Menu
Your Cart

தமிழகத்தின் ஈழ அகதிகள்

தமிழகத்தின் ஈழ அகதிகள்
-5 %
தமிழகத்தின் ஈழ அகதிகள்
தொ.பத்தினாதன் (ஆசிரியர்)
Categories: Eezham | ஈழம்
₹76
₹80
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
ஈழத் தமிழர் பற்றிய அக்கறையைப் பல வழிகளில் வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் சமூகம் நமது. அரசியலுக்கு அவ்வப்போது ஊறுகாய் போல இவ்வக்கறை பயன்படுகிறது. தமிழ் உணர்வுக்கும் இது அளவுகோலாகக் கொள்ளப்படுகிறது. ஆனால் ஈழத்திலிருந்து வந்து இங்கு அகதிகளாக முகாம்களில் வாழும்  தமிழர்களைப் பற்றி யாரும் கவலைப்படுவதில்லை. அவர்கள் வாழ்நிலை, அரசதிகாரம், அவர்களை நடத்தும் விதம், சலுகைகள் எனப்படுபவை செல்லும் வழிகள், எப்போதும் கண்காணிப்பு என்னும் அவலம், உதிரிகளாக அவர்களை மாற்றும் உத்திகள் எனப் பலவற்றிலும் கவனத்தைக் கோரும் வகையில் அகதி முகாம்களின் நிலையைப் பற்றியும் அங்கு வாழும் தமிழர்களைப் பற்றியுமான பல்வேறு விஷயங்களைத் தகவல்களாகவும் அனுபவமாகவும் இந்நூல் முன்வைக்கிறது. ஏற்கனவே 'போரின் மறுபக்கம்' என்னும் சுயசரிதை நூலை எழுதிக் கவனம் பெற்ற பத்தினாதன் தமிழ்ச் சமூகத்தைப் பார்த்து இந்நூல் வழியாகக் கேட்கும் வினாக்கள் கூர்மையும் காத்திரமும் ஆவேசமும் கொண்டவை. பேச்சுக்கும் வாழ்வுக்குமான முரணை அம்பலப்படுத்தி மனித உரிமையை நிலைநாட்டும் எழுத்துப் போராட்டம் இது. -பெருமாள்முருகன்
Book Details
Book Title தமிழகத்தின் ஈழ அகதிகள் (Tamizhakathin Eela Agathigal)
Author தொ.பத்தினாதன் (Tho.Pathinathan)
ISBN 9789382033684
Publisher காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Publications)
Pages 96
Year 2014

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

போரில் மடிவதைக் காட்டிலும் கொடிது அதுதரும் துயரத்தோடு வாழ்வது! தமிழகத்தில் வாழ நேர்ந்திருக்கும் ஈழத் தமிழ் அகதிகளின் நிலையும் இதுதான். தன் சிறுவயதில் அகதியாய் வந்திறங்கி நடுத்தர வயதைக் கடந்திருக்கும் ஈழத்தமிழர் ஒருவருடைய தமிழக வாழ்வின் நேரடி அனுபவம்தான் இந்தத் தன்வரலாறு. ஒருபுறம் பாராமையாகவும் மற..
₹238 ₹250
அகதிகளின் வெளியேற்றம், நவீன அடிமை முறை, ஆட்சி மாற்றம், வீடுகள், மதங்கள், சாதிகள், முகாம்கள், பலிகள், ஆயுத உற்பத்தி, புலம்பெயர் சமூகங்களுக்கிடையே நிலவும் தராதரம், சட்டமும் நடைமுறைச் சிக்கல்களும் என சமகால அகதி அரசியல் குறித்த பதின்மூன்று கட்டுரைகளும் முகாம்வாழ் பெண் ஒருவரின் வாக்குமூலமும் மூத்த புலி உ..
₹114 ₹120