Menu
Your Cart

மணல் சமாதி | Tomb of Sand

மணல் சமாதி | Tomb of Sand
-5 %
மணல் சமாதி | Tomb of Sand
₹713
₹750
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
FREE shipping* (within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
கீதாஞ்சலி ஸ்ரீ எழுதிய இந்தி நாவலான ‘ரேத் சமாதி’யின் கதை சொல்லும் பாணி மிகப் புதியது. கூட்டுக் குடும்பம் தனிக்குடித்தனம், ஆண் - பெண், இளமை - முதுமை, உறக்கம் - விழிப்பு, அன்பு - வெறுப்பு, இந்தியா - பாகிஸ்தான் எனப் பல்வேறு எல்லைகளினூடே நாவல் பயணிக்கிறது. இந்த நாவலின் உலகம் நன்கு அறிமுகமானது போலவும் மாயஜாலம்போலவும், இரண்டிற்குமிடையேயான வேறுபாட்டை அழித்தபடி துலங்குகிறது. காலம் நிலையில்லாத் தன்மையில் புலப்படுகிறது. ஒவ்வொரு நிகழ்வும் இறந்த காலத்தைத் தன்னுள் வைத்திருக்கிறது. ஒவ்வொரு கணமும் வரலாற்று நிகழ்வுகளைப் பிரதிபலிக்கிறது. ஆங்கில மொழியாக்க நூலுக்கான புக்கர் விருது (2022) பெற்ற ‘ரேத் சமாதி’ (Tomb Of Sand) என்னும் இந்தி நாவலின் நேரடி மொழியாக்கம் இது. சமகால இந்தியின் வாசனைகளையும் பன்முகக் குரல்களையும் சேதமில்லாமல் தமிழுக்குக் கொண்டுவந்திருக்கிறார் அனுராதா க்ருஷ்ணஸ்வாமி. எண்பதை நெருங்கிக்கொண்டிருந்த பாட்டி விதவையானதும் படுத்த படுக்கையாகிவிட்டார். குடும்பத்தினர் அவரைத் தங்களுக்குள் இழுக்கப் பெரும்பாடுபடுகிறார்கள். பாட்டிக்கோ ‘இனி நான் எழுந்திருக்கமாட்டேன்’ என்கிற பிடிவாதம். பின்னர், இந்தச் சொற்கள் இப்படி மாறின: ‘இனி புதிதாய் மட்டுமே எழுந்திருப்பேன்’. பாட்டி எழுந்திருக்கிறார். முற்றிலும் புத்தம் புதிதாக. புதிய குழந்தைப் பருவம். புதிய இளமை. சமூகத் தின் தடைகளிலிருந்தும் மறுப்புகளிலிருந்தும் முற்றிலும் விடுபட்டுப் புதிய உறவுகளிலும் புதிய உணர்வுகளிலும் முழுவதும் சுதந்திரமாய், தன்னிச்சையாய் . . . கீதாஞ்சலி ஸ்ரீ எழுதிய இந்தி நாவலான ‘ரேத் சமாதி’யின் கதை சொல்லும் பாணி மிகப் புதியது. இந்த நாவலின் கரு, காலகட்டம், ஒழுங்கமைதி, செய்தி அனைத்தும் தமக்கே உரித்தான தனித்துவம் நிறைந்த பாணியில் செல்கின்றன. நமக்குப் பழக்கமான எல்லைகளையும், எல்லை களுக்கு அப்பாலும், அனைத்தையும் நிராகரித்தும் தாண்டியும் செல்கின்றன. கூட்டுக் குடும்பம் தனிக்குடித்தனம், ஆண் - பெண், இளமை - முதுமை, உறக்கம் - விழிப்பு, அன்பு - வெறுப்பு, இந்தியா - பாகிஸ்தான் எனப் பல்வேறு எல்லை களினூடே நாவல் பயணிக்கிறது. இந்த நாவலின் உலகம் நன்கு அறிமுகமானது போலவும் மாயஜாலம்போலவும், இரண்டிற்கு மிடையேயான வேறுபாட்டை அழித்தபடி துலங்கு கிறது. காலம் நிலையில்லாத் தன்மையில் புலப்படுகிறது. ஒவ்வொரு நிகழ்வும் இறந்த காலத்தைத் தன்னுள் வைத்திருக்கிறது. ஒவ்வொரு கணமும் வரலாற்று நிகழ்வுகளைப் பிரதிபலிக்கிறது. ஆங்கில மொழியாக்க நூலுக்கான புக்கர் விருது (2022) பெற்ற ‘ரேத் சமாதி’ (Tomb Of Sand) என்னும் இந்தி நாவலின் நேரடி மொழியாக்கம் இது. சமகால இந்தியின் வாசனைகளையும் பன்முகக் குரல்களையும் சேதமில்லாமல் தமிழுக்குக் கொண்டுவந்திருக்கிறார் அனுராதா க்ருஷ்ணஸ்வாமி.
Book Details
Book Title மணல் சமாதி | Tomb of Sand (Manal Samaathi | Tomb of Sand)
Author கீதாஞ்சலி ஸ்ரீ | Geetanjali Shree
Translator அனுராதா க்ருஷ்ணஸ்வாமி
ISBN 978-81-19034-95-6
Publisher காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Publications)
Pages 608
Published On Jan 2024
Year 2024
Edition 1
Format Paper Back
Category Novel | நாவல், Translation | மொழிபெயர்ப்பு, Award Winning Books | விருது பெற்ற நூல், 2024 New Releases

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author