- Edition: 1
- Year: 2026
- Format: Paperback
- Language: Tamil
- Publisher: மின்னங்காடி பதிப்பகம்
குறுந்தொகை குறுந்தொகைகள் என்ற சிறுகதைத் தொகுப்பு பல விதங்களில் முக்கியத்துவம் வாய்ந்தது. இன்றைய இளைஞர்கள் ஐடி நிறுவனத்திலும் பல்வேறு கார்ப்பரேட் நிறுவனத்திலும் பரபரப்பாகப் பணிபுரிகிறார்கள். அவர்கள் உலகம் வேறாக இருக்கிறது. பவள் எழுதி இருக்கும் இந்த சிறுகதை தொகுப்பு நம்பிக்கை தரும் தொகுப்பு. அவர்கள் உலகம் வேறாக இருந்தாலும் அவர்களுடைய வேர்கள் இந்த மண்ணில் தான் இருக்கின்றன என்பதை சொல்லுகின்றன.
சாப்ட்வேர் உலகத்தையும் சங்க இலக்கியத்தையும் சேர்த்து பார்த்து ரசிக்க முடிகிற கதைகள்.
காலம் மாறிவிட்டாலும் உணர்வுகள் மாறவில்லை என்பதை சுட்டிக்காட்டும் கதைகள். சாப்ட்வேர் உலகத்தில் சங்க இலக்கியம் இணைய கூடாதா என்ன?
சங்க இலக்கிய வார்த்தைகள் நமக்கு தெரியாமல் இருக்கலாம் ஆனால் வாழ்க்கை அதுவாகத்தான் இருக்கிறது என்பதை இந்தக் கதைகள் உரக்கச் சொல்கின்றன.
அவர்கள் உரையாடல்கள் வேறாக இருக்கின்றன... அவர்கள் பழக்க வழக்கங்கள் வேறாக இருக்கின்றன. அவர்கள் லட்சியங்கள் கூட சங்க காலத்திற்குப் பொருந்தாதவை தான். ஆனால் உணர்வுகள்?
மிக மிக அழகாக அதை ஆழமாகப் பதிவு செய்து இருக்கிறார் பவள் அவர்கள்.
அவருக்கு என் அன்பான வாழ்த்துகள்.
இன்றைய இளைஞர் உலகம் சங்க இலக்கியத்துக்கு பயணமாக தயாராகுங்கள். உங்கள் மொழியில் உங்களை கைப்பிடித்து அழைத்துச் செல்கிறார் பவள்.
| Book Details | |
| Book Title | யாயும் ஞாயும் (Yaayum Njaayum) |
| Author | பவள் (Paval) |
| Publisher | மின்னங்காடி பதிப்பகம் (Minnangadi Pathippakam) |
| Year | 2026 |
| Edition | 1 |
| Format | Paperback |
| Category | Short Stories | சிறுகதைகள், 2026 New Releases |