New
-5 %
திருப்பாவை
முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா (ஆசிரியர்)
₹143
₹150
- Edition: 1
- Year: 2025
- Page: 148
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: மீனாட்சி புத்தக நிலையம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
முனைவர் ந.செ.கி. சங்கீத்ராதா 'தீந்தமிழ்' தியாகராசர் கல்லூரி தமிழ்த்துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். வைணவ இலக்கியங்களில் ஈடுபாடு மிக்கவர். 'திவ்ய பிரபந்தம் காட்டும் திருமால் அவதாரங்கள்' என்பது இவரது முனைவர்ப்பட்ட ஆய்வு.
சங்கீத் ராதா அவர்களின் திருப்பாவை உரை பொருள் கூறும் பணியை மட்டும் செய்யவில்லை; மாறாகத் திருப்பாவையின் இலக்கிய நலன்களை எடுத்துக்காட்டுவதாகவும் ஆய்வு நோக்குடையதாகவும் அமைந்திருக்கிறது; அதே சமயம் எளிமை மிக்கதாகவும் இருக்கிறது.
ஆண்டாளின் பக்தியானது தனக்கு நன்மையை வேண்டும் பக்தி அல்ல; நாமும் ஊரும் மக்களும் நலமுடன் வாழவேண்டும் என்று விரும்பும் பக்தியாகும். "வாழ உலகினில் பெய்திடாய், நாங்களும் மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்" என்ற அடிகள் பொதுநலத்தினைக் காட்டுபவை.
ஆண்டாளின் பாசுரங்களின் வழியே புலப்படும் உணர்வு நிலைகளை இந்நூலாசிரியர் மிக விரிவாகவும் நுட்பமாகவும் எடுத்துக் காட்டியுள்ளார். சுவைபடக் கூறும் மொழிநடை இந்நூலாசிரியருக்கே கைவந்துள்ளது.
முனைவர் ம.திருமலை
முன்னாள் துணைவேந்தர் தமிழ்ப் பல்கலைக்கழகம்
| Book Details | |
| Book Title | திருப்பாவை (Thiruppaavai) |
| Author | முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா |
| Publisher | மீனாட்சி புத்தக நிலையம் (Meenachi Puthaka Nilaiyam) |
| Pages | 148 |
| Year | 2025 |
| Edition | 1 |
| Format | Paper Back |
| Category | Literature | இலக்கியம், 2025 New Arrivals |