Menu
Your Cart

பாரதிதாசன் யாப்பியல்

பாரதிதாசன் யாப்பியல்
-100 % Out Of Stock
பாரதிதாசன் யாப்பியல்
ய.மணிகண்டன் (ஆசிரியர்)
₹0
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
இருபதாம் நூற்றாண்டில் மகாகவி பாரதியாரை அடுத்த பெருங்கவிஞராகத் திகழ்பவர் பாரதிதாசன். கருத்து நிலைகளால் 'புரட்சிக்கவிஞர்' என அழைக்கப்பெறும் அவர் கவிதை வடிவங்களின் யாப்பு வடிவங்களின்& ஆட்சித் திறத்தால் 'பாவேந்தர்' எனப் போற்றப்பெறுகின்றார். சங்க இலக்கியம், பக்தி இலக்கியம், பிரபந்த இலக்கியம் முதலியவற்றிலெல்லாம் பயிற்சிமிக்க பாரதிதாசன் காலந்தோறும் தமிழில் தோன்றிய இலக்கியங்களில் பயிலும் யாப்பு வடிவங்கள் பெரும்பாலானவற்றில் தமது படைப்புகளை எழுதியுள்ளார். பல புதிய வடிவங்களையும் யாப்பு நெறிநின்று படைத்துள்ளார். யாப்பின் கூறாகிய தொடைநலன்களின் செழுமையையும் தம் படைப்பின் வளத்திற்குப் பயன்படுத்தியுள்ளார். பா, பாவினம், இனவினம் எனத் தமிழ் யாப்பு வடிவங்கள் பலவற்றிலும் பாரதிதாசன் காட்டிய ஆளுமையை, அவர்தம் யாப்பியல் தனித்திறனை இந்நூல் விரிவாக ஆராய்ந்து விளக்குகின்றது. பாரதிதாசன் படைப்புகள் அனைத்தையும் களனாகக் கொண்டுள்ள இந்த யாப்பியல் ஆய்வு நூல் தமிழ் இலக்கிய வரலாற்றில் தமிழ்க் கவிதை வரலாற்றில் தமிழ் யாப்பியல்& வரலாற்றில்& பாரதிதாசனின் தனித்த ஆளுமையை, இடத்தை இனங்கண்டு காட்டுகின்றது. பாரதிதாசன் யாப்பியலை மட்டுமன்றித் தமிழ் யாப்பு வடிவங்களின் இலக்கண அமைப்பினையும், தனித்தன்மையையும் அறிந்துகொள்ளவும் இந்நூல் கையேடாக விளங்குகின்றது.
Book Details
Book Title பாரதிதாசன் யாப்பியல் (Bharathidasan Yaappiyal)
Author ய.மணிகண்டன் (Ya.Manikandan)
Publisher சந்தியா பதிப்பகம் (santhiya pathipagam)
Pages 160

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் யானையால் தாக்கப்பட்டது, பாரதியின் இறுதிக்கால வாழ்வில் முக்கிய நிகழ்வாகும். அச்சம்பவத்தின் தாக்கத்தில் ‘கோவில் யானை’ எனும் நாடகத்தைப் பாரதி எழுதினார். பாரதி நூலெதிலும் இடம்பெறாத இந்நாடகத்தைக் கண்டெடுத்து வழங்கும் இந்நூல் பாரதியியலில் புதிய ஒளியைப் பாய்ச்சு..
₹105 ₹110
தமிழ் நவீனத்துவத்தின் அடையாளமாகக் கருதப்படும் ‘மணிக் கொடி’க்கும் திராவிட இயக்கக் கவிஞராகக் கொண்டாடப்படும் பாரதி தாசனுக்குமான உறவை ஆராயும் நூல் இது. பாரதிதாசனையும் அவருடைய கவிதைகளையும் மணிக்கொடி மரபினரான புதுமைப்பித்தன், கு.ப.ரா., ந. பிச்சமூர்த்தி, க.நா.சு., சி.சு. செல்லப்பா முதலானோர் எவ்வாறு எதி..
₹266 ₹280
பாரதியியல்: கவனம்பெறாத உண்மைகள்பாரதியியலில் துலக்கம் பெற வேண்டிய சில களங்களில் இந்நூல் புதிய ஒளியைப் பாய்ச்சுகின்றது; அரிய ஆதாரங்களை முதன்முறையாக வெளிப்படுத்துகின்றது.பாரதியியல் ஆய்வு வரலாற்றிற்குப் புதிய பரிமாணத்தை வழங்குவதாக இந்நூல் அமைகின்றது...
₹133 ₹140