Menu
Your Cart

கல்வெட்டு சொல்லும் கோயில் கதைகள்

கல்வெட்டு சொல்லும் கோயில் கதைகள்
-5 %
கல்வெட்டு சொல்லும் கோயில் கதைகள்
₹171
₹180
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
தமிழகத்தின் மிக முக்கியமான தொல்பொருள் ஆய்வாளர்களில் ஒருவரும், தமிழக வரலாற்றை கல்வெட்டுகள் மற்றும் கோயில்களின் வழியே தேடுபவருமான குடவாயில் பாலசுப்ரமணியன் எழுதிய நூல் இது. தமிழ்நாட்டுத் திருக்கோயில்களை வழிபாட்டுத் தலங்கள் மட்டுமே என நினைக்கக்கூடாது. ஆகமம், சிற்பம், ஓவியம், செப்புத் திருமேனிகள், கட்டடக்கலை, மரவேலைப்பாடுகள், நாட்டியம், இசை என எண்ணற்ற கவின் கலைகள் சார்ந்த துறைகள் எத்தனையோ நூற்றாண்டுகளாக அங்கு வாழ்ந்துகொண்டே இருக்கின்றன. அறம் சார்ந்த சமுதாயம் உருப்பெற திருக்கோயில்களே காரணமாக இருந்தன. தருமநீதி தழைக்கின்ற இடமும் அதுதான். பெருமன்னர்களும், சிற்றரசர்களும், அவர்கள்தம் அலுவலர்கள், படைத்தலைவர்கள், அரசியர், ஊர்ச்சபையோர், கொடையாளர்கள், கடைநிலைச் சாமானியர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் நாட்டிற்கு விட்டுச் சென்ற வரலாற்று ஆவணங்கள் அனைத்தும் கல்வெட்டுகளாகவும், செப்பேட்டுச் சாசனங்களாகவும் உறைகின்ற இடமும் திருக்கோயில்தான். நம் முன்னோர்களின் சமூக அக்கறை எவ்வளவு ஆழமானது என்பதைத் கல்லெழுத்துக்கள் வாயிலாக அறியலாம். குறிப்பாக நீராதாரங்களைத் திருக்கோயில்கள் எவ்வாறு காத்து நின்றன என்பதை உணரலாம். இப்படிக் கல்வெட்டுகள் வழியாகக் கோயில்கள் சொல்லும் கதைகள், முன்னோர்களை நினைத்து நம்மைப் பெருமிதம் கொள்ளச் செய்யும்.
Book Details
Book Title கல்வெட்டு சொல்லும் கோயில் கதைகள் (Kalvettu Sollum Koyil Kathaigal)
Author குடவாயில் பாலசுப்ரமணியம் (Kutavaayil Paalasupramaniyam)
ISBN 9789385118579
Publisher சூரியன் பதிப்பகம் (Suriyan pathipagam)
Pages 0
Year 2017
Category Archeology | தொல்லியல், Essay | கட்டுரை

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

தமிழகக் கோபுரக்கலை மரபு..
₹808 ₹850
கோயில்களில் காணப்படும் பல்வேறு கூறுகளான கல்வெட்டு, சிற்பம், ஓவியம், கட்டடம் போன்ற நுணுக்கங்கள் கலை ரசனையுடன் விவாதிக்கப்படுகின்றன. தமிழகம் மட்டுமன்றி பிற மாநிலங்களில் உள்ள கோயில்களில் காணப்படும் கலைக்கூறுகள் இலக்கியம் மற்றும் பிற சான்றுகளுடன் ஒப்பு நோக்கப்பட்டுள்ளன...
₹228 ₹240
தஞ்சாவூர் நாயக்கர் வரலாறு ..
₹713 ₹750