Menu
Your Cart

சேரர் கோட்டை ( 2 பாகங்கள் )

சேரர் கோட்டை ( 2 பாகங்கள் )
சேரர் கோட்டை ( 2 பாகங்கள் )
-5 %
சேரர் கோட்டை ( 2 பாகங்கள் )
சேரர் கோட்டை ( 2 பாகங்கள் )
சேரர் கோட்டை ( 2 பாகங்கள் )
கோகுல் சேஷாத்ரி (ஆசிரியர்)
₹855
₹900
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
FREE shipping* (within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
சேரர் கோட்டை, கோகுல் சேஷாத்திரி எழுதிய ஒரு வரலாற்றுத் தமிழ்ப் புதினம். காந்தளூர் சாலைப் போரில் ராஜராஜ சோழன் அடைந்த வெற்றியை அடிப்படையாகக் கொண்டு புனையப்பட்ட நூல். களரிப்பயிற்று, வர்மக்கலை ஆகியவை குறித்த விவரங்கள் இந்நூலில் கையாளப்பட்டுள்ளன. 2007 முதல் 2010 வரை மாத இணைய இதழான வரலாறு.காம் இதழில் தொடராக வெளிவந்த இக்கதை கமலம் புக்ஸ் பதிப்பகத்தாரால் நூலாக ஜூலை 21, 2012 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. தனது மூத்த அண்ணனான ஆதித்த கரிகாலரின் கொலைக்கும் சேர நாட்டில் அமைந்துள்ள காந்தளூர்ச் சாலைக்கும் ஏதோ ஒரு மர்மமான தொடர்பு உள்ளது என்பதைக் கண்டறியும் அருள்மொழிவர்மர் (எ) ராஜராஜ சோழன், சாலையை நேரடியாகத் தாக்கத் தயங்குகிறார். ஏனெனில் காந்தளூர்ச் சாலை சேர நாட்டில் மிகவும் மதிக்கப்படும் நான்கு கல்வி கேந்திரங்களுள் ஒன்று. மேலும் பாண்டி நாட்டைக் கடந்து சேர நாட்டை அடைவதும் எளிதான செயலல்ல. இந்தச் சிக்கலுக்கான விடைதேடி தனது ஆசிரியரான நாகப்பட்டினம் பதர திட்ட விஹாரையின் தலைவரான மஹா காசியப தேரரை தனது சுற்றத்தாருடன் சந்திக்கிறார் அருள்மொழிவர்மர். கேரள அரசியலில் பழுத்த அனுபவம் வாய்ந்த தேரரின் ஆலோசனை மிகவும் நூதனமாக உள்ளது. இப்பணிக்காகத் தேர்ந்தெடுக்கப்படும் இளைஞர்களான கம்பன் அரையனாரும் பரமன் மழபாடியாரும் எதிர்கொள்ளும் விசித்திரமான விறுவிறுப்பான அனுபவங்களே சேரர் கோட்டையின் கதை. தாங்கள் எதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டோம் என்பதை இறுதியில் கண்டறியும் இந்த இரு இளைஞர்கள், தங்களுக்கிடப்பட்ட பணியில் வெற்றிபெற வேண்டுமானால் அதற்காகத் தங்களின் உயிரையே பணயம் வைத்தாக வேண்டும் என்பதையும் அறிந்துகொள்கின்றார்கள். கதாபாத்திரங்கள் இது ஒரு புதினம் என அறியப்பட்டாலும் இது சரித்திரத்தில் உள்ள பாத்திரங்கள், சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தின் பண்டைய வர்மக்கலை மற்றும் கேரள களரிப்பயிற்று பற்றிய பல நுட்பமான விபரங்களும் சரித்திரத் தரவுகளும் கையாளப்பட்டுள்ளன.
Book Details
Book Title சேரர் கோட்டை ( 2 பாகங்கள் ) (Serar kottai)
Author கோகுல் சேஷாத்ரி
ISBN 9788183797160
Publisher பழனியப்பா பிரதர்ஸ் (Palaniyappa Brothers)
Pages 1050
Year 2016
Edition 1
Format Paper Back
Category History | வரலாறு, Historical Novels | சரித்திர நாவல்கள்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

இராஜகேசரி வரலாறு.காமில் எழுதி வரும் திரு.கோகுல் சேஷாத்ரி அவர்கள் எழுதியது. சோழர்படையிலிருந்து ஒய்வுபெற்றுவிட்ட முன்னாள் வீரர் துழாய்க்குடி அம்பலவாண ஆசான் ஒரு மாபெரும் அரசியல் சதியில் மாட்டிக்கொள்வது எவ்வாறு? பரமன் மழபாடியாரான மும்முடிச் சோழரால் இந்த சிக்கல் மிகுந்த பிரச்சனையைத் தீர்க்க முடியுமா? தஞ்..
₹356 ₹375
பைசாசம் ,வரலாற்று நாவல் உலகில் சற்று வித்தியாசமான முயற்சி.ஒரு சிறிய கிராமத்தில் சுற்றிச் சுழன்று நடக்கும் கதை. இராஜாக்கள் கத்தியைக் தூக்காமல் ஒற்றர்கள் வேவு பார்க்காமல் இளவரசிகள் காதல் புரியாமல் எளிமையான மனிதர்கள் இயல்பாக வந்து போகும் கதை. புகை சூழ்ந்த மயக்க உலகில் நிகழாமல் மண்ணோடு மண்ணாக வேர்பாய்ச்..
₹329 ₹385
கல்வெட்டுக்கள் மற்றும் இதர வரலாற்றுச் செய்திகளின் பின்னணியில் புனையப்பட்ட சிறுகதைகள் மற்றும் குறுநாவல் தொகுப்பு. தலைப்புக் குறுநாவலான திருமாளிகை முதலாம் இராஜராஜ சோழரின் இறுதி காலத்தையும் மரணத்தையும் மிகவும் உணர்ச்சிகரமாகப் படம் பிடிக்கிறது. கதையின் அனுபந்தத்தில் கும்பகோணத்திற்கருகே அமைந்துள்ள உடையாள..
₹261 ₹275
ஆயிரம் வருடப் புன்னகை எனது ஆறாவது புத்தகமான ‘ஆயிரம் வருடப் புன்னகை’ வெளியாகின்றது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இறையருளினால் வெளிவரும் இப்புத்தகம் எனது கோயில் சார்ந்த வரலாற்றுப் பயண அனுபவங்களை விறுவிறுப்பான நடையில் மெல்லிய நகைச்சுவையுடன் முன்வைக்கிறது. முழுவதுமாக மறு ஆக்கம் செய்து எழுதப..
₹238 ₹250