Menu
Your Cart

காட்சிக் கலைகள் - Visual Arts ( வினா - விடை)

காட்சிக் கலைகள் - Visual Arts ( வினா - விடை)
-5 %
காட்சிக் கலைகள் - Visual Arts ( வினா - விடை)
₹342
₹360
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
நூல் ஆசிரியர்: முனைவர் சு. திருநாவுக்கரசு B.F.A. M.F.A. M.Phil, Ph.D. உள்ள இவர் ஒரு ஓவியக் கலைஞர், சிற்பி, கலை புத்தக ஆராய்ச்சி எழுத்தாளர் மற்றும் நுண்கலை பேராசிரியர். இவர் 20-09-1979-ஆம் ஆண்டு தமிழ்நாடு, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கொத்தமங்கலத்தில் பிறந்தார். இவர் B.F.A., (2002), M.F.A., (2004) அரசு நுண்கலை கல்லூரி, (பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சி கும்பகோணத்தில் நுண்கலைப் பட்டம் முடித்துள்ளார். மற்றும் தஞ்சாவூரில் பல்கலைக்கழகத்தில் ஆய்வியல் நிறைஞர் பட்டம் (M.Phil) 2005-ல் மற்றும் தமிழ்ப் முனைவர் பட்டம் (Ph.D) 2014-ல் முடித்தார். தமிழ்நாட்டில் உள்ள நுண்கலை கல்லூரியில் சிற்பக்கலை துறையில் நுண்கலைப் பட்டம் முடித்து தத்துவ நோக்கில் 20-ஆம் நூற்றாண்டின் தமிழகச் சிற்பக்கலை என்ற தலைப்பில் நவீன சிற்பக்கலை தொடர்பாக முதல் முனைவர் (Ph.D) பட்டம் பெற்றவர். இவர் தஞ்சாவூர், பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் இணைப்பேராசிரியராக 8 ஆண்டுகளும், கேரளா, பாலக்காடு, கட்டடக்கலை துறை குளோபல் நிறுவனத்தில் துணை பேராசிரியராக 6 ஆண்டுகளும், சென்னை, கலாக்ஷேத்ரா, ருகமணி தேவி நுண்கலை கல்லூரியில் கௌரவப் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் 16 ஆண்டுகளாக நுண்கலை கற்பித்தல் துறையில் உள்ளார். இவர் ஓவியம் மற்றும் சிற்பம் தொடர்பான கலைத்துறையில் மிகவும் திறமையானவர். மேலும் இவர் பல கட்டடக்கலை துறை கல்லூரிகளில் சிற்பம் மற்றும் ஓவிய பயிற்சிகள் அளித்துள்ளார். இவருடைய ஓவியம் பல்வேறு இடங்களில் ஓவியக் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளது. மேலும் இவர் பல்வேறு கருத்தரங்கில் கட்டுரைகள் வழங்கியுள்ளார். தமிழர் சிற்பக்கலையில் அழகியல் கோட்பாடுகள். 2. காட்சிக் கலைகள் வினா & விடை (ஆங்கிலம்) மற்றும் 3. நுண்கலைச் சொல் அகராதி ஆகிய புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளார். உலக செம்மொழி மாநாட்டில் இவரது கட்டுரை தேர்ந்தெடுக்கப்பட்டு சமர்ப்பிக்கப்பட்டது. இவர் தனது துறையில் பல விருதுகளைப் பெற்றுள்ளார். இந்நூலில் இவர் நுண்கலை மாணவர்களுக்குக் காட்சிக் கலைத் தொடர்பாக எளிமையாக அறிந்துகொள்ளும் வகையில் வினாக்கள் மூலம் விடைகளை அமைத்துள்ளார்.
Book Details
Book Title காட்சிக் கலைகள் - Visual Arts ( வினா - விடை) (Katchik kalaikal)
Author முனைவர் சு.திருநாவுக்கரசு
Publisher தாழி புத்தகக் கடை (Thazhi puththaga kadai)
Pages 216
Year 2025
Edition 1
Format Paper Back
Category Art | கலை, Essay | கட்டுரை

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha