New
-5 %
திக் திக் திக்
காலச்சக்கரம் நரசிம்மா (ஆசிரியர்)
₹152
₹160
- Edition: 1
- Year: 2025
- ISBN: 9788199226494
- Page: 164
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: வானதி பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
டி.ஏ. நரசிம்மன் என்கிற காலச்சக்கரம்
நரசிம்மா கடந்த நாற்பது வருடங்களாக பத்திரிக்கையாளராக திகழ்கிறார். இவர் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளிதழில் தனது பணியை துவக்கியவர். தி ஹிந்து ஆங்கில நாளிதழின் நிர்வாக ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றார். சுமார் 25 க்கும் மேற்பட்ட நாவல்களை எழுதி இருக்கும் இவரது முதல் நாவல் காலச்சக்கரம் வானதி பதிப்பகத்தால், வாலியின் கரங்களால் வெளியிடப்பட்டு பரபரப்பாக விற்பனையாக, கவிஞர் வாலி அவருக்கு காலச்சக்கரம் நரசிம்மா வாக மாறியது. ரங்கராட்டினம், சங்கதாரா, பஞ்ச நாராயண கோட்டம், கர்ண பரம்பரை, குபேரவன காவல், அந்தப்புரம் போகாதே அரிஞ்சயா போன்ற இவரது நாவல்கள் இவருக்கு தனி வாசகர் வட்டத்தை ஏற்படுத்தி கொடுத்துள்ளன. இவர் எழுதியுள்ள ஐந்து பாகங்களைக் கொண்ட அத்திமலைத்தேவன் பெரும் பரபரப்புடன் விற்பனையாகி கொண்டிருக்கிறது. கல்கி பத்திரிகையில், கூடலழகி என்கிற சரித்திர புதினம், தொடர்கதையாக வெளி வந்து, பிறகு வானதி பதிப்பகத்தால் நூலாக வெளியிடப்பட்டு, தஞ்சையின் சோழர் வரலாற்று ஆய்வு மையத்தின் அருமொழி விருதை பெற்றுள்ளது. Bynge செயலியில் இவர் தொடராக எழுதிய மயிலங்கி மங்கையின் மரகதப்பெ ட்டியை 15 இலட்சம் வாசகர்கள் மேல் படித்திருக்கிறார்கள்.
சின்ன திரைகளில் கிருஷ்ணா காட்டேஜ், அபிராமி, அனிதா வனிதா, மாயா போன்ற தொடர்கள் உள்பட பல தொடர்களுக்கு திரைக்கதை வசனம் எழுதி இருக்கிறார். சிங்கப்பூர் தமிழ் முரசுக்கு சிறப்பு அரசியல் விமர்சகராகவும் கட்டுரைகள் எழுதி உள்ளார். ஏராளாமான பத்திரிக்கைகளில் அவரது கதை கட்டுரைகள் வெளிவருகின்றன.
கல்கி குழுமம் சார்பாக,பராக பராக் கல்கியின் பொன்னியின் செல்வன், வந்தியத்தேவன் பாதையில் ஓர் அனுபவ பயணம் என்னும் வரலாற்று பயணத்தை நடத்தினார்.
தற்போது திருவான்மியூரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
| Book Details | |
| Book Title | திக் திக் திக் (Thik Thik Thik) |
| Author | காலச்சக்கரம் நரசிம்மா |
| ISBN | 9788199226494 |
| Publisher | வானதி பதிப்பகம் (Vanathi pathipagam) |
| Pages | 164 |
| Year | 2025 |
| Edition | 1 |
| Format | Paper Back |
| Category | Novel | நாவல், Crime - Thriller | க்ரைம் - த்ரில்லர் |