- Edition: 1
- Year: 2024
- ISBN: 9789348722577
- Page: 218
- Format: Paperback
- Language: Tamil
- Publisher: யாவரும் பப்ளிஷர்ஸ்
மொழிபெயர்ப்பு, விமர்சனம் ஆகிய இரு துறைகளில் க.நா.சுவின் பங்களிப்புகள் அசலானவை, அவரது தேர்வுகள் முதன்மையானவை, கல்லூரியில் ஆங்கிலம் பயின்றவர். ஆங்கிலத்தில் எழுத்துப் பணியைத் தொடங்கியவர். இந்த இரு பின்புலங்களிலிருந்து பார்த்தால் அவருக்கு அறிமுகமாகியிருந்திருக்கும் நாவல்களைத் தமிழாக்கத்துக்காகக் கணக்கிலெடுத்துக்கொள்ளவே இல்லை. மொழிபெயர்ப்புகளுக்கான படைப்புகளை ஒரு கண்டுபிடிப்பாகவே செய்திருக்கிறார். ஆங்கிலத்தில் பிரபலமடைந்த நாவல்களை ஒதுக்கிவிட்டு ஐரோப்பிய மொழி நாவல்களையே எடுத்துக்கொண்டிருக்கிறார். நிலவளம் (நட் ஹாம்சன்), மதகுரு, தேவமலர் (செல்மா லாகர்லாவ்), அன்பு வழி (பேர்லாகர் க்விஸ்ட்), விலங்குப் பண்ணை, 1984 (ஜார்ஜ் ஆர்வெல்), குருதிப் பூ (காதரின் ஆன் போர்ட்டர்) என்று அந்த நாளையக் கல்லூரி ஆங்கிலப் பேராசிரியர்கள்கூட அறிந்திராத படைப்புகளை மொழியாக்கம் செய்தார்.
சமகால வெகுஜன இலக்கியவாதிகள் சரத் சந்திரர், காண்டேகர் என்று சிலாகித்துத் தமிழாக்கம் செய்துகொண்டிருந்தபோது க.நா.சு. அறிமுகப்படுத்திய அயல்மொழிப் படைப்புகள் அன்றைய தீவிர இலக்கியத்தைப் பாதித்தன. சற்றுக் கவனமாகப் பார்த்தால் அந்தப் பாதிப்பின் தொடர்ச்சியை இன்றும் காணலாம்.
சுகுமாரன்
| Book Details | |
| Book Title | சிரமமான காரியம் (Chiramamaana Kaariyam) |
| Author | க.நா.சுப்ரமண்யம் (Ka.Na.Subramanyam) |
| Editor | ஸ்ரீநிவாச கோபாலன் (Sreenivaacha Koapaalan) |
| ISBN | 9789348722577 |
| Publisher | யாவரும் பப்ளிஷர்ஸ் (Yaavarum Publishers) |
| Pages | 218 |
| Year | 2024 |
| Edition | 1 |
| Format | Paperback |
| Category | Essay | கட்டுரை, 2024 New Releases |