள், பெற்றோர்களால் வரும் ஆபத்து, காதல் கல்யாணத்தால் சமூகத்தில் எழும் பிரச்னைகள்... என காதலைப் பற்றி முழு ஆராய்ச்சி செய்து, விறுவிறுப்பாக எழுதி இருக்கிறார் நூலாசிரியர். அனைவராலும் காதலிக்கப்பட வேண்டிய நூல் இது.
Book Details
Book Title லவ்வாலஜி (Lovealogy)
Author எஸ்.கே.முருகன் (S.K.Murugan)
Publisher விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

ஸ்பெக்ட்ரம் ஊழல் கலர் கலராக ஆடும் இன்றைய காலகட்டத்தில், ‘காமராஜரைப் போல ஒரு அரசியல்வாதி மீண்டும் பிறந்து நாட்டைச் சீர்திருத்த மாட்டாரா’ என ஏக்கத்துடன் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள் மக்கள். காரணம், மக்கள்நலன் ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு வாழ்ந்த நேர்மையான அரசியல் துறவி அவர். காமராஜர், த..
₹200 ₹210
தினசரி வாழ்க்கையில் பலவித ஏற்றத்தாழ்வுகளைச் சந்திக்கும் நமக்கு, தன்னம்பிக்கை வார்த்தைகள்தான் பல்வேறு நிலைகளில் பெரிதும் ஆறுதலாக இருக்கும். சாதாரண மனிதர்களுக்கு வரும் துன்பங்கள், தடைகள், சிக்கல்கள் போன்றவை சாதனை மனிதர்களையும் விட்டுவைப்பதில்லை. ‘துன்பங்களும் துயரங்களும் தவிர வாழ்க்கையில் வேறு என்ன மி..
₹128 ₹135
எளிய தமிழில் சித்தர் மருத்துவம்சித்தர்களின் பாடல் வரிகளுக்கான பொருளை எளிய கதைகள் மூலம் விளக்குவதுடன் சித்தர்கள் பற்றிய வரலாற்றையும் இணைத்துத் தருகிறது இந்தப் புத்தகம்.நாம் மனதில் என்ன நினைக்கிறோமோ, அந்த வாசனையை மனோரஞ்சிதப் பூவில் நுகர முடியும் என்பார்கள். அதுபோலவே, சித்தர் பாடல்கள் ஒவ்வொரு மனிதருக்க..
₹185 ₹195
கடவுளின் நிறம் வெண்மைவிருதுநகரைச் சேர்ந்தவர். பத்திரிகையாளராக, எழுத்தாளராக மற்றும் மனநல ஆலோசகராக வலம் வருபவர். மனைவி ஜோதி, மகன் நிர்மல், மகள் நிலா ஆகியோருடன் சென்னையில் வசிக்கிறார். ‘மந்திரச் சொல்’, ‘ஞானகுரு’ போன்ற தொடர்களை விகடன் இதழ்களில் எழுதி இருக்கிறார். இவை தவிர, ‘தலையணை மந்திரம்’, ‘வெற்றி தரு..
₹284 ₹299