
- Edition: 1
- Year: 2014
- ISBN: 9788189867867
- Page: 400
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: விடியல் பதிப்பகம்
தவிர்க்கப்பட்டவர்கள்: இந்தியாவின் மலம் அள்ளும் மனிதர்கள்
சேலை முந்தானையை எடுத்து தலையில் முக்காடு போட்டுக் கொண்ட ஷீலா, சோர்ந்த குரலில் பேசினார்: “என் புருசனுக்கும் வேலையில்லை, சாப்பாட்டுக்கே வழியில்லை, வறுமை கழுத்தை இறுக்குகிறது. நான் திரும்பவும் பீயை அள்ள போக வேண்டியது தான்” என்று சொல்லச் சொல்லக் கண்ணீர் தாரை தாரையாக வழிந்தது. “இந்த கேவலமான வேலையைச் செய்ய யாருக்குத்தான் விருப்பம் இருக்கிறது! ஆனால் வயிறு என்று ஒன்றிருக்கிறதே, பசிக்கும் வயிறு எதையும் செய்ய வைக்கும். நான் பருவ வயதுக்கு வந்த நாளில் இருந்து பாழாய் போன இந்த வேலையை செய்துக் கொண்டு தானிருக்கிறேன். இப்போது நான் கர்ப்பம், கர்ப்பம் தரித்த நிலையில் நாற்றம்பிடித்த இந்த வேலையைச் செய்வதால் ஏற்படப்போகும் குமட்டலையும் வாந்தியையும் நினைத்தாலே அச்சமாக இருக்கிறது. போதாக்குறைக்கு, எதாவது வில்லங்கமாக ஆகுமோ என்ற பயம் வேறு என்னை பிடித்தாட்டுகிறது. எனினும் என்ன செய்ய? எனக்கு வேறு வேலை எதுவும் கிடைக்காது. மலம் அள்ளும் பிறவியாக பிறந்திருக்கிறேன். அப்படியே சாக வேண்டுமென்று தலையில் எழுதியிருக்கிறது. என் வயிற்றில் இருக்கும் என் குழந்தைக்கும் இதே நிலை தான் ஓ.. கடவுளே!!’
Book Details | |
Book Title | தவிர்க்கப்பட்டவர்கள்: இந்தியாவின் மலம் அள்ளும் மனிதர்கள் (Thavirkkapattavargal: Indiavin Malam Allum Manithargal) |
Author | பாஷாசிங் (Paashaasing) |
Publisher | விடியல் பதிப்பகம் (Vidiyal Pathippagam) |
Pages | 400 |
Year | 2014 |
Edition | 1 |
Format | Paper Back |