Menu
Your Cart

திருடமுடியாத கதைகள்

திருடமுடியாத கதைகள்
New -5 %
திருடமுடியாத கதைகள்
அ.முத்துலிங்கம் (ஆசிரியர்), அருள்செல்வன் (தொகுப்பாசிரியர்)
₹304
₹320
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.

இந்தத் தொகுப்பில் உள்ள கதைகள் 'எழுத்தாளர் அ. முத்துலிங்கத்தின் கதைகளில் உலக மாந்தர்கள்' என்கிற தலைப்பில் எண்ணத்தக்கவை. ஒரு நேர்காணலில் அவர் 'எனது அனுபவங்களை யாரும் திருட முடியாது' என்று குறிப்பிட்டார். அதே போல் அவரது பிரத்தியேகமான அனுபவங்களைக் கொண்டு எழுதப்பட்ட இந்தக் கதைகளையும் யாரும் திருட முடியாது. ஏனென்றால் இது அவருக்கே உரித்தான அனுபவங்கள். எனவேதான் இத்தொகுப்பிற்கு இந்தப் பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இச்சிறுகதைகள் தோற்ற எளிமை கொண்டிருந்தாலும் உள்விரிவு கொண்டவை.கதைகளில் உலவும் வெவ்வேறுபட்ட கதாபாத்திரங் களின் குணச்சித்திரங்கள் படிக்கப் படிக்கச் சுவாரஸ்யம் தருபவை. அதேவேளை அங்கே நிலவும் கலாச்சாரம், பண்பாடு போன்றவற்றை யும் கதைகளின் ஊடாக கதாசிரியர் நமக்குள் கடத்திவிடுகிறார். பல்வேறு உணர்வுகளைக் கிளறும் அந்தப் பாத்திரங்களின் அக ஓட்டங்களை ஒப்பிட்டுப் பார்த்தால் மனிதவர்க்கத்தின் ஆதிப் பண்பு எதுவென விளங்கிக்கொள்ள முடியும்.

இந்தக் கதைகளின் மூலம் பல்வேறு நிலப்பிரதேசங்களில் வாழும் மனிதர்களைக் கடவுச்சீட்டும், நுழைவிசைவும் இல்லாமலேயே தரிசிக்கும் வாய்ப்பு கிடைத்துவிடுகிறது.

Book Details
Book Title திருடமுடியாத கதைகள் (Thirutamutiyaatha Kathaikal)
Author அ.முத்துலிங்கம் (A.muthulingam)
Compiler அருள்செல்வன்
ISBN 9789361100185
Publisher காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Publications)
Pages 239
Year 2026
Edition 1
Format Paperback
Category Short Stories | சிறுகதைகள், 2026 New Releases

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha