Menu
Your Cart

வருமானத்துக்கு வழி சொல்லும் வல்லுநர்கள்

வருமானத்துக்கு வழி சொல்லும் வல்லுநர்கள்
-5 %
வருமானத்துக்கு வழி சொல்லும் வல்லுநர்கள்
₹100
₹105
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
‘விதைத்துவிட்டு நல்ல விளைச்சல் கிடைக்கும் எனக் காத்திருக்கும் விவசாயிகளுக்கு பல நேரங்களில் ஏமாற்றமே மிஞ்சுகிறது. ஏனெனில், விவசாயமும் காலத்துக்கேற்ப மாறி வருகிறது. அத்தகைய மாற்றங்களுக்கு ஏற்றவாறு பயிரிட விவசாயிகளுக்குப் பயன்தரும் பல ஆலோசனைகளைத் தருகிறது இந்த நூல். விவசாயம் தொடங்கி, கால்நடைகள் பராமரிப்பு, சுற்றுச்சூழல், மரம் வளர்ப்பு, பண்ணைகளைப் பராமரித்தல் என அனைத்து வகையினருக்கும் விரிவான விளக்கங்களை அள்ளித் தரும் நூல் இது. எல்லாவித சந்தேகங்களுக்கும் அந்தந்தத் துறையில் சிறந்துவிளங்கும் வல்லுநர்கள் விளக்கமளித்திருப்பதே இந்த நூலின் சிறப்பம்சம். பசுமை விகடனில் ‘நீங்கள் கேட்டவை’ பகுதியில் வெளிவந்த வாசகர்களின் கேள்விகளும் அதற்கான விளக்கங்களும், ஏற்கெனவே மூன்று தொகுதிகளாக வெளிவந்து மகத்தான வரவேற்பைப் பெற்றன. நான்காம் தொகுதியாக வெளிவந்திருக்கும் இந்த நூலில், ‘மண் புழு கரைசலால் மகத்தான மகசூல் கிடைக்குமா? காளான் வளர்ப்பால் கைநிறைய பணம் கிடைக்குமா? எந்தெந்த மரங்களை அரசாங்கத்தின் அனுமதியோடு வெட்டி விற்பனை செய்யமுடியும்? நண்டு வளர்க்க பயிற்சி உண்டா?’ என்பன போன்ற கேள்விகளுக்கு அரிய, உரிய தகவல்களை அளிப்பதோடு நின்றுவிடாமல், அதற்குரிய வல்லுநர்களின் முகவரி, தொலைபேசி எண் ஆகியவை களைக் கொண்ட அரியதொரு பெட்டகமாய்த் திகழ்கிறது இந்நூல். இதை பசுமை விகடன் இதழின் பொறுப்பாசிரியர் பொன். செந்தில்குமார் தொகுத்துள்ளார். விவசாயம், விவசாயம் சார்ந்த துறையினருக்கு உற்ற நண்பனாக, ஆசானாக, இந்த நூல் வழிகாட்டும் என்பது மிகையல்ல!
Book Details
Book Title வருமானத்துக்கு வழி சொல்லும் வல்லுநர்கள் (Varumanathu vazi sollum )
Author பொன்.செந்தில்குமார் (Pon.Senthilkumar)
Publisher விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year 2014
Edition 1
Format Paper Back
Category Essay | கட்டுரை, Agriculture | வேளாண்மை

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

நஞ்சையும் புஞ்சையும் செழித்து விளைந்த மண்ணில் இன்றைக்கு கான்கிரீட் விளைச்சலும், ரியல் எஸ்டேட் வியாபாரமும்! விவசாயப் பரப்புகள் வெகு வேகமாகக் குறைந்துவரும் இன்றையக் காலகட்டத்தில் விவசாய ஜீவன்களுக்குக் கைகொடுக்கும் விதமாக அரசு நிறைய திட்டங்களை அறிவித்து வருகிறது. செஞ்சோற்றுக் கடன் தீர்க்கும் கடமையாக இத..
₹162 ₹170