Menu
Your Cart

பொற்காலங்களும் இருண்ட காலங்களும்

பொற்காலங்களும் இருண்ட காலங்களும்
-5 %
பொற்காலங்களும் இருண்ட காலங்களும்
பொ.வேல்சாமி (ஆசிரியர்)
Categories: தமிழகம்
₹261
₹275
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
புனைவாக்கப்பட்ட வரலாற்றின் மீதான தீவிரத்தாக்குதல்களே இக்கட்டுரைகள். கட்டமைக்கப்படும் வரலாற்றுக்கு எதிரான தரவுகள் புறக்கணிக்கப்படுகின்றன; மறைக்கப்படுகின்றன; முக்கியத்துவம் தரப்படாமல் போகிற போக்கில் ஒரு மூலையில் வைக்கப்படுகின்றன. பொ. வேல்சாமியின் கவனம் முழுவதும் இத்தகைய போக்கில் தகர்வை உண்டாக்கும் நோக்கில் செயல்படுகிறது. பொ. வேல்சாமி, புலவர் பட்டம் பெற்றவர். மரபான புலவர்களைப் போல் குறுகிய வட்டத்திற்குள் அடைபட்டுவிட்டவரல்ல. மொழி, இலக்கியம், தத்துவம், வரலாறு என எல்லாவற்றையும் முடங்கிவிட்ட வகையாகப் பார்த்து முடக்கமே பெருமை என்னும் ஊனப்பார்வையிலிருந்து முற்றிலுமாக விலகியவர் அவர்.‘ மாபெரும் விஷயங்களைச் சுருங்கச் சொல்லல், நீண்ட தொடரமைப்புகள் கொண்ட நடை, காரமான சொற்கள் எனக் கட்டுரைகள் சில குறைகளைக் கொண்டுள்ளன. அவற்றில் கவனம் வைத்து, தமிழக வரலாற்றின் சில பகுதிகளை வெளிச்சப்படுத்தும் வேலையில் முழுமையாக இறங்குவார் என்றால் பொ. வேல்சாமியின் பங்களிப்பு, ச. வையாபுரிப் பிள்ளை, தெ.பொ.மீ., கா. சிவத்தம்பி போன்ற அறிஞர்களின் பங்களிப்புக்கு நிகராக விளங்க முடியும். அதற்கு இந்நூல் ஒரு தொடக்கப்புள்ளி.
Book Details
Book Title பொற்காலங்களும் இருண்ட காலங்களும் (Porkalangalum Irunda Kalangalum)
Author பொ.வேல்சாமி (Po.Velsamy)
ISBN 9788189359317
Publisher காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Publications)
Pages 240
Published On Nov 2005
Year 2009
Edition 3
Format Paper Back
Category தமிழகம்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

பொ. வேல்சாமியின் மூன்றாம் நூல் இது. தமிழக வரலாற்றை மீள் கட்டமைப்பு செய்வதும் புறக்கணிக்கப்பட்டவற்றை முன்னிறுத்திப் புதிய கோணங்களைக் காட்டுவதும் இவரது எழுத்தின் பொதுவியல்பு. மதிப்பீடுகள், ஆளுமைகள் என இருபகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ள இந்நூலிலும் அவ்வியல்பு துலங்குகிறது. நூல் மதிப்புரைகள் ஆய்வுக் கட..
₹190 ₹200
கோவில்களைப் பக்தியின் இருப்பிடமாகப் பார்ப்பதுதான் இயல்பானதாக நம் பொதுமனதில் பதிந்து உள்ளது. கோவில்கள் கட்டப்பட்டதைப் புனித அறச்செயல்களாகவும், அரசர்களின், வணிகர்களின் சாதனைகளாகவும் மட்டுமே வரலாற்று நூல்கள் காட்டுகின்றன. ஆனால் தமிழ் நாட்டில் வளமான நிலங்கள், இலட்சக்கணக்கான ஏக்கர்கள் கோயில்களுக்கு உ..
₹166 ₹175