Menu
Your Cart

வல்லிக்கண்ணன் (இந்திய இலக்கிய சிற்பிகள்)

வல்லிக்கண்ணன் (இந்திய இலக்கிய சிற்பிகள்)
-4 %
வல்லிக்கண்ணன் (இந்திய இலக்கிய சிற்பிகள்)
கழனியூரன் (ஆசிரியர்)
₹48
₹50
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
எழுத்துலகம் என்றைக்குமே மறந்துவிட முடியாத ஒப்பற்ற எழுத்தாளர் வல்லிக்கண்ணன். எளிமையான, ஆனால் வலிமையான படைப்பாளராக விளங்கியவர். என்றைக்கும் எதற்காகவும் விலை போகாதவர். இந்த நூல், அவரது வாழ்க்கைச் சரிதத்தை எடுத்துரைக்கிறது. 1920ல் திசையன்விளையில் பிறந்தார் வல்லிக்கண்ணன். உப்பள வேலையில் ஊர்கள் மாற்றி வாழ்ந்தாலும் இவர் உள்ளத்தில் ஊறிக்கொண்டு வந்ததோ தமிழிலக்கியம். வல்லிக்கண்ணனின் தளிரான இளமைக்காலம் முனிசிபல் நூலகம், தெருவோர மண்ணெண்ணெய் விளக்கு, கிராமபோன் பெட்டி, ஊமைப்படங்கள், சிற்றிதழ்கள், கையெழுத்துப் பிரதிகள் என்று வாழ்க்கைப் போராட்டங்களோடு கடந்த நிலையில், இந்திய சுதந்திர போராட்டங்களை நேரில் கண்டு பாரதியின் பாடல்களால் மனப்பக்குவம் பெற்று, இலக்கிய தளத்திலும் ஆழமாய் தடம் பதித்து வளர்ந்தார். அவற்றின் நகர்வுகளை மிக மிக எளிய எழுத்து நடையில் அழகாகப் படம்பிடித்துப் பதிவு செய்திருக்கிறார் நூலாசிரியர்! ஆரம்ப காலத்தில் புதுமைப்பித்தன், ந.பிச்சமூர்த்தி, கு.ப.ரா., பி.எஸ்.ராமையா. மவுனி போன்ற முன்னோடிகளின் கதைகள், இலக்கிய சர்ச்சைகள் ஆகியவற்றில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு, தாமும் சிறுகதைகள் எழுதத் துவங்கினார். தானே தனக்கென்று அழகாக வல்லிக்கண்ணன் என்று புனைப்பெயர் சூட்டிக்கொண்டு, பல்வேறு இதழ்களில் எழுதியதோடு, கோரநாதன் என்ற புனைப்பெயரில் கட்டுரைகளும் எழுதினார். காலப்போக்கில், ‘கலைமகள்’ இதழில் ந.பிச்சமூர்த்தி, சி.சு.செல்லப்பா, க.நா.சு., ந.சிதம்பர சுப்பிரமணியன் ஆகியோரின் கதைகளிடையே, வல்லிக்கண்ணனின் கதைகளும் வெளியானபோது அவரது புகழ்க்கொடி இன்னும் உயரத்தில் பறந்தது. பிந்தைய தலைமுறை எழுத்தாளர்களும், வாசகர்களும் இவரை பிரபல மணிக்கொடி எழுத்தாளர்கள் வரிசையில் இணைத்தே நினைவு கூர்கின்றனர். இலக்கிய உலகில், ‘சிற்றிதழ்களின் நண்பன்’ என்றும், ‘நவீன இலக்கிய ரிஷி’ என்றும் போற்றப்பட்ட வல்லிக்கண்ணன், இலக்கியச் சிற்பி ஜெயகாந்தனால் ‘இயல்பில் இவர் பித்தகோரஸ்’ என்றும் குறிப்பிடப்பட்டவர். எழுத்தையே தொழிலாக்கிக் கொள்ள முனையும் எவரும் தவறாமல் படிக்க வேண்டிய நூல் இது. - கவிஞர் பிரபாகர பாபு
Book Details
Book Title வல்லிக்கண்ணன் (இந்திய இலக்கிய சிற்பிகள்) (Vallikkannan)
Author கழனியூரன் (Kazhaniyuran)
Publisher சாகித்திய அகாதெமி (Sahitya Akademi)
Pages 0
Year 2010
Category Biography | வாழ்க்கை வரலாறு, Literature | இலக்கியம்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

தாத்தா பாட்டி சொன்ன கதைகள்இக்கதைகள் நமது பண்பாட்டின் சின்னங்களாக நமது மரபின் தாய் வேர்களாக வேரடி மண்ணாகத் திகழ்கின்றன.இக்கதைகள் உங்களை உங்களின் கிராமத்திற்கு அழைத்துச் செல்லும். இக்கதைகளைப் படிக்கும்போது உங்களுக்கு,உங்கள் தாத்தாக்களின், பாட்டிமார்களின் ஞாபகம் வரும்...
₹86 ₹90
கி.ரா என்றொரு கீதாரி (கரிசல் இலக்கியத்தின் முன்னத்தி ஏர்):இந்த நூலில் எழுத்தாளர்கள், ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், வண்ணநிலவன், நாஞ்சில்நாடன், கவிக்கோ. அப்துல் ரகுமான், ஜோ டி’குருஸ், கே. எஸ்.இராதாகிருஷ்ணன், தீப.நடராஜன், தமிழச்சி தங்கபாண்டியன், பா.செயப்பிரகாசம், க.பஞ்சாங்கம், அரங்க. மு.முருகையன், முருகப..
₹152 ₹160
கழனியூரன் களப்பணி செய்து சேகரித்துத் தந்திருக்கிற இக்கதைகள் நம் பண்பாட்டுப் பொக்கிஷமாகவும், கலாச்சாரப் புதையலாகவும் மானுடவியல் சார்ந்த தரவுகளாகவும் திகழ்கின்றன. அதே சமயம் வாசிப்பிற்கும் சுவாரஸ்யமான அனுபவத்தைத் தருகின்றன... - கி.ராஜநாராயணன்..
₹95 ₹100