Menu
Your Cart

உயிர் பிழை

உயிர் பிழை
-5 %
உயிர் பிழை
கு சிவராமன் (ஆசிரியர்)
₹261
₹275
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
புகுவதே தெரியாமல் உடலில் புகுந்து மனித உயிரை மாய்க்கும் மாய அரக்கன் புற்று. வயது வித்தியாசமின்றி எவருள்ளும் நுழைந்து உயிரணுக்களைத் தின்று மனிதனை மரணிக்கச் செய்கிறது இந்தக் கொடிய நோய். இந்த நோய்க்கு தற்காலிக சிகிச்சை பெற்று உலகில் உயிர் வாழ்வோர் எண்ணிக்கை எண்ணிலடங்கா. இதற்கு நிரந்தரத் தீர்வு என்பது இன்னும் கானல் நீராகவே உள்ளது. மனித இனத்தை அச்சுறுத்தும் உயிர்க்கொல்லி நோய்கள் தொடர்ந்து உருவாகிக்கொண்டே இருந்தாலும், நவீன மருத்துவ விஞ்ஞானத்தால் அவற்றை எதிர்கொண்டு வருகிறது மனித சமூகம். ஆனால் சில நோய்களை வராமல் தடுக்க முடியவில்லை. அவற்றில் புற்றுநோய் மனிதனை விடாமல் சுற்றிக்கொண்டிருக்கிறது. இன்று ஒருவருக்கு புற்று நோய் வருவதற்கு கணக்கில்லா காரணங்கள் இருக்கின்றன. காரணம் நம் வாழ்க்கைச் சூழலும் புறச்சூழலும் எல்லாமே வேகமாகிவிட்டன. இதனால் வருமுன் காத்தல் என்பதை மறந்து, புற்று நோய் வந்த பின்னர் புலம்புகிறோம். புற்று நோய் தாக்குதலில் இருந்து, நம் வாழ்க்கை முறையால் நம்மை எப்படி காப்பாற்றிக் கொள்ள முடியும் என்பதை பல தளங்களிலும் ஆராய்ந்து கூறுகிறார் மருத்துவர் கு.சிவராமன். ‘உண்ணும் ஒவ்வொரு கவளம் உணவிலும், உறிஞ்சும் ஒவ்வொரு சொட்டு தண்ணீரிலும், சுவாசிக்கும் ஒவ்வொரு துளி மூச்சிலும் புற்றுக்காரணி புறப்பட்டிருப்பதை அறிவோம்.‘ என்று எச்சரிக்கும் மருத்துவர் சிவராமன், புற்று நோய் வராமல் தடுத்துக்கொள்வதற்கான வழிமுறைகளையும் இந்த நூலில் விளக்கியுள்ளார். ஆனந்த விகடனில் தொடராக வந்து, பெரும் வரவேற்பைப் பெற்ற உயிர் பிழை, இப்போது நூலாகியிருக்கிறது. நேற்று சிலருக்கு வந்த புற்று நோய் இன்று பலருக்கும் வருகிறது, நாளை யாருக்கும் வரக்கூடாது என்ற உயர்ந்த நோக்கத்துடன் படைக்கப்பட்டிருக்கிறது இந்த நூல்.
Book Details
Book Title உயிர் பிழை (Uyir pizhai)
Author கு சிவராமன்
Publisher விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Edition 1
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

தற்போதைய தலைமுறையினரின் ஓர் அங்கமாக குதித்துவிட்டு ஆட்சி செய்கிறது நவீன உணவுமுறை. சுவைக்காகவும் மணத்துக்காகவும் விரும்பி உண்ணக்கூடிய அவசர அடியில் சமைத்த உணவுகள், 2 மினிட்ஸ் உணவுகள் என சிறுவர்களையும் கவர்ந்திழுத்துக் கொண்டிருக்கிறது. இந்த சூழ்நிலையில் உணவு குறித்த விழிப்புணர்வு மக்களிடையே இப்போது பெர..
₹152 ₹160
தற்போது உருவாகியுள்ள வாசிப்புப் பழக்கம் உடலைக் குறித்தும் சிந்திக்க வைத்துள்ளது. அக,புற நெருக்கடிகளால் சிக்கித் தவிக்கும் மனிதனை அதிலிருந்து விடுதலை செய்யும் அருமருந்தாக தற்போது புத்தகங்கள் இருக்கின்றன. புத்தகங்கள் தற்போது இரண்டு பணிகளைச் செய்ய வேண்டியுள்ளது. ஒன்று, மனதை நெருக்கடியில் இருந்து விடுவி..
₹152 ₹160
நாற்பது வயது என்பது மனித வாழ்வில் முக்கியமான காலகட்டமாகும். நாற்பது வயதைத் தொட்டுவிட்டாலே, சிலருக்கு இதுவரை வாழ்க்கைக்காகப் போராடிய சலிப்பும் ஒருவித ஆயாசமும் அவ்வப்போது தோன்றும். உடல் நலனில் அக்கறை செலுத்தாமல் குடும்பத்துக்காக ஓயாமல் ஓடிய களைப்பும் இந்த வயதில் எட்டிப்பார்க்கும். நமது சுற்றுப்புறச் ச..
₹260
மணமூட்டிகள் என இதுவரை நம்மில் பலரும் நினைத்திருந்த கறிவேப்பிலை, கொத்துமல்லி, தனியா, சீரகம் என பட்டியலில் நீளும் பல உணவுப் பொருட்கள் மணமூட்டி மட்டுமல்ல; ஆங்கில மருந்து குணப்படுத்தாமல் போன பல நோய்களை அதன் வேரிலிருந்து குணப்படுத்தும் சக்தியைக்கொண்ட நலமூட்டும் மூலிகையாகவும் நலம் தரும் நிவாரணியாகவும் நமக..
₹143 ₹150