Menu
Your Cart

வங்கத்துப் பேய்க் கதைகள்

வங்கத்துப் பேய்க் கதைகள்
-5 %
வங்கத்துப் பேய்க் கதைகள்
புவனா நடராஜன் (ஆசிரியர்)
₹253
₹266
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
மானுடவியலாளர்கள்‌ மனிதனின்‌ அதீத கற்பனையும்‌, மிகையுணர்வும்‌, வம்புப்பேச்சும்தான்‌ மொழிகள்‌ தோன்றக்‌ காரணம்‌ என்கிறார்கள்‌. அந்த வகையில்‌ உலகின்‌ மற்ற செழுமையான மொழிகளைப்‌ போல்‌, வங்க மொழியிலும்‌ பேய்க்‌ கதைகளுக்கென்று ஒரு பிரத்யேக இடம்‌ உள்ளது. அது அவர்களின்‌ வாழ்வியலோடு இன்றும்‌ பின்னிப்‌ பிணைந்திருக்கிறது. மந்திரம்‌, மாந்திரீகம்‌ போன்ற சடங்குகளில்‌ அபார நம்பிக்கைகொண்ட இவர்கள்‌, மனிதர்கள்‌ எப்படி இறந்தார்கள்‌ என்பதைப்‌ பொறுத்து “பெட்னி;,'ஷக்சுன்னி', 'பேஷோ,, 'பென்சப்பேச்சி', 'மெச்சோ,, அடோஷி', பேகோ”, “மம்தோ,“கெச்சோ', 'ப்ரஹ்ம்மோதைத்தியா', கொந்தொகொடா;, “கானாபுலோ, “போபா”,'ஷீகோல்‌ புரி', 'நிஷி', “குத்ரோ போங்கா', 'ரக்கோஷ்‌', 'கக்கோஷ்‌' என்றெல்லாம்‌ பேய்களை ரகம்‌ பிரிக்கிறார்கள்‌. ஒவ்வொரு பேய்க்கும்‌ ஒரு மயிர்க்கூச்செரியும்‌ நாட்டுப்புறக்கதை உண்டு. அவற்றை பின்னணியாகக்‌ கொண்டு வங்க தேசம்‌ மற்றும்‌ மேற்கு வங்காள பின்புலத்திலிருந்து வந்த மஹா ஸ்வேதா தேவி, 'விபூதிபூஷன்‌ பந்தியோபாத்யாய்‌' உட்பட 17 முன்னணி எழுத்தாளர்களால்‌ அத்திப்பூத்தார்போல்‌ எழுதப்பட்ட சுவாரஸ்யமான பேய்க்கதைகளை தேர்ந்தெடுத்து புவனா நடராஜன்‌ தமிழில்‌ மொழி பெயர்த்திருக்கிறார்‌. இவர்‌ கொல்கத்தாவில்‌ 43 ஆண்டுகள்‌ வசித்தவர்‌. வங்காலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்புக்கான 'சாஹித்ய அகாதமி: விருது பெற்றவர்‌. இந்தத்‌ தொகுப்பில்‌ இடம்பெற்றிருக்கும்‌ பேய்க்கதைகளின்‌ அமானுஷ்ய அம்சம்‌ திகில்‌ கிளப்புவதாக, வன்மம்‌ தோய்ந்தவையாக இல்லாமல்‌ சமூக ஏற்றத்தாழ்வுகளைப்‌ பகடி செய்பவையாகவும்‌, அறத்தைப்‌ போதிப்பவையாகவுமே அதிகம்‌ இருக்கும்‌. ஆகவே, ஒருவகைப்‌ பேய்‌ ஒரு கதையில்‌ வருகிறது என்றால்‌ அது அவர்களது வழக்கொழிந்த மரபின்‌ நீட்சியாக, கடந்த கால நட்பு, காதல்‌, துரோகம்‌ அல்லது நன்றியின்‌ சாட்சியாகத்தான்‌ வருகின்றது என்று அர்த்தம்‌.
Book Details
Book Title வங்கத்துப் பேய்க் கதைகள் (vangaththu-pei-kathaigal)
Author புவனா நடராஜன் (Bhuvana Natarajan)
ISBN 978-93-87369-25-2
Publisher சிக்ஸ்த்சென்ஸ் (Sixthsense Publications)
Pages 240
Published On Mar 2021
Year 2021
Edition 1
Format Paper Back
Category Short Stories | சிறுகதைகள், Horror | பேய்க்கதை

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

பிள்ளைப் பிராயத்துக் காதலுக்குத்தான் எத்தனை மகத்தான சக்தி. வாழ்க்கை பூராவும் நினைவில் மலந்துகொண்டே இருக்கும். அதிலும் நிறைவேறாத காதல் ஓர் இலக்கியமாகவே அமைந்துவிடுகிறது. தேவதாஸ் பார்வதி காதலும் அத்தகையதுதான். பல இந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்ட 'தேவதாஸ்' திரைப்படமாகவும் பல மொழிகளில் வந்திருக்கிற..
₹190 ₹200
மஹாஸ்வேதா தேவி கதைகள்காடுகளையே தங்களின் உலகமாகக் கொண்ட ஆதிவாசிகளின் பிரச்சனைகளைப் பேசும் மஹாஸ்வேதா தேவியின் எழுத்துக்கள் நம்மை மனம்பதறச் செய்பவை. ‘காடு கொன்று நாடாக்கிய’ சமூகமும் அரசும் இவை எதற்கும் பொறுப்பேற்காது கண்ணை மூடிநிற்கும் நிலையில் ஆதிவாசிகளின் கொதிநிலையை பிரதிபலிப்பை அவரது எழுத்துக்கள். வ..
₹285 ₹300
கடைசி நமஸ்காரம் எனும் இந்நூல் சுயசரிதநடை முறையில் எழுதப்பட்டு ஒரு எழுத்தாளரின் ஒற்றைச் சாளரம் வழியே வாழ்க்கையின் முழுப் பரிமாணத்தையும் உட்கொண்டு, வாழ்வின் நிறைகள் மற்றும் அவலங்களை தத்ரூபமாகச் சித்தரிக்கும் மகத்தான நாவல் இது. ஒரு வாராந்திரத் தொடராக வந்த இந்நூல் 1972-ஆம் ஆண்டு வங்க மொழிக்கான சாகித்..
₹394 ₹415