Menu
Your Cart

சாமிநாதம்

சாமிநாதம்
-5 % Out Of Stock
சாமிநாதம்
உ.வெ.சா (ஆசிரியர்), ப.சரவணன் (தொகுப்பு)
₹950
₹1,000
FREE shipping* (within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
பிரித்தானியக் காலனித்துவ ஆட்சியின் விளைவாக ஏற்பட்ட சமூக மாற்றங்களின் பின்னணியில் உருவான அச்சுச் சாதன வெளிப்பாட்டு வடிவங்களுள் ஒன்று புத்தகங்கள். தமிழ்ச் சமூகப் பண்பாட்டு வரலாறு குறித்த முழு விவாதத்திற்கு ஆவணமாகத் திகழ்பவை இவை. இந்த அச்சேறிய நூல்களின்வழி அறிவுத்தளத்தைப் பொதுவெளியில் பரப்புவதற்கு முயன்ற ஆளுமைகளுள் குறிப்பிடத்தக்கவர் பழந்தமிழ் நூல் பதிப்பு முன்னோடிகளுள் ஒருவராகிய உ.வே.சாமிநாதையர் (1855 &1942) அவர்கள். ஆறுமுக நாவலர், சி. வை. தாமோதரம் பிள்ளை, ’மனோன்மணியம்’ சுந்தரம் பிள்ளை என மகத்தான சாதனையாளர்கள் வலம்வந்த நவீனத் தமிழ்ச் சூழலில் உ. வே. சா. என்னும் ஆளுமை உள் நுழைந்தபோது ஆரோக்கியமான அதிர்வுகளும் அடுத்தகட்டப் பாய்ச்சலும் தமிழ்ப் பதிப்புலகில் நிகழ்ந்தன. இவற்றை எல்லாம் அறிந்துகொள்வதற்கு நூல்களில் இடம்பெறும் அவரது முகவுரைகளே சான்று. காலவெள்ளத்தில் கரையும் முன்னே அவரது 106 நூல்களிலிருந்து 130 முன்னுரைகளை அவர் வாழ்ந்த காலம்வரை வெளிவந்த பதிப்புகளிலிருந்து கண்டறிந்து முகப்பேடுகளுடன் முழுமையாகப் பதிப்பித்திருக்கிறார் ப. சரவணன்.
Book Details
Book Title சாமிநாதம் (Saminatham)
Author உ.வெ.சா (U.V.Swaminatha Iyer)
Compiler ப.சரவணன் (Pa.Saravanan)
ISBN 9789382033653
Publisher காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Publications)
Pages 1200
Year 2014

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

சோறுபோட்டு ‘அகவல்’ பாடுவதையே வள்ளலாருக்குச் செய்யும் கைமாறாகக் கருதும் இந்த நாளிலும், ஆன்மநேய ஒருமைப்பாட்டுக்குத் தடையாக உள்ள எதையும் தயவு தாட்சண்யமின்றித் தூக்கியெறிந்து இந்தச் சமூகத்தைச் சீர்திருத்திய விஞ்ஞானி வள்ளலார் என்பதைப் புலப்படுத்த எழுதப்பட்டவையே இந்நூலிலுள்ள கட்டுரைகள். வள்ளலார் குறித்..
₹261 ₹275
இனக்குழுக்களாகத் தோற்றம் பெற்ற தமிழினம் பண்பாடு, சமயம், பழக்கவழக்கங்கள், கலை, இலக்கியம், பொருளாதாரம், நிர்வாகம் என்று பல தளங்களில் தம்மைச் செழுமைப்-படுத்திக்கொண்ட காலகட்டம் சங்க காலம். வரலாற்றின் மிக அடிப்-படையான, மிக முக்கியமான காலகட்டமாக இருந்த-போதிலும் சங்க காலம் பற்றிய பதிவுகள் மிகக் குறைவாகவே ந..
₹238 ₹250
அகிம்சையை மட்டுமே பயன்படுத்தி இந்தியா பிரிட்டிஷ் ஆட்சியை வீழ்த்திவிடவில்லை. பலவிதமான ஒடுக்குமுறை-யையும் மிருகத்தனமான அடக்குமுறையையும் இந்தியர்கள்மீது ஏவிவிட்ட பிரிட்டிஷாரை எதிர்கொள்ள ஒரு மாபெரும் புரட்சிப் படையை இந்தியா கட்டமைக்கவேண்டியிருந்தது. உயிரைத் துச்சமென மதித்த இந்த மாபெரும் வீரர்களின் குருத..
₹143 ₹150