Menu
Your Cart

விளம்பர உலகம்

விளம்பர உலகம்
-5 % Out Of Stock
விளம்பர உலகம்
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
விளம்பரங்களுக்கு விளம்பரங்கள் தேவை இல்லை.எந்த ஒன்றும் பிரபலமாக வேண்டும் என்றால் அதற்கு கைகொடுப்பது விளம்பரங்கள்தான்.சோப்பு, சீப்பு, கண்ணாடி முதல் கன்ஸ்ட்ரக்ஷன் கான்ட்ராக்ட் வரை எதுவானாலும் வெவ்வேறு விதமாக பல யுத்திகளில் விளம்பரங்கள் வெளியாகி அசரடிக்கின்றன. இதைச் செய்தித்தாள்கள், தொலைக்காட்சிகள், சுவரொட்டிகள், திரையரங்குகள் மூலம் நாம் அன்றாடம் பார்த்து வருகிறோம்.அப்படி வணிகத்துக்கு உயிர்நாடியாகிவிட்ட விளம்பரத் துறை கோடிகள் புரளும் கனவுத் தொழிற்சாலை.இந்தத் துறையின் ஆரம்ப காலம் முதல் ஒவ்வொரு காலகட்டத்தையும் இங்கே அற்புதமாகப் படைத்திருக்கிறார் நூல் ஆசிரியர் எஸ்.எல்.வி.மூர்த்தி.விளம்பர வியூகம் எங்கிருந்து எப்போது தொடங்கியது, அது படிப்படியாக எப்படி பல மாற்றங்களைக் கண்டுள்ளது, பல பன்னாட்டு நிறுவனங்களும் உள்ளூர் நிறுவனங்களும் விளம்பரங்களை துணை கொண்டு தங்கள் பொருட்களை எப்படியெல்லாம் சந்தைப்படுத்தியுள்ளன என்பதையெல்லாம் தெள்ளத்தெளிவாக வருடங்களின் புள்ளிவிவரங்களோடு கொடுத்திருப்பது மகத்தானது.செய்தித்தாள், வானொலி, தொலைக்காட்சி என்று தொழில்நுட்ப வளர்ச்சியோடு சேர்ந்தே விளம்பர உலகம் வளர்ந்து, இன்றைய கால கட்டத்துக்கு ஏற்ப இணையதளம் வரை மாறியிருப்பதை அழகாக விளக்கியுள்ளார் நூல் ஆசிரியர்.ஒரு பொருளின் தரம், விலை நிர்ணயம், அந்தப் பொருளின் பயன்பாடு, எந்தப் பொருளுக்கு விளம்பரத்தை எப்படி கையாண்டால் மக்களை அது கவரும், மார்க்கெட்டில் வெற்றி பெறும் என்பது போன்ற பல தகவல்கள் உள்ளன. மார்க்கெட்டிங் பற்றி அறியாதவர்களும்கூட புரிந்துகொள்ளும் விதமாக, சுவாரஸ்யமாக, எளிமையான நடையில் இந்த நூலை உருவாக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. வணிக வியூகத்தை அழகாகச் சொல்லித் தரும் இந்த நூல் அனைவரும் படித்து பயன்பெறக்கூடிய செய்திகளைக் கொண்ட விளம்பர உலகின் வழிகாட்டி.
Book Details
Book Title விளம்பர உலகம் (Vilambaru Ulagam)
Author எஸ்.எல்.வி.மூர்த்தி (S.L.V.Murthy)
Publisher விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

ஜுலியஸ் சீஸர்சரித்திரம் சந்தித்துள்ள மாவீரர்கள் என்றால் உங்கள் மனத்தில் யாரெல்லாம் தோன்றுவார்கள்? கிரேக்க மாவீரன் அலெக்சாண்டர். மங்கோலிய மாவீரன் செங்கிஸ்கான். பிரெஞ்சுப் புயல் நெப்போலியன். மிஞ்சிப் போனால் இன்னும் ஓரிருவர் தோன்றலாம். காரணம், அதிசயங்கள் அடிக்கடி நிகழ்வது சாத்தியமில்லை. அப்படியொரு அதிச..
₹306 ₹322
மாவீரன் அலெக்சாண்டர்ஆயிரம் தன்னம்பிக்கை நூல்களை வாசிப்பதும் அலெக்சாண்டரின் வாழ்க்கையை வாசிப்பதும் ஒன்றே !ஆறு, ஏழு, எட்டாம் வகுப்புகளிலேயே, நம் எல்லோருக்கும் மாவீரன் அலெக்சாண்டர் பரிச்சயமானவர், பாலபருவத்தில், நம் மதைக் கவர்ந்த பத்து மாமனிதர்களைப் பட்டியல் போடச் சொன்னால், அவர்களுள் ஒருவராக அலெக்சாண்டர..
₹369 ₹388
செங்கிஸ்கான் - எஸ். எல். வி. மூர்த்தி:செங்கிஸ்கான் பிறந்தபோது மங்கோலியா என்ற தேசமே கிடையாது.நாடோடிகளாக - ஐம்பதுக்கும் அதிகமான இனங்களாகச் சிதறிக்கிடந்த மங்கோலிய மக்களை ஒன்று சேர்த்து , பூஜ்யத்திலிருந்து மாபெரும் சாம்ராஜ்யத்தை அவர் உருவாக்கினார். தலைமுறை தலைமுறைகளாக வீடே இல்லாமல், வயிற்றுப் பிழைப்புக்..
₹274 ₹288
பூஜ்ஜியத்தில் இருந்து தொடங்கி படிப்படியாக ஒரு பிரமாண்டமான ராஜ்ஜியத்தைக் கட்டி முடித்த ஒரு கதாநாயகனின் கதை இது. முதல் முறையாக பிரதமராக லீ குவான் யூ பதவியேற்றபோது சிங்கப்பூரில் அடிப்படை கட்டுமானம்கூட இல்லை. பெரும்பாலான மக்கள் குடிசைகளில்தான் வசித்து வந்தார்கள். வேலையில்லாத் திண்டாட்டம் உச்சத்தில் இருந..
₹309 ₹325