Menu
Your Cart

தொல்காப்பியமும் அல்-கிதாப்பும்

தொல்காப்பியமும் அல்-கிதாப்பும்
-10 %
தொல்காப்பியமும் அல்-கிதாப்பும்
த.சுந்தரராஜ் (ஆசிரியர்)
₹293
₹325
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
த. சுந்தரராஜ் உலகச் செம்மொழிகளின் முதல் இலக்கணங்களைத் தமிழின் தொல்காப்பியத்தோடு ஓப்பீடு செய்வதில் ஈடுபாடுடையவர். இந்நூலில் அறபு மொழியின் முதல் இலக்கணமாக விளங்கும் அல் - கிதாப்பையும் (கி.பி. 800), தமிழின் முதல் இலக்கணமாக விளங்கும் தொல்காப்பியத்தையும் (கி.மு. 300 - 500) ஒலியியல் நோக்கில் ஒப்பிடுகிறார். காலம், இடம், மொழிக்குடும்பம் என அனைத்திலும் இருவேறு துருவங்களாக விளங்கும் இவ்விரு மரபிலக்கணங்களின் தனித்தன்மைக்குக் கொடுக்கும் அதே முக்கியத்துவத்தை, அவற்றிற்குள் உள்ள ஒற்றுமைக்கும் கொடுக்கிறார். அவ்வொற்றுமைக் கூறுகளின் வழி தமிழுக்கும் அறபுக்கும் உள்ள இலக்கண உறவிற்கான அகச்சான்றுகளைத் தேடுகிறார். தமிழுக்கும் அறபுக்கும் இடையில் நாம் கண்டடைந்த வாணிப உறவைத் தொடர்ந்து, இலக்கண உறவிற்கான இந்த மொழியியல் தேடுதல் மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. • மொழியியலார் வரையறுத்துள்ள கிரேக்கம், இலத்தீன், ஹீப்ரூ, அறபு, சீனம், சமஸ்கிருதம், தமிழ் என்னும் ஏழு செவ்வியல் இலக்கண மரபுகளுள், சமஸ்கிருத இலக்கண மரபோடு கூடிய தமிழ் இலக்கண ஒப்பாய்வுக்குப் பின், பிறிதொரு செவ்வியல் இலக்கண மரபோடு ஒப்பிட்டு ஆயும் முதலாவது நூல் என்ற பெருமை 'தொல்காப்பியமும் அல்-கிதாப்பும்' என்னும் இந்நூலுக்கு உண்டு. - சு. இராசாராம்
Book Details
Book Title தொல்காப்பியமும் அல்-கிதாப்பும் (tholkaappiyamum-al-kitabum)
Author த.சுந்தரராஜ் (Tha.Sundhararaaj)
Publisher காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Publications)
Published On Jan 2022
Year 2022
Edition 1
Format Paper Back
Category Essay | கட்டுரை, Literature | இலக்கியம், Language - Linguistics | மொழி - மொழியியல், 2022 New Arrivals | 2022 புதிய வெளியீடுகள்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

தமிழகத்தோடு அறேபியர் கொண்ட உறவை இஸ்லாத்தின் தோற்றத்திற்கு முன், பின் என இருவகைப்படுத்தலாம். அதற்கு முன் வணிக உறவே முதன்மையானதாக இருந்தது. இஸ்லாம் நுழைந்ததும் மதரீதியிலான மொழி அடையாளம் வலுப்பட்டது; அறபியைத் தமிழ் முஸ்லிம்கள் இன்முகத்தோடு வரவேற்றனர். அறபு, தமிழ் முஸ்லிம்களின் அடையாளமாக மாறியது. முஸ்லி..
₹108 ₹120