Menu
Your Cart

பழம் பெருமை பேசும்

பழம் பெருமை பேசும்
-5 %
பழம் பெருமை பேசும்
₹138
₹145
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
இயற்கை அளித்த வரங்கள் அனைத்துமே மனித குல நன்மைக்குத்தான். அந்த வகையில் இயற்கை நமக்கு அளித்த கொடை கனி வகைகள். மரங்கள், பூக்கள், பழங்கள் இல்லாத மனித வாழ்வை நினைத்துப் பார்க்க முடியுமா? இவை இல்லாவிட்டால் உயிரினங்கள் இல்லை. ஆம்! மரம் காற்றில் கார்பன் டை ஆக்ஸைடை எடுத்துக் கொண்டு நமக்காக ஆக்ஸிஜனை வெளியே விடுகிறது. மனிதகுல ஆரோக்கியத்திற்காக கனிகளை நமக்குத் தருகிறது. இயற்கை தந்த கனிகள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு சுவை. ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு தன்மை. ஒவ்வொன்றிலும் அற்புத சக்தி ஒளிந்துள்ளது. சிறிய கனியான நெல்லிக்கனி நமக்கு சுறுசுறுப்பைத் தருகிறது. அற்புத ஆப்பிள் வைட்டமின்களை அள்ளித் தருகிறது. தித்திக்கும் அத்திப்பழம், ரத்தத்தை சுத்திகரித்து பெரிய நோய்களைப் போக்குகிறது. கனிகளில் ஒளிந்திருக்கும் ரகசியங்கள் - புதையல்கள் போன்றவை. எத்தகைய சித்திகளையும் அள்ளித்தரும் சக்தி கனிகளுக்கு உண்டு. இதனைப் ‘பழம் பெருமை பேசுவோம்’ என்ற தலைப்பில் நூலாக்கித் தந்துள்ளார் நூலாசிரியர். கரியமேனி கொண்ட சிறிய நாவல் பழம்தான், சிறுநீரகத்தில் உள்ள கற்களை நீக்கவல்லது. கந்தக பூமியில் விளையும் முந்திரிப்பழம் நீரிழிவு நோயைப் போக்கும். இதுபோன்ற எத்தனையோ பழங்களின் வரலாற்றையும், அவை உண்பதால் குணமாகும் நோய்களையும், பழங்கள் நமக்குத் தரும் சத்துக்களையும், இலக்கியங்களில் பழங்களின் தொன்மையையும், பழங்களை வைத்து சத்துள்ள உணவு வகைகளை சமைப்பது குறித்தும், பழங்கள் குறித்த பழமொழிகளையும் அடுக்கியுள்ளார் நூலாசிரியர். கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பது முதுமொழி. ஆனால், ‘பழங்கள் இல்லாத வீடு பாழடைந்த வீடு’ என்பது பழங்களைப் பற்றிய புதுமொழி. பழங்களைப் பற்றி தெரிந்து, நம்மை காத்துக்கொள்ள வாருங்கள்... ‘பழம்’ பெருமை பேசுவோம்.
Book Details
Book Title பழம் பெருமை பேசும் (pazham perumai)
Author நெய்வேலி பாரதிக்குமார்
Publisher விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Edition 1
Format Paper Back
Category சமையல் / உணவுமுறை

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

தொடர்வண்டியில் எல்லா கவலைகளையும் மறந்து பயணித்திருப்போம் ஆனால் அதனை இயக்குபவர்களுக்கு என்று நாமறியாத வலிகள் பல இருக்கும், அந்த வலிகளைப் பதிவு செய்துள்ளது இதிலுள்ள உயிரின் ஒலி என்னும் சிறுகதை. அது போலவே திரைக்குப் பின்னே உழைக்கும் ஒலிக் கலைஞர்கள், இந்தியாவின் சாலை எங்கும் பயணிக்கும் சரக்குந்து ஓட்டு..
₹214 ₹225
தரையில்லாப் பறவை எனப்படும் பார்ன் ஸ்வால்லோ தன் இனப்பெருக்கத்துக்காக தென் அமெரிக்காவிலிருந்து 8300 கிமீ தூரம் கடல் பரப்பின் மீதே பறந்து சென்று வட அமெரிக்காவை அடைகிறது. பறக்கத் தொடங்கும் முன் தன் அலகில் ஒரு குச்சியை எடுத்துக்கொள்ளும் அந்தச் சிறு குச்சிதான் கடல் பரப்பில் ஓய்வெடுக்கவும் நீரருந்தவும் உடல..
₹238 ₹250