- Edition: 1
- Year: 2026
- Page: 84
- Format: Paperback
- Language: Tamil
- Publisher: தம்பி பதிப்பகம்
திராவிடப் பாண்டியனின் சமகால கவிதை அனுபவங்கள், தொண்ணூறுகளில் எழுதிய தலித் கவிஞர்களின் அதே அனுபவத்தை ஒத்திருக்கின்றன! அவற்றுடன் ஆணவக்கொலை அனுபவங்களும், சாதி ஆதிக்கத்தை எதிர்க்கும் சில காட்சிப் பிரதிகளின் தாக்கங்களும் ஊடாடியிருக்கின்றன. கூடுதலாக கைபேசியும், காதலர் தினமும், பைக்கும் வருகின்றன.
நெடுஞ்சாலையையும், ரயில் மார்க்கத்தையும் வெகு அருகில் கொண்டிருக்கும் ஒரு கிராமத்தில் இரண்டாயிரத்துக்குப் பிறகான சமூக வசதிகளை நுகர்ந்தபடி திராவிடப் பாண்டியன் வாழ்ந்தாலும், இன்னும் அவருக்கு இந்தியச் சமூகம் ஒரே மாதிரியான ஆயிரங்கால சாதிய அனுபவத்தைத்தான் கொடுத்துக் கொண்டிருக்கிறது என்பதை இங்கு நாம் அவதானிக்க வேண்டியுள்ளது.
நேற்றுவரை தன் நிலத்தில் பண்ணையடிமையாகவும் படியாளாகவும் இருந்தவரை வாடா போடா என்றோ பெயர் சொல்லியோ அழைத்தவர்கள், இன்று அவரோ, அல்லது அவருடைய சந்ததியோ பாபாசாகேப்பின் கொடையான அரசியலமைப்புச் சட்டம் வழங்கிடும் நீடித்த உரிமையினால் படித்துவிட்டு வரும்போது 'சார்' என்று விளிக்கத் தயங்குவதில்லை. இந்த உணர்ச்சி மிக்கத் தருணம் எல்லா படித்த தலித் மக்களின் வாழ்க்கையிலும் இடம் பெறும் ஒன்றாகும். இதை என்னடா என்று கே.ஏ.குணசேகரன் எழுதியிருக்கிறார், நெருப்பு விதை என்று நான் எழுதியிருக்கிறேன். வக்கீல் சார் என்று திராவிடப் பாண்டியனும் எழுதுகிறார். இந்த உயிரோட்டமான சுவாரஸ்யம் மிக்க கவிதையோடுதான் அவரின் கவிதைகள் தொடங்குகின்றன.
அழகிய பெரியவன்.
| Book Details | |
| Book Title | எனக்கு பிடிக்காத ரயில் (Enakku Pitikkaatha Rayil) |
| Author | திராவிடப் பாண்டியன் (Thiraavitap Paantiyan) |
| Publisher | தம்பி பதிப்பகம் (Thambi Pthippakam) |
| Pages | 84 |
| Year | 2026 |
| Edition | 1 |
| Format | Paperback |
| Category | 2026 New Releases |