- Edition: 1
- Year: 2026
- Format: Paperback
- Language: Tamil
- Publisher: அருட்செல்வர் நா. மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையம் வெளியீடு
இன்றைய வாழ்க்கை மனித உறவுகளை ஆயிரம் சிக்கல்களில் தவிக்க விடுகிறது. அவற்றுள் ஒன்று முதுமை. அறிவியல் மனிதர்களின் ஆயுட் காலத்தை அதிகரித்திருக்கிறது. அதேசமயம் ஒவ்வொரு மனிதனும் தன் தனி வாழ்க்கையை வாழவும் நேரிடுகிறது. முதுமை சந்திக்கும் முரண்பாடுகளையும் தவிப்பையும் இந்தத் தொகுப்பிலுள்ள பல கதைகள் பேசுகின்றன. பி.என்.மூர்த்தியின் 'பொற்கூண்டு'. 'டூ லேட்', 'மமகாரம்' கதைகள் மன்னெம் சாரதாவின் 'பாட்டு நின்றது' ஆகிய கதைகளில் இந்த முரண்களின் கடுமையும், புதிய தலைமுறையின் புரிதலையும் காண முடிகிறது.
அரவணைத்து அன்பு காட்டுவது என்ற முறையின் வெற்றியை சம்மெட்ட உமாதேவியின் கதையில் காணுகிறோம் என்றால் இளைய தலைமுறையின் பொய்யான அன்பைத் தோலுரித்துக் காட்டுகிறது பத்மலதா ஜெயராம் நந்திராஜுவின் 'அமைதி' என்ற கதை. தலைமுறைகளுக்கிடையே வளர வேண்டிய அன்பின் அருமையை 'ஐ.ஏ.எஸ். மருமகள்' உணர்த்துகிறது.
பிரச்னைகள் மலைபோல் எழுந்தாலும் ஒரு பெண் நினைத்தால் வெற்றி காண முடியும் என்பதை பொத்தூரி விஜயலட்சுமியின் 'தாத்தாவின் வீடு' நிகழ்த்தி காட்டுகிறது. மனிதம் மாண்புமிக்கது - அது பொருளாதார வளத்தை மையமாக கொண்டதல்ல என்பதை 'இராஜய்யா இட்லி வண்டி' உணர்த்துகிறது. சொந்த மண்னே வாழ வைக்கும் உயிர்ப்பு உடையது என்பதை 'தூரத்துப் பச்சை' தொட்டுக் காட்டுகிறது
சித்திர விசித்திரமான நவீன வாழ்க்கை நம் இருப்பைப் பற்றிய வினாக்களை எழுப்பி வருகின்றது. அதில் சில கோணங்களை - அதுவும் தனிமனித, இந்திய, நகரிய வாழ்வை அடித்தளமாக்கிய கதைகள் இவை.
| Book Details | |
| Book Title | தூரத்துப் பச்சை (Thooraththup Pachchai) |
| Translator | ராஜி ரகுநாதன் |
| Publisher | அருட்செல்வர் நா. மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையம் வெளியீடு (Arutchelvar Dr. N. Mahalingam Translation Institute (AMTI)) |
| Year | 2026 |
| Edition | 1 |
| Format | Paperback |
| Category | கதைகள், 2026 New Releases |