Menu
Your Cart

விகடன் நோட்ஸ் - சமூக அறிவியல்

விகடன் நோட்ஸ் - சமூக அறிவியல்
-5 % Available
விகடன் நோட்ஸ் - சமூக அறிவியல்
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
வணக்கம்! அன்பார்ந்த மாணவச் செல்வங்களே, விகடன் நோட்ஸில் உள்ள பல்வேறு சிறப்பம்சங்கள்: -ஒரு மதிப்பெண் வினாக்களின் விடைகள் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் நேரடியாகத் தரப்பட்டுள்ளன. - இரண்டு மதிப்பெண் வினாக்கள் சிறப்பான முறையில் பகுதி பகுதியாக எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் தரப்பட்டுள்ளன. - ஐந்து மதிப்பெண் வினாக்களும் எளிய தலைப்புகளுடன் பகுதி பகுதியாகப் பிரித்துத் தரப்பட்டுள்ளன. - வேறுபடுத்துக, தலைப்பு வினாக்கள் எளிதில் நினைவில் வைத்திருக்கும் வகையில் சிறிய பகுதிகளாக அளிக்கப்பட்டுள்ளன. - பாடப்பகுதி வினாக்கள் ஒவ்வொன்றும் எத்தனை முறை அரசுத் தேர்வுகளில் இடம்பெற்றுள்ளன என்பது சிறப்பாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. - பாடப்பகுதி வினாக்கள் தவிர இதர அரசுத் தேர்வில் எதிர்பார்க்கக் கூடிய அளவிலான கூடுதல் வினாக்கள் ஒவ்வொரு பாடத்தின் பின்புறமும் இணைக்கப்பட்டுள்ளன. - காலக்கோட்டு வினா சிறப்பாக மூன்றே வினாவாக அரசுத் தேர்வுக்கேற்ப சிறப்பாக அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வுகளை மட்டும் படித்தால் போதுமானது. மேலும் கூடுதலான முக்கிய ஆண்டுகள் இணைக்கப்பட்டுள்ளது. - வரைபட வினாக்களைப் பொறுத்தவரையில் வரலாற்றுப் பகுதிக்கு நான்கு வரைபடங்களும், புவியியல் பகுதிக்கு 13 வரைபடங்களும் அளிக்கப்பட்டுள்ளன. இவை எளிதில் நினைவுகூரத்தக்க வகையில் மிகவும் எளிமையாகக் கொடுக்கப்பட்டுள்ளன. - 2012 மார்ச் முதல் 2014 அக்டோபர் வரை ஒன்பது அரசுத் தேர்வு வினாக்களில் கேட்கப்பட்டுள்ள வினாக்கள் அலகு வாரியாகவும், பாட வாரியாகவும், தலைப்பு வாரியாகவும் கொடுக்கப்பட்டுள்ளன. - மாணவர்களின் பயிற்சிக்காக மூன்று அரசு வினாத்தாள்கள் இணைக்கப்பட்டுள்ளன. - நிறைவாக ‘«’ குறியிட்ட வினாக்களை மட்டும் படித்தால், வரைபடம், காலக்கோட்டு வரைபடம் நீங்கலாக உள்ள 80 மதிப்பெண்களில் 75 மதிப்பெண்களுக்கு மேல் எடுக்க முடியும். அனைத்து ஒரு மதிப்பெண் வினாக்களையும் கட்டாயம் படிக்க வேண்டும். மாணவர்கள் இப்புத்தகத்தின் மூலம் சிறப்பாகப் பயின்று வெற்றிபெற மனதார வாழ்த்துகிறோம். நன்றி.
Book Details
Book Title விகடன் நோட்ஸ் - சமூக அறிவியல் (Vikatan Notes - Samooga Ariviyal)
Publisher விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author