Menu
Your Cart

விந்தைக் கலைஞனின் உருவச் சித்திரம்

விந்தைக் கலைஞனின் உருவச் சித்திரம்
விந்தைக் கலைஞனின் உருவச் சித்திரம்
சி.மோகன் (ஆசிரியர்)
₹175
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.

அவரைப் பற்றி நினைக்கும்போதெல்லாம் ரில்கேயின் வரிகள் ஞாபகத்துக்கு வரத் தவறுவதில்லை:

ஒரு ஜீவன் ஓடற்று இருக்குமெனில்

வலி எளிதில் தாக்கும்

ஒளியால் வதையுறும்

ஒவ்வொரு சப்தமும் நிலை குலையச் செய்யும்.

ராமன் ஒரு ஓடற்ற ஜீவன். உலக வாழ்வில் அவர் நடமாட்டம் அப்படித்தானிருந்தது. அவருடைய படைப்பு வெளியில்தான், அவருடைய அந்த விந்தை உலகில்தான், அவர் சகஜமாக வாழ்ந்துகொண்டிருந்தார். அவருடைய கனவுலக சஞ்சாரத்திலும் அதன் அபார கலை வெளிப்பாட்டிலும்தான் அவரின் உயிர் தரித்திருந்தது...

அவர் வான்வெளியில் மேகங்களின் இளவரசனாகத் திகழ்ந்தார். ஏளனம் செய்யும் மக்கள் கூட்டத்தால் அவர் நிலத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். அவருடைய பிரமாண்டமான சிறகுகள் அவர் வானுலகில் சஞ்சரிக்கத் துணையாக இருந்தன. அதேசமயம் அவரைத் தரையில் சுபாவமாக நடக்க விடாமல் அவை தடுத்துக்கொண்டிருந்தன. ராமனைப் பற்றிப் பணிக்கர் ஓரிரு முறை சொன்னதுதான் இப்போது ஞாபகத்துக்கு வருகிறது: 'நாலு காசுக்காக அவன் கால்கள் பூமியில் தரித்திருக்கவில்லை. அதனால்தான் அவனால் நிலவைக் கைப்பற்ற முடிந்தது.

(நாவலிலிருந்து)

Book Details
Book Title விந்தைக் கலைஞனின் உருவச் சித்திரம் (Vinthaik Kalainjanin Uruvach Chiththiram)
Author சி.மோகன் (C. Mohan)
ISBN 9789347979606
Publisher சால்ட் பதிப்பகம் (Salt publications)
Pages 109
Year 2025
Edition 1
Format Paperback
Category Novel | நாவல், 2026 New Releases

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha